பெரியாரை புகழ்ந்த அண்ணாமலை.. 2 ஆண்டுகளுக்கு முன் செய்த அந்த காரியம் மீண்டும் டிரெண்டிங்! என்னாச்சு

  • சென்னை: தந்தை பெரியாரின் 148வது பிறந்தநாளையொட்டி முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட பதிவு தற்போது அரசியல் ரீதியாக கவனம் பெற்றுள்ளது. பெரியார் சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக போராடியவர் என அண்ணாமலை புகழ்ந்த நிலையில், சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு அவர் செய்த ஒரு காரியத்தின் பழைய வீடியோவும் தற்போது சமூக வலைத்தளங்களில் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

    Advertisement

    இன்றைய தினம் அண்ணாமலை தனது ட்விட்டரில், பெரியார் சமூக சீர்திருத்த இயக்கங்களில் முக்கிய பங்காற்றியவர் என்றும் தமிழகத்தின் சமூக மற்றும் அரசியல் வரலாற்றில் அழியாத தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும், "சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக தனது வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்த பெரியாரை நினைவுகூர்ந்து வணங்குகிறேன்" என அவர் பதிவிட்டிருந்தார்.

    Advertisement

    அண்ணாமலை

    அண்ணாமலை அரசியலுக்கு வந்த பிறகு பெரியார் குறித்து பொதுவெளியில் இதுபோல குறிப்பிடுவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு 2020ஆம் ஆண்டு, பாஜகவில் இணைந்த சிறிது காலத்திலேயே அவர் பெரியாருக்கு மரியாதை செலுத்தி பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். அதன் பிறகு, 2026ஆம் ஆண்டு பாஜக தமிழக தலைவர் பதவியில் இருந்து விலகும் வரை, இது போன்ற பிறந்தநாள் பதிவை அவர் வெளியிடவில்லை.

    மேலும், தனது அரசியல் பயணத்தில் சில நேரங்களில் பெரியாரின் சமூக சீர்திருத்த பணிகளை குறிப்பிட்டு பாராட்டிய அண்ணாமலை, மற்ற சில சந்தர்ப்பங்களில் அவரது கருத்துகளை விமர்சித்தும் பேசியுள்ளார். இதனால் அவரது தற்போதைய பதிவு சமூக வலைத்தளங்களில் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக அண்ணாமலை தனது பதிவில் பெரியார் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக போராடியவர் என்று குறிப்பிட்டிருந்ததை சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    Advertisement

    பாஜக

    கடந்த காலங்களில், குறிப்பாக அண்ணாமலை பாஜகவில் இருந்தபோது, செய்த சில காரியங்களை குறிப்பிட்டு இது குறித்து நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். குறிப்பாக 2024 டிசம்பர் மாதத்தில் அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக இருந்தபோது கோவையில் உள்ள தனது வீட்டின் முன்பு தன்னைத் தானே 6 முறை சாட்டையால் அடித்து கொண்ட வீடியோ தற்போது மீண்டும் டிரெண்டாகி வருகிறது. அதாவது இதுபோன்ற மூடநம்பிக்கையை செய்த அவரே இதுபோல பதிவிடுவது எந்த விதத்தில் நியாயம் என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

    அப்போது அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கை திமுக அரசு கையாண்ட விதத்தைக் கண்டித்து போராட்டமாக அண்ணாமலை இதுபோல சாட்டையால் தன்னை தானே அடித்து கொண்டு இருந்தார். மேலும், அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சியில் இருந்து அகற்றப்படும் வரை காலில் செருப்பு அணியமாட்டேன் என்றும் அவர் கூறியிருந்தார்.

    Advertisement

    சாட்டை அடி

    பின்னர் இது குறித்து விளக்கமளித்த அண்ணாமலை, இது தமிழர் பாரம்பரியத்தின் ஒரு பகுதி என்றும் முருகனுக்கு தான் அளித்த காணிக்கை என்றும் கூறியிருந்தார். "சட்டை அடி" என குறிப்பிடப்படும் இந்த நடைமுறை, தமிழ் இந்து கலாச்சாரத்தில் ஒரு வகையான நேர்த்திக்கடன் கருதப்படும் என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறி வந்தனர்.

    அரசியல் முரண்பாடு

    பெரியாரின் பகுத்தறிவு என்பது எப்போதுமே மத மூடநம்பிக்கைகளுக்கு எதிரான பிரசாரமாகவே இருந்துள்ளது. மறுபுறம், அண்ணாமலை பாஜகவிலேயே நீண்ட காலம் இருந்த நிலையில், அவரது அரசியல் இந்து மத அடையாளங்களுடன் தொடர்புடையதாகவே பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே அவரது பெரியார் பதிவு இணையத்தில் விவாதமாகியுள்ளது.

    Advertisement

    2024ஆம் ஆண்டு முருகனுக்கு காணிக்கை என தன்னை தானே சாட்டையால் அடித்து கொண்ட அண்ணாமலை, 2026ஆம் ஆண்டு பெரியார் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக போராடியவர் என பதிவிட்டுள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.

    English Summary

    Former Tamil Nadu BJP president Annamalai post paying tribute to Periyar on his 148th birth anniversary(பெரியார் பிறந்த நாள் குறித்து அண்ணாமலை): Annamalai Periyar Birthday post latest news in tamil.