ரவிசங்கர் விவகாரம்! தாக்கப்பட்டவருக்கு நீதி வழங்காமல்! தாக்குதலே நடக்கலைனு சொல்ல வைப்பதா? அண்ணாமலை

  • சென்னை: திருச்சி மாவட்டம் துறையூரில் துணை சபாநாயகர் ரவிசங்கரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் ஒருவருக்கு நீதி வழங்குவதற்கு பதிலாக தாக்குதலே நடக்கவில்லை என அவரையே சொல்ல வைப்பது எந்த வகையான சட்டம் ஒழுங்கு? என வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: மனு அளிக்க வந்த ஒரு சாமானியர் தாக்கப்பட்ட சம்பவமும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் வெளியிட்ட காணொளியைத் தொடர்ந்து, தன் மீது தாக்குதல் நடைபெறவில்லை என்று அவரையே வாக்குமூலம் அளிக்க நிர்பந்தித்ததாக வெளியாகியுள்ள தகவல்களும் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.

    Advertisement

    துணை சபாநாயகர் பொறுப்பில் இருக்கும் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ரவி சங்கரும், சட்டத்தைக் காக்க வேண்டிய காவல்துறை ஆய்வாளரும் இத்தகைய செயல்களில் ஈடுபட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் வன்மையான கண்டனத்திற்குரியவை.

    தாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒருவருக்கு நீதி வழங்குவதற்குப் பதிலாக, தாக்குதலே நடக்கவில்லை என்று அவரையே சொல்ல வைப்பது எந்த வகையான சட்டம் ஒழுங்கு?

    அதிகாரம் என்பது மக்களின் குரலை ஒடுக்குவதற்கான கருவி அல்ல. காவல்துறை என்பது அதிகாரத்தில் இருப்பவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப செயல்படும் அமைப்பும் அல்ல.

    ரவிசங்கர் அடித்தார்! காலைல பேசின வீடியோ மிரட்டி பேச வச்சாங்க! துறையூர் கார்த்திக் குமார் புது வீடியோ
    Advertisement

    பாதிக்கப்பட்ட கார்த்திக் குமாருக்கு நீதி கிடைப்பதை தவெக அரசு உறுதி செய்ய வேண்டும். இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது பாரபட்சமற்ற விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

    குடிநீர் விநியோகம்

    திருச்சி மாவட்டம் துறையூர் கண்ணபிரான் காலனி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக்குமார். இவரது குடியிருப்புப் பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகம், சரியாக இல்லை என்றும் தெருக்களில் குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதாகவும் நகராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

    துணை சபாநாயகரிடம் மனு

    இதுகுறித்து துணை சபாநாயகரிடமும் அவரது எம்எல்ஏ அலுவலகத்திலும் புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லையாம். இந்த நிலையில் மணச்சநல்லூரில் உள்ள தனது வீட்டிற்கு ரவிசங்கர் வந்திருப்பதை அறிந்த கார்த்திக் குமார், அங்கு அவரிடம் தனது தொகுதி பிரச்சனை குறித்து மனு அளிக்க சென்றாராம்.

    Advertisement

    தகாத வார்த்தைகள்

    அப்போது அவரிடம் என்ன ஏது என கேட்காமலேயே ரவிசங்கர், தகாத வார்த்தைகளால் பேசி அடித்து தாக்குதல் நடத்திய வீடியோ வைரலானது. அந்த வீடியோவில் "நல்லது செய்வார் என்ற நம்பிக்கையில் விஜய்க்கு ஓட்டு போட்டேன்" என கார்த்திக் குமார் சொல்கிறார், அதற்கு மறுமுனையில் ரவிசங்கரோ , "எந்த ஊர்டா நீ, எந்த ஊர்டா நீ" என தாக்கியபடியே கேட்டுக் கொண்டிருக்கிறார்.

    என்னை துணை சபாநாயகர் ரவிசங்கர் தாக்கினாரா? அது தவறான தகவல்! துறையூர் கார்த்திக்குமார் மறுப்பு வீடியோ

    காயமடைந்த கார்த்திக் குமார்

    இப்படியாக இந்த வீடியோ வைரலானது. இதில் ரவிசங்கர் என சொல்லப்படும் நபரின் முகம் சரியாக தெரியவில்லை என சொல்லப்பட்டது. இதனிடையே காயமடைந்த கார்த்திக் குமார் மணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் இருந்தபடியே அவர் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் தனது உயிருக்கு ஆபத்து என்றால் அதற்கு ரவிசங்கரும் அவரது குடும்பத்தினரும்தான் காரணம் என தெரிவித்திருந்தார்.

    Advertisement

    ரவிசங்கருடன் வீடியோ

    இந்நிலையில் சிறிது நேரத்திற்கெல்லாம் ரவிசங்கருடன் அமர்ந்து கார்த்திக் குமார் வீடியோ போட்டிருந்தார். அந்த வீடியோவில், "கூட்ட நெரிசலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நாங்கள் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள். இந்த விவகாரம் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. உண்மைக்குப் புறம்பாக இந்த சம்பவம் பரப்பப்படுகிறது. தயவு செய்து இது போன்ற வதந்திகளை நம்பாதீர்கள் என கார்த்திக்குமார் தெரிவித்திருந்தார்.

    வீடியோ

    முதல் வீடியோவில் தனது உயிருக்கு ஆபத்து என கூறியிருந்த நிலையில் அடுத்த நிலையில் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என கார்த்திக் குமார் தெரிவித்திருந்தது குழப்பமான நிலையில் இருந்தது. இதையடுத்து சிறிது நேரத்தில் புது வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் "என்னை உயிருடன் விடமாட்டோம் என ரவிசங்கரும், மணச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் கிருபாநிதியும் மிரட்டியதால்தான் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என வீடியோ வெளியிட்டேன். ஆனால் என் மீது ரவிசங்கர் தாக்கியது உண்மைதான்" என தெரிவித்திருந்தார்.

    English Summary

    We The leaders Chief Annamalai criticises about law and order in the issue of Ravi shankar attacks common man who come to demand about basic amenities.