அண்ணாமலை கிட்ட மாட்டிக்கிச்சா ஆதாரம்? தவெகவில் புகைந்த நெருப்பு.. உளவுத்துறைக்கு விஜய் போட்ட உத்தரவு

  • சென்னை: அண்ணாமலை சொன்ன ஒரு விஷயம் இன்று தவெகவுக்குள் புகைந்து எரிச்சலை தந்து கொண்டிருக்கிறது.. தமிழகத்தில் சில அமைச்சர்கள் மீது லஞ்சம் மற்றும் கமிஷன் பெறுவதாகக் குற்றம் சாட்டியுள்ள அண்ணாமலை, அதற்கான ஆடியோ ஆதாரங்கள் தன்வசம் உள்ளதாகப் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார்.. இதற்கு தவெகவில் எழுந்துள்ள ரியாக்‌ஷன் குறித்து, நமக்கு ஒரு எக்ஸ்ளுசிவ் தகவல் கிடைத்துள்ளது.

    Advertisement

    4 நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணிக் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, "ஊழலுக்கு எதிராக முதல்வர் விஜய் இருப்பது உண்மை தான். ஆனால், ஊழல் மீண்டும் தொடங்கி உள்ளது.. "ஓட்டுக்கு பணம் கொடுத்து வந்துள்ளோம் தம்பி, 2 அல்லது 3 சதவீதம் கொடு" என்று சில அமைச்சர்கள் லஞ்சம் கேட்கும் ஆடியோ என்னிடம் உள்ளது. நான் பிரச்சனை செய்யும் முன்பே, இதை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்" என்று கூறியிருந்தார்.

    Advertisement

    அண்ணாமலையின் இந்த தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலையை உண்டுபண்ணியது.. அத்துடன் அண்ணாமலையின் பேச்சு முழுவதையும் உளவுத்துறை உடனடியாக ரிக்கார்டு செய்து, அதன் முழுமையான அறிக்கையை முதல்வர் விஜய்யின் கவனத்திற்கு அனுப்பி வைத்தது.

    அண்ணாமலையிடம் ஆடியோ ஆதாரம்

    உளவுத்துறையின் ரிப்போர்ட்டைபார்த்த முதல்வர் விஜய், தனது நெருங்கிய ஆலோசகர்கள் மற்றும் செயலாளர்களுடன் தீவிரமாக இதுகுறித்து விவாதித்துள்ளார்.

    அதற்கு ஆலோசகர்கள், "அப்படி எதுவும் தவறு நடக்கவில்லையே சார். இருந்தாலும், துறை ரீதியாக விசாரித்து விடலாம். ஒவ்வொரு துறையிலும் இது வரையில் என்ன சப்ஜெக்ட் நடந்து கொண்டிருக்கிறது என ஆராய்ந்தாலே ஊழல் நடந்திருக்கிறதா? லஞ்சம் பெறப்பட்டதா?என தெரிந்து விடும் சார்" என்று விஜய்யிடம் சொல்லியிருக்கிறார்கள்.

    Advertisement

    உடனே விஜய், எந்த அமைச்சர்களுக்கு எதிராக ஆதாரம் அவரிடம் இருக்கிறதாம்? ஏதாவது தெரியுமா?" என்று ஆலோசகர்களிடம் கேட்டிருக்கிறார். இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரித்து வருவதாக ஆலோசகர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

    உளவுத்துறைக்கு போன உத்தரவு

    பிறகு விஜய், அண்ணாமலையிடம் யாரை பற்றி, என்ன ஆதாரம் இருக்கிறது என துப்பறிந்து ரிப்போர்ட் அனுப்புமாறு உளவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளாராம் முதல்வர் விஜய் " என்கின்றன உள்துறை வட்டாரங்கள்.

    அண்ணாமலையிடம் யாரை பற்றி, எந்த துறையை பற்றி, என்ன வகையான உறுதியான ஆதாரங்கள் இருக்கின்றன என்பதைத் துல்லியமாகதுப்பறிந்து உடனே ரிப்போர்ட் அனுப்புமாறு உளவுத்துறைக்கு முதல்வர் விஜய் அதிரடியாக உத்தரவிட்டுள்ளதாக உள்துறை வட்டாரங்கள் மூலம் தகவல்கள் கசிந்துள்ளன.

    Advertisement

    கடந்த திமுக ஆட்சியின்போதும் அண்ணாமலை இதேபோன்று பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளையும் ஆடியோ ஆதாரங்களையும் வெளியிடுவதாக தொடர்ச்சியாகக் கூறி அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

    ஆதாரம் இருக்கா?

    ஒருவேளை அண்ணாமலையிடம் உண்மையிலேயே வலுவான ஆதாரங்கள் இருக்கும் பட்சத்தில், அது ஆளும் தரப்புக்கு பெரும் தலைவலியாக மாறும். ஊழலை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த ஒரு அரசாங்கத்தில், அமைச்சர்கள் மீது லஞ்சப் புகார் எழுந்து அதற்கான ஆதாரங்களும் கிடைத்தால், அது அந்த அரசுக்கு மிகப் பெரிய சோதனையாக மாறும்.

    அதாவது, தாங்கள் மக்களுக்கு கொடுத்த நேர்மையான ஆட்சி என்ற வாக்குறுதியை காப்பாற்ற வேண்டிய தார்மீக பொறுப்பு தவெக அரசுக்கு முழுமையாக வந்துவிடும்..!!

    Advertisement

    - நமது நிருபர் எழில்

    English Summary

    Annamalai Evidence Scares TVK.. Vijay Orders Intelligence Probe Into Ministers’ Bribery Audio