நாளை கண்டிப்பா எல்லோரும் போகணும்.. ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தினருக்காக அண்ணாமலை வெளியிட்ட வீடியோ

  • சென்னை: நாடு முழுவதும் நாளை 80வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தான் 'வி தி லீடர்ஸ்' இயக்கத்தினர் நாளை செய்ய வேண்டிய பணி குறித்து அண்ணாமலை முக்கிய கோரிக்கையை வைத்துள்ளார்.

    Advertisement

    பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை 'வி தி லீடர்ஸ்' என்ற இயக்கத்தை தொடங்கி உள்ளார். இந்த இயக்கத்தில் 19 லட்சத்துக்கு 50 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். விரைவில் இந்த இயக்கத்தை அண்ணாமலை அரசியல் கட்சியாக தொடங்க உள்ளார்.

    Advertisement

    இந்நிலையில் தான் நாளை சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் அண்ணாமலை இன்று முக்கிய வீடியோவை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை தான் பேசும் வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அதில் அண்ணாமலை கூறியுள்ளதாவது:

    ''என் அருமை சொந்தங்களே, தம்பியாக அனைவருக்கும் 80வது சுதந்தி தின வாழ்த்தை தெரிவித்து கொள்கிறேன். 'வி தி லீடர்ஸ்' சொந்தங்களே, நாளை 80வது சுதந்திரதின நாளில் தமிழகத்தில் கிராம சபைகூட்டங்கள் காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. 12,525 கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. வி தி லீடர்ஸ் இயக்கத்தின் முக்கியமான நோக்கமே அடிப்படை மாற்றம் தான். 'மாறுவோம் மாற்றுவோம்' என்ற முழகத்துடன் நாம் களத்தில் இருக்கிறோம்.

    Advertisement

    இதனால் வி தி லீடர்ஸ் தன்னார்வலர்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பது மிகமிக அவசியமாகிறது. நாளை நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும். உள்ளூர்காரர்கள், பெண்கள், இளைஞர்களை அழைத்து செல்ல வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின மக்களை அழைத்து செல்லுங்கள். நம்முடைய அமைப்பில் உள்ளவர்கள் கிராம சபை கூட்டத்தை போட்டி, பொறாமையில் அதனை சண்டையிடும் களமாக பயன்படுத்தமாட்டோம். கிராமத்தின் ஆரோக்கியமான வளர்ச்சிக்காக நாம் குரல் கொடுக்க வேண்டும்'' என கூறியுள்ளார்.

    மேலும் அந்த எக்ஸ் வலைதள பக்க பதிவில், ''வரும் ஆகஸ்ட் 15 அன்று, கிராம சபையில் நமது குரல் ஒலிக்கட்டும். கருத்துகளை முன்வைப்போம. தீர்வுகளை உருவாக்குவோம். கிராம சபை கூட்டத்தில் பங்கேற்போம். நமது கிராமத்தின் வளர்ச்சிக்குப் பணியாற்றுவோம். நமது கிராமம், நமது பொறுப்பு!'' என கூறியுள்ளார்.

    English Summary

    The India is set to celebrate its 80th Independence Day tomorrow. Against this backdrop, Annamalai has made a key request to the members of the ‘We the Leaders’ movement regarding the tasks to be undertaken tomorrow.