கட்சியை விட்டு போன அண்ணாமலைக்கு கட்டுப்பாடு? பாஜக சொன்ன அட்வைஸ்! என்ன சொல்லியிருக்குனு பாருங்க!

  • சென்னை: முன்னாள் தலைவர்களுக்கு எல்லாம் பதவிகளை தூக்கி கொடுத்த பாஜக தலைமை, ஏனோ.. அண்ணாமலைக்கு மட்டும் எந்த பதவியும் கொடுக்காமல் தவிர்த்தது. இதனால் அவர் கட்சியை விட்டே வெளியேறிவிட்டார். இப்படி இருக்கையில், பாஜக அண்ணாமலைக்கு புது அட்வைஸை கொடுத்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

    Advertisement

    தமிழிசை சௌந்தரராஜனுக்கு ஆளுநர் பதவி, எல்.முருகனுக்கு மத்திய மந்திரி, சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு குடியரசுத் துணைத் தலைவர். இப்படி கட்சியின் முன்னாள் மாநில தலைவர்கள், முக்கிய ஆளுமைகளுக்கு.. பதவிகளை கொடுத்து அழகு பார்த்தது பாஜக.

    Advertisement

    டாடா காட்டிய பாஜக

    ஆனால் தேர்தலில் இரட்டை இலக்க வாக்குகளை வாங்க காரணமாக இருந்த அண்ணாமலையை அப்படியே அலேக்காக கழற்றிவிட்டு அழகு பார்த்தது பாஜக தலைமை. சரி சட்டமன்ற தேர்தலில் சீட் கிடைக்கும்.. அரவக்குறிச்சியோ, அந்தியூரோ.. ஏதாவது ஒன்று கிடைத்தால் போட்டியிட்டு வெயிட் காட்டலாம் என்று காத்திருந்தார் அண்ணாமலை. ஆனால், பாஜக தலைமை அவருக்கு சைஸாக டாடா காட்டிவிட்டு, அவரை ஒதுக்கி வைத்து தேர்தலை எதிர்கொண்டது.

    வெளியேறிய அண்ணாமலை

    இதுவே அண்ணாமலையை அதிருப்தியின் உச்சிக்கு கொண்டு சென்றுவிட்டது. சரி, போகட்டும்.. ஆளுநர் பொறுப்பு ஏதாவது.. மத்திய மந்திரி பதவி எதுவாது கிடைக்குதா? என்றும் எதிர்பார்த்திருந்தார். ஒன்னும் கிடைக்கல. எனவே வேக வேகமாக சென்று பாஜக தேசிய தலைவர் மற்றும் மோடியை சந்தித்து தனது ராஜினாமா விஷயத்தை சொல்லி.. கட்சியிலிருந்தே வெளியேறிவிட்டார்.

    Advertisement

    மக்கள் செல்வாக்கு

    ஆனால் அதற்கு பிறகுதான் சம்பவமே தொடங்கியது. ஆவேசமாக வெளியே வந்த அண்ணாமலை தனது பழைய அமைப்பான 'வி தி லீடர்ஸ்' எனும் அமைப்பை மீண்டும் பலப்படுத்த தொடங்கினார். அதில் மளமளவென மக்கள் இணைய தொடங்கினர். இதுவரை 18.95 லட்சம் பேர் இணைந்திருக்கினர். பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் இதில் இணைந்ததால், தமிழக பாஜகவின் பாதி கூடாரம் காலியாகியிருக்கிறது. நிலைமை இப்படி இருக்கையில், தற்போது அண்ணாமலைக்கு பாஜக அட்வைஸ் சொல்லியிருக்கிறது.

    கட்சியில் எந்த பதவியும் கொடுக்காமல் அனுப்பிவிட்டு, இப்போது எதுக்கு அட்வைஸ் எல்லாம் தூக்கிட்டு வராங்க? என்று அண்ணாமலை ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பியருக்கின்றனர்.

    Advertisement

    அட்வைஸ் சொன்ன பாஜக

    அதாவது பாஜக தன்னார்வ தொண்டு நிறுவன பிரிவு தலைவர் அர்ஜுன மூர்த்தி அண்ணாமலைக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், " தங்களை நேசிக்கும் சிலரும், தங்களை எதிர்ப்பவர்களும், சமூக ஊடகங்களை தனிமனித தாக்குதல்களின் போர்க்களமாக மாற்றி வருவது, மிகுந்த கவலை அளிக்கிறது. மற்ற தலைவர்களை அவமதிப்பதும், பெண்களை இழிவுபடுத்துவதும், தரக்குறைவான சொற்களால் தாக்குவதும் நாகரிக சமூகத்துக்கு அடையாளமாக இருக்க முடியாது.

    விமர்சிக்கலாம்.. அவமதிக்கக்கூடாது

    ஒரு தலைமையை உயர்த்த, இன்னொரு தலைவரை இழிவுபடுத்த வேண்டிய அவசியம், எந்த ஜனநாயகத்திலும் இல்லை. பெண்களையும், மூத்த தலைவர்களையும் கேவலமாக சித்தரிக்கும் படங்கள், படிக்கவே கூச்சப்பட வேண்டிய மொழி ஆகியவை, சாதாரண அரசியல் வெளிப்பாடாக மாறி வருவது கவலை அளிக்கிறது. கருத்தை எதிர்க்கலாம், மனிதனை அல்ல. விமர்சிக்கலாம்.. அவமதிக்கக்கூடாது. வாதிடலாம், வெறுப்பை விதைக்கக் கூடாது. தங்களை நம்பி பயணிக்கும் அனைவரிடமும், இதை சொல்லுங்கள்.

    Advertisement

    இந்த கடிதம், வேண்டுகோள் மட்டுமல்ல; பொறுப்புணர்வின் முறையீடு. நாட்டை மாற்ற விரும்பும் தலைமை, முதலில் தங்களை பின்பற்றுவோரின் அரசியல் பண்பாட்டை மாற்ற வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

    English Summary

    Annamalai Gets BJP's Stern Advice: While the BJP leadership readily handed out positions to various former leaders, for some reason, it refrained from assigning any role to Annamalai, leading him to quit the party. Amidst this situation, new advice offered by the BJP to Annamalai has drawn attention.