பெரியாரை வணங்குகிறேன்.. அண்ணாமலை போட்ட ஒரு பதிவு.. கமெண்டில் கொந்தளிக்கும் ஆதரவாளர்கள்!

  • சென்னை: சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக, தனது வாழ்க்கையின் பெரும்பகுதியைச் செலவிட்ட, பெரியாரின் பொதுவாழ்வை நினைவு கூர்ந்து வணங்குவதாக வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார். அண்ணாமலையின் இந்த பதிவுக்கு அவரின் ஆதரவாளர்களே எதிர்ப்பு தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

    Advertisement

    தந்தை பெரியாரின் 148வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தவெக, திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட அத்தனை கட்சிகளும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். திமுக சார்பாக சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த நிலையில் வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

    Advertisement

    அதில் அண்ணாமலை, சமூக சீர்திருத்தப் போராட்டங்களில் முக்கியப் பங்காற்றி, தமிழகத்தின் சமூக மற்றும் அரசியல் வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பெரியார் அவர்களின் பிறந்த தினம் இன்று. சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக, தனது வாழ்க்கையின் பெரும்பகுதியைச் செலவிட்ட, பெரியார் அவர்களின் பொதுவாழ்வை நினைவு கூர்ந்து வணங்குகிறோம் என்று பதிவிட்டுள்ளார்.

    பாஜக மற்றும் பெரியார் கொள்கைகள் நேர் எதிரானவை. பாஜகவில் இருந்த அண்ணாமலை திடீரென பெரியாரை வணங்குகிறேன் என்று பதிவிட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதிலும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக பெரியார் போராடியதை அண்ணாமலை பேசி இருப்பது அவரின் ஆதரவாளர்களையே கொந்தளிக்க வைத்துள்ளது.

    Advertisement

    இதனால் அண்ணாமலையின் பதவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரின் ஆதரவாளர்களே கமெண்ட் செய்து வருகின்றனர். பெரியாரை ஒருநாளும் ஏற்க முடிடாது என்றும், தயவு செய்து அவரை கொள்கைத் தலைவர் என்று சொல்லிவிடாதீர்கள் என்றும் பதிவிட்டு வருகிறார்கள். ஒரு சிலர், அண்ணாமலை திராவிட அரசியல் பக்கம் செல்ல முடிவு செய்துவிட்டார் என்று சந்தேகம் கிளப்பி வருகின்றனர்.

    2 மாதங்களுக்கு பின் பெரியாரின் அரசியலை ஏற்பீர்களா என்று அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பிய போது, பெரியாரின் அத்தனை கொள்கைகளையும் ஏற்க முடியாது. ஆனால் சமூகநீதிக்காகவும், ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகவும், பெண் முன்னேற்றத்திற்காகவும் பெரியார் போராடியவர். அவரின் கருத்துக்கள் மிக முக்கியமானவை என்று பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Annamalai: Annamalai Praises Periyar Legacy Against Social Inequalities, Faces Backlash From Own Supporters