சென்னையை குறி வைத்த அண்ணாமலை.. ஆகஸ்ட் 16ல் மெகா பேரணிக்கு திட்டம்.. பின்னணி என்ன?

  • சென்னை: சென்னையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக வீ தி லீடர்ஸ் அமைப்புன் நிறுவனர் அண்ணாமலை தலைமையில் பேரணி நடத்தப்பட உள்ளது. ஆகஸ்ட் 16ஆம் தேதி இந்த பேரணி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து விலகி வீ தி லீடர்ஸ் என்ற புதிய அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த அமைப்பில் இதுவரை சுமார் 20 லட்சம் பேர் வரை இணைந்துள்ளனர். இந்த அமைப்பை ஒவ்வொரு மாவட்டத்திலும் வலுப்படுத்தி அரசியல் கட்சியாக மாற்ற அண்ணாமலை முடிவு செய்துள்ளார். இதற்கான பணிகளில் அண்ணாமலை தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    Advertisement

    இந்த வீ தி லீடர்ஸ் அமைப்பின் முதல் மாநாடு பொள்ளாச்சியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சுமார் 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இதில் அண்ணாமலை பேச்சு தமிழ்நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறியது. ஜூலை மாதத்தில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியை இந்த அமைப்பு நடத்தியது.

    இதன்பின் அண்ணாமலை அடுத்தக் கட்டமாக கன்னியாகுமரியில் என் குமரி பசுமை குமரி என்ற பெயரில் ஒரு மாநாட்டை திட்டமிட்டுள்ளார். இந்த மாநாடு ஆகஸ்ட் 2ஆம் தேதி நடக்க இருக்கிறது. கன்னியாகுமரியில் பாஜகவுக்கு நல்ல அடித்தளம் இருக்கும் சூழலில், அதனை தன் பக்கம் கொண்டு வர அண்ணாமலை குறி வைத்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

    Advertisement

    இந்த நிலையில் அடுத்ததாக சென்னையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக வீ தி லீடர்ஸ் அமைப்புன் நிறுவனர் அண்ணாமலை தலைமையில் பேரணி நடத்தப்பட உள்ளது. ஆகஸ்ட் 16ஆம் தேதி இந்த பேரணி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அண்ணாமலை தரப்பில் வீ தி லீடர்ஸ் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க ஒரு செயலியை வெளியிட்டுள்ளார். இந்த வீ தி லீடர்ஸ் செயலியின் மூலமாக புதிய உறுப்பினர்களும் இணைய முடியும். பழைய உறுப்பினர்கள் பதிவு எண்ணை வைத்து பயன்படுத்தி கொள்ள முடியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    English Summary

    Annamalai: Environmental Awareness Rally Announced in Chennai Led by 'We The Leaders' Founder Annamalai on August 16th