கட்டுக்கடங்காத பிரம்மாண்ட கூட்டம்.. அண்ணாமலையை திரண்டு நின்று வரவேற்ற இளைஞர்கள்!

  • சென்னை: பாஜகவில் இருந்து விலகி வீ த லீடர்ஸ் அமைப்பை தொடங்கியுள்ள அண்ணாமலை, மாநிலம் முழுக்க விழிப்புணர்வு பேரணிகளை நடத்தி வருகிறார். அதன்படி இன்றைய தினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி சென்னையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் அண்ணாமலை பங்கேற்றார். அப்போது அங்கு பல ஆயிரம் பேர் திரண்டு அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பை கொடுத்தனர். மக்கள் கூட்டத்திற்கு நடுவே நடக்க கூட முடியாத அளவுக்கு சிரமப்பட்டு, அவர் நடந்து சென்றார்.

    Advertisement

    தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்தவர் அண்ணாமலை. அவர் பாஜகவின் மாநில தலைவராக இருந்தபோது தான் பாஜகவுக்கு நல்ல வளர்ச்சி கிடைத்தது. அவர் நடத்திய வேல் யாத்திரை உள்ளிட்டவை பாஜகவை மக்களிடையே எடுத்து சென்றது. இருப்பினும், கடந்தாண்டு அவர் பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து விலகினார். அப்போதே அவர் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

    Advertisement

    அண்ணாமலை

    மற்ற பாஜக தலைவர்களுடன் கருத்து வேறுபாடு இருந்ததாகவும் சொல்லப்பட்டது. இருப்பினும், பொதுவெளியில் அண்ணாமலை இது குறித்து எந்தவொரு கருத்தும் கூறாமலேயே இருந்தார். தேர்தல் முடியும் வரை அவர் பாஜகவிற்காகவே வேலை செய்தார். பிரச்சாரங்களிலும் கலந்து கொண்டார். இந்தச் சூழலில் தான் சில மாதங்களுக்கு முன்பு டெல்லி சென்ற அண்ணாமலை, பாஜகவில் இருந்து விலக ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.

    வீ தி லீடர்ஸ்

    அதன் பிறகு வீ த லீடர்ஸ் என்ற அமைப்பையும் ஆரம்பித்தார். இந்த அமைப்பின் முதல் மாநாடு கடந்த மாதம் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து மாநிலத்தின் பல பகுதிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் கூட கன்னியாகுமரி, தூத்துக்குடி கடற்கரைகளிலும், மதுரை வைகை ஆற்றிலும் வீ தி லீடர்ஸ் அமைப்பினர் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.

    Advertisement

    மிக பெரிய கூட்டம்

    இந்தச் சூழலில் தான் இன்றைய தினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. எழும்பூர் ராஜரத்தினம் அரங்கம் அருகே தொடங்கிய இந்த பேரணியில் அண்ணாமலை பங்கேற்று உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் விவேக்கின் மனைவி அருள்செல்வி உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அங்கு மிக பெரியளவில் இளைஞர்கள் திரண்டிருந்தனர்.

    இதில் ஏராளமானோர் பங்கேற்ற நிலையில், அண்ணாமலை மக்கள் கூட்டத்திற்கு நடுவே நடந்து சென்றார். அப்போது அங்கிருந்தவர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பை கொடுத்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் அண்ணாமலையைச் சுற்றி அவரது ஆதரவாளர்கள் பாதுகாப்பாக சூழ்ந்து கொண்டு அழைத்து சென்றனர். மக்கள் கூட்டத்திற்கு நடுவே சென்ற அண்ணாமலை அங்கு உரையாற்றினார். இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    Advertisement

    அண்ணாமலை

    அந்த பேரணியில் பேசிய அண்ணாமலை, "நமது அமைப்பை அரசியலாக மாற்றி, மக்களுக்கான அரசியலாகச் செயல்பட போகிறோம். அடிப்படை அரசியலையே மாற்றவே இங்கு வந்துள்ளோம். சேவை செய்யும் மனப்பான்மையோடு வருபவர்களால் மட்டுமே அடிப்படை அரசியலை மாற்ற முடியும்.

    அண்ணாமலை முன்பு மாதிரி அரசியல் பேசுவதில்லை என பலரும் சொல்கிறார்கள். இப்போது ஆளும் தரப்பில் இருக்கும் எம்எல்ஏக்கள் 108 பேரில் 101 பேர் முதல்முறையாக சட்டசபைக்கு சென்றவர்கள். ஒரு ஆண்டு டைம் தருவோம்.. வேலை செய்யட்டும். அவர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்றால் நாம் தான் முதலில் அதை சுட்டிக்காட்டுவோம். அதில் யாருக்கும் எந்தவொரு மாற்று கருத்தும் தேவையில்லை" என்றார்.

    English Summary

    Former Tamil Nadu BJP chief K Annamalai receives a massive reception from supporters(அண்ணாமலைக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு): Annamalai latest news in tamil.