அண்ணாமலை லண்டன் முதலீடு 15,300 கோடி பற்றி பொசுக்னு சொல்லிட்டாரே.. பின்னாடியே வந்த மரிய வில்சன்

  • சென்னை: தமிழக முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் மூலம் ஈர்க்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ள முதலீடுகள் குறித்து அண்ணாமலை முன்வைத்த விமர்சனங்களுக்கு தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் பதிலடி கொடுத்துள்ளார். "ஒரு ரூபாய் என்றாலும் முதலீடுதான்; அந்த ஒரு ரூபாயை எப்படி வேண்டாம் என்று சொல்ல முடியும்?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    நேற்றைய தினம் "வீ த லீடர்ஸ்" இயக்கத்தின் நிறுவனர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசும்போது, "தமிழக முதல்வர் முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்றிருக்கக்கூடாது. இங்கிலாந்து நாட்டில் பணமே இல்லை. அங்கு ஒரு சதவீத வளர்ச்சி தான் உள்ளது.

    Advertisement

    பொசுக்னு சொல்லிட்டாரே அண்ணாமலை

    அங்கிருந்து எப்படி தமிழகத்துக்கு முதலீடு வரும். முதல்வர் கோவைக்கும், மதுரைக்கும் வந்து தொழிலதிபர்களிடம் பேசி சலுகைகள் தருவதாக கூறி தொழில்களை மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யுமாறு கூற வேண்டும். வெளிநாட்டு நாடகங்களை விட்டு உள்ளூர் பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும், சந்தைப்படுத்தவும் வேண்டும்" என்று கூறியிருந்தார்.

    இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மரிய வில்சனிடம், முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் மற்றும் அங்கு ஈர்க்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ள முதலீடுகள் குறித்து அண்ணாமலை முன்வைத்த விமர்சனங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

    மரிய வில்சன் அண்ணாமலைக்கு பதிலடி

    அதற்கு அமைச்சர் மரியவில்சன் சொல்லும்போது, "அண்ணாமலை முதிர்ந்த அரசியல்வாதி என்று நினைத்தேன்; கடந்த 7,8 வருடமாக பாஜவில் இருந்து இருக்கிறார். மாநில தலைவராக கூட இருந்திருக்கிறார். அவரிடம் இந்த கருத்து வருவது நல்லது அல்ல என்று நினைக்கிறேன். இன்றைக்கு நிறைய முதலீடுகள் நடந்து கொண்டு இருக்கிறது. ஒரு ரூபாய் கூட முதலீடு தான். நீங்கள் எப்படி இதை உதாசீனம் படுத்த முடியும்.

    Advertisement

    ஏஐ தொழில்நுட்பத்தால் நிறைய சாப்ட்வேர் கம்பெனிகள் பிரச்சனைகளை சந்தித்து கொண்டு இருக்கிறார்கள். நிறைய மேன் பவர் லாஸ்; சிறிய சிறிய பிராஜெக்ட் கூட எடுத்து கொண்டு இருக்கிறார்கள். எங்கள் முதலீடு வந்தாலும் அதனை முதல்வர் விஜய் எடுத்து கொண்டு வருவதை கேலி, கிண்டல் பண்ணுவது நல்லதல்ல என்று நான் நினைக்கிறேன்.

    15,300 கோடி முதலீடு

    தவெக ஆட்சிக்கு வந்த பிறகு வரி வசூல் முறைப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் தற்போது ஊழல் இல்லாத வரி வசூல் நடைபெறுகிறது. தமிழகத்தில் வெளிப்படையான, தூய்மையான ஆட்சி நடைபெறுகிறது; ஊழல் இல்லாத காரணத்தினால் பத்திரப்பதிவுத்துறை வருவாய் அதிகரித்துள்ளது.

    Advertisement

    ஊழல் இல்லை என்பதால் பத்திரப்பதிவுக்கு அதிகம் பேர் வருகின்றனர். தமிழக அரசு பெறும் கடன் அளவு குறைந்து வருகிறது. கடந்த ஆட்சியை ஒப்பிடுகையில் கடன் அளவை குறைத்து வருகிறோம். தமிழக அரசின் வருவாயை பெருக்கும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்,

    தமிழக அரசின் தகவல்படி, முதல்வர் விஜய்யின் சமீபத்திய லண்டன் பயணத்தில் ரூ.15,300 கோடி மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்கள் மற்றும் முதலீட்டு உறுதிமொழிகள் பெறப்பட்டுள்ளன. இதன் மூலம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என அரசு தெரிவித்துள்ளது.

    வரி வருவாய், முதலீட்டு ஒப்பந்தங்கள்

    2025 ஆகஸ்டுடன் ஒப்பிடும்போது 2026 ஆகஸ்டில் ஒட்டுமொத்த வரி வருவாய் அதிகரித்துள்ளது.. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது கடன் அளவு குறைந்துள்ளது.. வரி வருவாய் அதிகரித்துள்ளது; கடன் குறைந்து வருகிறது. இன்னும் குறையும். அடுத்த காலாண்டில் எவ்வாறு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை விரிவாக தெரிவிப்பேன்" என்றார். " என்றார்.

    Advertisement

    லண்டன் முதலீடு தொடர்பான அரசியல் விவாதம் ஒருபுறம் நீடிக்கும் நிலையில், தமிழகத்துக்கு நிஜமாகவே எவ்வளவு முதலீடு வருகிறது, அவை எப்போது செயல்படுத்தப்படுகின்றன, எத்தனை வேலைவாய்ப்புகள் உருவாகின்றன என்பதும் அடுத்தகட்டத்தில் கவனிக்கப்படும் அம்சங்களாக உள்ளன...!!

    English Summary

    Annamalai on ₹15,300 Crore London Investment.. Maria Wilson Steps In Right After!