அண்ணாமலை போடுவது மாரீச மான் வேடம்.. ஆர்எஸ்எஸ்-ன் 2,501 அமைப்பு அது.. சண்முகம் ஒரே போடு!

  • சென்னை: பாஜக தமிழ்நாட்டில் எடுபடாததால், பெயரை மாற்றி வியாபாரம் செய்ய மோடி - அமித்ஷா ஆசியுடன் அண்ணாமலை முயற்சிப்பதாக சிபிஎம் சண்முகம் விமர்சித்துள்ளார். ஆர்எஸ்எஸ் ஏற்கனவே 2,500 அமைப்புகளை வழிநடத்துவதாக கூறிய சண்முகம், அண்ணாமலையின் அமைப்பு 2,501வது அமைப்பு என்று விமர்சித்துள்ளார்.

    Advertisement

    பாஜகவில் இருந்து விலகியுள்ள அண்ணாமலை, புதிய இயக்கம் ஒன்றை தொடங்கி இருக்கிறார். அண்ணாமலை தொடங்கியுள்ள புதிய இயக்கத்தில் சுமார் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர். 2020ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த அண்ணாமலை, அடுத்த ஆண்டிலேயே தமிழக பாஜகவின் தலைமை பொறுப்புக்கு கொண்டு வரப்பட்டார்.

    Advertisement

    2024 லோக்சபா தேர்தலுக்கு பின் அண்ணாமலை அந்தப் பதவியில் இருந்து இறக்கப்பட்டார். இதன்பின் கடந்த 18 மாதங்களாக பாஜக தலைமையுடன் அண்ணாமலை கருத்து வேறு கொண்டிருந்ததாக ஒப்புக் கொண்டிருக்கிறார். கடந்த ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதியே பாஜகவில் இருந்து விலகும் முடிவை தலைமைக்கு தெரிவித்திருக்கிறார். ஆனால் 2026 சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தை செய்ய பாஜக தலைமை அறிவுறுத்தி இருக்கிறது.

    தற்போது சட்டசபைத் தேர்தல் முடிவடைந்த பின் அண்ணாமலை தனது பாதையை தீர்மானித்துள்ளார். இருப்பினும் பாஜகவில் இருந்து நாகரீகத்துடன் வெளியேற வேண்டும் என்று கடந்த சில நாட்களாகவே டெல்லியில் முகாமிட்டு நிதின் நபின் மற்றும் அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்து ஆசி பெற்று அக்கட்சியில் இருந்து விலகி உள்ளார்.

    Advertisement

    இதனால் பாஜகவின் இன்னொரு அணி தான் அண்ணாமலையின் அமைப்பு என்ற விமர்சனங்கள் வரத் தொடங்கியுள்ளன. இதுதொடர்பாக சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தனது எக்ஸ் பக்கத்தில், பெயர் மாற்றம், தமிழகத்தில் பா.ஜ.க-வின் புதிய உத்தி! ஆர்.எஸ்.எஸ் ஏற்கனவே 2500 அமைப்புகளை வழி நடத்துகிறது. அண்ணாமலை தொடங்கும் அமைப்பு 2501 அவ்வளவுதான்.

    பாஜக என்ற கட்சி தமிழக மக்களிடம் எடுபடவில்லை. எனவே, பெயரை மாற்றி வியாபாரத்தை வெற்றிகரமாக்க முடியுமா என்று மோடி - அமித்ஷா ஆசியுடன் முயற்சிக்கிறார் அண்ணாமலை. ஆரம்பித்த இரண்டு மணி நேரத்தில் 2.50 லட்சம் பேர் சேர்ந்து இருப்பதாக கூறுவதெல்லாம் பாஜக கட்சியினர் இதில் இணைக்கப்படுகிறார்கள் என்பதே, அண்ணாமலை போடுவது "மாரீச மான் வேடம்" என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள் என்று பதிவிட்டுள்ளார்.

    English Summary

    Annamalai: Annamalai’s New Movement is Just an RSS Illusion, CPIM Shanmugam Slams Former BJP Chief as 'Marisa Maan'