ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை?

  • சென்னை: பாஜகவில் இருந்து விலகியுள்ள அண்ணாமலை, இன்னும் சில மாதங்களில் புதிய கட்சியைத் தொடங்க தீவிரமாக திட்டமிட்டு வருகிறார். இப்படியான சூழலில் அண்ணாமலைக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு அளிப்பாரா என்ற புதிய விவாதம் தமிழக அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

    Advertisement

    விஜய்யின் தவெக 2026 சட்டசபைத் தேர்தலில் அடைந்துள்ள மாபெரும் வெற்றி, பல்வேறு தரப்பினரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. 2 ஆண்டுகளில் கட்சி தொடங்கி ஆட்சிப் பொறுப்பை விஜய் ஏற்றுள்ள நிலையில், அண்ணாமலையின் இந்த திடீர் நகர்வு மற்றும் ரஜினி உடனான அவரது நெருக்கம் ஆகியவை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

    Advertisement

    அண்ணாமலை அரசியலுக்கு வருவதற்கு முன்பிருந்தே ரஜினிகாந்தின் தீவிர ரசிகராகவும், அவரைத் தனது வழிகாட்டியாகவும் கருதி வருபவர். சில நாட்களுக்கு முன் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசும்போது, "நான் மாதத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை ரஜினி சாரை ரகசியமாகவோ, நேரடியாகவோ சந்தித்துப் பேசுவது வழக்கம்.

    அவர் எனக்கு ஆன்மீகம், யோகா மற்றும் அரசியல் கடந்து ஒரு 'குரு' போலப் பல நல்ல அறிவுரைகளை வழங்குவார்" என்று ஓப்பனாகவே ஒப்புக்கொண்டுள்ளார். அண்ணாமலை ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்த ஆரம்பக் காலத்தில், ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்கினால் அதில் இணையவே முதலில் காத்திருந்தார்.

    Advertisement

    ரஜினி அந்த முடிவிலிருந்து பின்வாங்கிய பிறகே அண்ணாமலை பாஜகவில் இணைந்தார். ரஜினிகாந்த் அன்று முன்மொழிந்த "ஆன்மீக அரசியல்" மற்றும் "சிஸ்டத்தை மாற்றுவோம்" உள்ளிட்ட முழக்கங்களை, அண்ணாமலை கையில் எடுப்பார் என்று தெரிகிறது. இதனால் ரஜினியின் ஆசி அண்ணாமலைக்கு நிச்சயம் இருக்கும் என அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர்.

    ரஜினிகாந்த் அண்ணாமலையைத் தனிப்பட்ட முறையில் பாராட்டி, அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தாலும், அவர் நேரடியாக அண்ணாமலையின் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பாரா என்பது சந்தேகம் தான். ஸ்டாலின் மற்றும் திமுக உடனான நட்பு காரணமாக ரஜினிகாந்த் நேரடியாக அண்ணாமலையை ஆதரிப்பதில் சிக்கல்கள் எழலாம்.

    Advertisement

    ஆனால் ரஜினிகாந்தின் ரசிகர் மன்ற நிர்வாகிகளை அண்ணாமலை பக்கம் செல்ல அறிவுறுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. டெல்லியில் இருந்து அண்ணாமலை சென்னை வந்தபின், அவர் ரஜினிகாந்தை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தமிழக அரசியல் மீண்டும் பரபரப்பாகி இருக்கிறது.

    English Summary

    Annamalai: Annamalai's New Political innings: Will Rajinikanth's Silent Fanbase Shift Towards the Former IPS Officer