Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்!

  • சென்னை: கடந்த 18 மாதங்களாக பாஜக மூத்த தலைவர்களுடன் கருத்து வேறுபாட்டில் இருந்தேன். இனியும் அவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை என்பதால் பாஜகவிலிருந்து விலகிவிட்டேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    Advertisement

    தமிழக பா.ஜ.க.வின் முன்னாள் தலைவரான அண்ணாமலை, தனது டெல்லி பயணத்தின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை செவ்வாய்க்கிழமை அன்று சந்தித்துப் பேசினார்.

    Advertisement

    தமிழக பா.ஜ.க. தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டதில் இருந்தே அவர் கடுமையான அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

    மேலும், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. மீண்டும் தேர்தல் கூட்டணி அமைத்ததும் அவரது இந்த அதிருப்தியை மேலும் அதிகரித்ததாகத் தெரிகிறது.

    இந்தச் சூழ்நிலையில், பா.ஜ.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அண்ணாமலை கட்சித் தலைமைக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.

    அண்ணாமலை அனுப்பிய கடிதத்தின் முக்கிய விவரம்: "இந்தத் தருணத்தில், கடந்த 18 மாதங்களாகக் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுடன் நான் நடத்திய பலகட்டப் பேச்சுகளையும், அப்போது நான் வெளிப்படுத்திய மாற்றுத் கருத்துகளையும் நினைவுகூர விரும்புகிறேன்.

    Advertisement

    தமிழகத்தில் வளர்ச்சி சார்ந்த மற்றும் கலாச்சார வேரூன்றிய அரசியலை முன்னோக்கி எடுத்துச் செல்வது குறித்த எனது தொடர் சிந்தனைகளை விவரித்து, கட்சியின் உயர்மட்டத் தலைமைகளுக்கு இனிமேலும் நான் சுமையாக இருக்க விரும்பவில்லை.

    நமது மூத்த தலைவர்களுடன் நடத்திய ஆலோசனைகளுக்குப் பிறகு, தமிழக அரசியல் குறித்த நமது பார்வைகள் மற்றும் கருத்துகள் ஒன்றாக ஒத்துப்போகவில்லை என்ற முடிவுக்கு நான் வந்துள்ளேன்.

    கட்சியை விட்டு வெளியேறி, நான் அரசியலுக்கு வந்ததற்கான உண்மையான நோக்கம் என்ன என்பதை மறுபரிசீலனை செய்யவும், எதிர்காலத்தில் காற்று என்னை எத்திசை நோக்கி அழைத்துச் செல்கிறதோ அத்திசையில் பயணிக்கவும் இதுவே சரியான நேரம் என்று நான் நம்புகிறேன்.

    Advertisement

    எனவே, கட்சியின் அனைத்துக் கட்டமைப்புப் பொறுப்புகளில் இருந்தும் என்னை உடனடியாக விடுவிக்குமாறும், பா.ஜ.க.வின் முதன்மை உறுப்பினர் பதவியிலிருந்து நான் அளிக்கும் இந்த ராஜினாமாவை உடனடியாக ஏற்குமாறும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்." என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    English Summary

    Former Tamil Nadu BJP chief K. Annamalai has revealed that he had been at odds with senior BJP leaders for the past 18 months. Stating that he did not want to become a burden to the party leadership any longer, Annamalai said his decision to resign from the BJP was driven by these prolonged differences of opinion.