அண்ணாமலை பெரியாரை புகழ்கிறார்.. விஜய் மோடியை வாழ்த்துகிறார்.. அப்போ யார் சங்கி? யார் Urban Naxal?

  • சென்னை: அண்ணாமலை பெரியாரை புகழ்கிறார்.. முதலமைச்சர் விஜய் மோடியை புகழ்கிறார்.. தமிழக அரசியலில் எதிரெதிர் முகாம்களில் இருப்பதாக கருதப்படும் இருவரின் வாழ்த்துப் பதிவுகளும் இன்று ஒரே நாளில் கவனம் பெற்றுள்ளது.. "அப்படியானால் யார் சங்கி.. யார் Urban Naxal?" என்ற கேள்வி சோஷியல் மீடியாடிவில் வேகமாக பரவி வருகிறது. இதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!!!

    Advertisement

    பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.. அந்த லிஸ்ட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யும் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    Advertisement

    அண்ணாமலையின் அதிரடி

    "வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும்" பிரதமர் நரேந்திர மோடிக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதாக விஜய் தனது பதிவில் கூறியுள்ளார். நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் மோடி வாழ வேண்டும் என்றும் வாழ்த்தியுள்ளார்.

    ஆனால், விஜய்யின் இந்த வாழ்த்து மட்டும் இப்போது பேசுபொருளாகவில்லை. அவர் மோடியை வாழ்த்திய விதம்தான் அரசியல் விவாதத்துக்கு வழிவகுத்திருக்கிறது.

    ஏனென்றால், கடந்த தேர்தல் பிரச்சார காலத்தில் தவெக தரப்பில் திமுக அரசியல் எதிரி, பாஜக கொள்கை எதிரி என்று விஜய் தெளிவாக கூறியிருந்தார். குறிப்பாக, "எங்கள் அரசியல் எதிரி திமுக.. கொள்கை எதிரி பாஜக" என்ற நிலைப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தியிருந்தார்.

    Advertisement

    மோடிக்கு விஜய் வாழ்த்து

    அப்படியிருக்க, அதே பாஜகவின் பிரதமரான மோடியின் பிறந்தநாளில், அவரை "வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருபவர்" என்று முதலமைச்சர் விஜய் பாராட்டியிருப்பது அரசியல் ரீதியாக விவாதிக்கப்படுகிறது.

    இது ஒருபுறமிருந்தாலும், இன்றைய தினம் அண்ணாமலையும் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆனால், அதே நாளில் அண்ணாமலை வெளியிட்ட இன்னொரு பதிவு தான் இப்போது விஜய்யின் பதிவுடன் சேர்த்து பேசப்படுகிறது. அது என்ன தெரியுமா? தந்தை பெரியாருக்கு அண்ணாமலை தெரிவித்த பிறந்தநாள் வாழ்த்து தான்.

    பெரியார் பிறந்தநாளையொட்டி அண்ணாமலை வெளியிட்ட பதிவில், சமூக சீர்திருத்தப் போராட்டங்களில் முக்கியப் பங்காற்றி, தமிழகத்தின் சமூக மற்றும் அரசியல் வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் பெரியார்.. சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகள், மூடநம்பிக்கைகளுக்கு எதிராக தனது வாழ்க்கையின் பெரும்பகுதியைச் செலவிட்ட பெரியாரின் பொதுவாழ்வை நினைவுகூர்ந்து வணங்குகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    Advertisement

    அண்ணா, பெரியார், மோடி

    நெட்டிசன்கள், இதையும் சாதாரண வாழ்த்து பதிவு போல கடந்து செல்லவில்லை... ஏனென்றால், செப்டம்பர் 15-ம் தேதி பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளிலும் அண்ணாமலை புகழாரம் சூட்டியிருந்தார். ஊழலுக்கும் குடும்ப அரசியலுக்கும் எதிராக வாழ்ந்தவர் அண்ணா என்றும், எளிமை மற்றும் நேர்மையை தனது அரசியல் வாழ்க்கையில் கடைப்பிடித்தவர் என்றும் அண்ணாமலை அப்போது குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

    அதாவது, ஒருபக்கம் விஜய்.. பாஜகவை கொள்கை எதிரி என்று கூறிய நிலையில், அதே பாஜகவின் பிரதமர் மோடியை "வலிமையான இந்தியாவை உருவாக்க அர்ப்பணிப்புடன் செயல்படுபவர்" என்று வாழ்த்துகிறார்.

    மறுபக்கம் அண்ணாமலையோ, பாஜகவில் இருந்தவர்.. இப்போது தனி அரசியல் இயக்கத்தை நடத்தி வரும் நிலையில், திமுகவின் அடையாளங்களாக பார்க்கப்படும் அண்ணா மற்றும் பெரியாருக்கு புகழாரம் சூட்டியிருக்கிறார். இதைத்தான் சோஷியல் மீடியாவில் சிலர் ஒன்றாக வைத்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    Advertisement

    "Who's Sanghi, who's Urban Naxal - I don't know, bro" என்று ஒரு பதிவில் விஜய்யின் மோடி வாழ்த்தையும், அண்ணாமலையின் பெரியார் வாழ்த்தையும் ஒன்றாக வைத்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

    இதன் பின்னணி என்ன?

    தமிழக அரசியலில் "சங்கி" என்ற வார்த்தை பெரும்பாலும் பாஜக அல்லது இந்துத்துவ அரசியலுடன் தொடர்புபடுத்தியும், "Urban Naxal" என்ற வார்த்தை இடதுசாரி அல்லது அரசுக்கு எதிரான தீவிர அரசியல் நிலைப்பாடுகளைக் குறிக்கும் வகையிலும் அரசியல் விவாதங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இப்போது சோஷியல் மீடியாவில் எழுப்பப்படும் கேள்வி வேறு மாதிரி இருக்கிறது.

    Advertisement

    கிளம்பிய விவாதங்கள்

    பெரியாரை யார் புகழ்ந்தாலும் அது அந்த நபரின் அரசியல் அடையாளமாகிவிடுமா? மோடியை யார் வாழ்த்தினாலும் அது பாஜக ஆதரவு என்று எடுத்துக்கொள்ள வேண்டுமா?

    அல்லது, அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும், ஒரு தலைவரின் பிறந்தநாளில் வாழ்த்து தெரிவிப்பது தனிப்பட்ட அரசியல் நிலைப்பாட்டிலிருந்து வேறுபட்ட ஒன்றா? என்ற இந்த கேள்விகளுக்குத்தான் இப்போது இணையத்தில் விவாதம் ஆரம்பமாகி உள்ளது..

    பிறந்தநாள் வாழ்த்தில் கூட அரசியலைத் தேட வேண்டுமா? என்று ஒரு தரப்பு நெட்டிசன்களின் கேள்விக்கும், "அரசியல் தலைவர்கள் வெளியிடும் ஒவ்வொரு பதிவும் அவர்களின் அரசியல் நிலைப்பாட்டை பிரதிபலிக்கிறதா?" என்ற இன்னொரு தரப்பின் கேள்விக்கும் இடையே இந்த விவாதம் தொடர்கிறது.

    விஜய்யின் மோடி வாழ்த்தும், அண்ணாமலையின் பெரியார் வாழ்த்தும் ஒரே நாளில் பேசுபொருளாகியிருப்பது, இந்த விவாதத்தை இன்னும் சுவாரஸ்யமாக்கியுள்ளது.

    மொத்தத்தில், "யார் சங்கி.. யார் Urban Naxal?" என்ற அந்த இணையவாசியின் கேள்விக்கு பதில் சொல்வதைவிட, இந்த 2 பதிவுகளையும் வைத்து தமிழக அரசியலில் இப்போது நடக்கும் அடையாள அரசியல் குறித்த விவாதம்தான் கவனத்தை ஈர்த்துள்ளது...!!!

    English Summary

    Annamalai Praises Periyar.. Vijay Wishes Modi! So Who Is Sanghi? Who Is Urban Naxal?