கோவை: பாஜக மாநில தலைவராக இருந்த அண்ணாமலை, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிலிருந்து வெளியேறினார். புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்தார். வீ தி லீடர்ஸ் என்கிற அமைப்பின் மூலம் களத்தில் வேலை செய்ய தொடங்கிவிட்டனர். வருகிற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவுள்ளனர். தவெகவுக்கு அவகாசம் வழங்கி விமர்சிக்க மாட்டேன் என கூறியிருந்தார். இந்நிலையில் திமுகவுடன் ஒப்பிட்டு தவெக மற்றும் விஜயை அண்ணாமலை விமர்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "மழை பாதிப்பு நடவடிக்கைகளை ஊராட்சி, பேரூராட்சி மட்டங்களில் செய்ய வேண்டும். கிராமப்புற உள்ளாட்சிகளில் பதவிக்காலம் முடிந்துவிட்டதால் மக்கள் பிரதிநிதிகள் இல்லை. அதிகாரிகள் மட்டுமே உள்ளனர். அவற்றில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை செய்யவில்லை. பருவமழை தீவிரமடைவதால் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.
சென்னை மாநகராட்சியில் இவ்வளவு காலம் செய்த பணிகளுக்கான பலன் கிடைக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். தமிழக அரசு தமிழ், ஆங்கிலத்தை தவிர மற்ற மொழிகள் இல்லை என்று கூறுகிறது. நம் குழந்தைகள் நிறைய மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும். தவெக அரசு இந்திய மொழியை கட்டுப்படுத்துகிறது. சமூக வலைதளத்தின் தலைநகராக நம் நாடு இருக்கிறது. சமூகவலைதள முடக்கத்தை அரசு பரிசீலனை செய்ய வேண்டும். 16 வயதிற்குட்பட்டோர் சமூக வலைதளம் பயன்படுத்துவதை கட்டுப்படுத்த வேண்டும். காவல்துறை நடுநிலையுடன் இருக்க வேண்டும். முதலமைச்சரை எதிர்த்துநாம் தமிழர் கட்சி தாராபுரம் வேட்பாளர் கார்த்திகா காவல் நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்திலும் ஈடுபட்டார். அப்போது அந்த தொகுதி தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. தேர்தல் முடிந்த பிறகு தாராபுரம் காவல்துறையினர் கோவையில் உள்ள அவரின் வீட்டிற்கு வந்து கைது செய்ய வேண்டிய கட்டாயம் என்ன. இது எல்லாம் கைது செய்யும் வழக்கே இல்லை. காவல்துறை ஆளுங்கட்சியின் கைப்பாவையாக மாறுவதை தடுக்க வேண்டும். கைது செய்வதென்றால் அன்றைக்கே செய்திருக்கலாமே. இது விசித்திரமாக உள்ளது. திமுக செய்த அதே தவறை தவெகவும் செய்ய தொடங்கியுள்ளது. செய்தி மக்கள் தொடர்புத்துறை நடுநிலையுடன் இருக்க வேண்டும். அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் செய்யும் வேலையை இங்கே நாம் செய்யக்கூடாது. மிரட்டும் செயலில் ஈடுபடக்கூடாது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. திமுக ஆட்சியில் ஆளும் கட்சியின் முகமூடியுடன் கஞ்சா கடத்தினர். தவெக ஆட்சியிலும் அதே நடக்கிறது. முதலமைச்சர் இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும். அப்போதுதான் சமூகவிரோதிகள் தவெகவில் தஞ்சமடைவது நிற்கும். ஏராளமான சமூக விரோதிகள் ஆளுங்கட்சியை கேடயமாக பயன்படுத்துகிறார்கள். நவம்பர், டிசம்பரில் உள்ளாட்சிகளுக்கு மாஸ்டர் பிளானுடன் வீ தி லீடர்ஸ் அமைப்பு செல்கிறது. ஒரு பஞ்சாயத்திற்கு என்ன பிரச்சனை உள்ளது, எப்படி சரி செய்வது என்பதை முன்னிலைப்படுத்துவோம். தமிழக மக்கள் நாகரீகமான அரசியலை எதிர்பார்க்கிறார்கள். இதை திமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் புரிந்து கொள்ள வேண்டும். தரம் தாழ்ந்து பேசுவோரை மக்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்களுக்கு வாக்களிக்கவும் தயாரில்லை. வரம்பு மீறிய பிரச்சாரங்கள் தமிழ்நாட்டில் முடிந்துவிட்டன. இது புதுவிதமான அரசியல் களம். தரம் தாழ்ந்த அரசியல் கேடு விளைவிக்கும். நாங்கள் அடிப்படை மாற்றத்திற்காக வந்துள்ளோம். எனவே தனித்து நிற்பதே எங்கள் நோக்கம்" என்றார்.தவெகவின் கொள்கை சரியில்லை
திமுக செய்த அதே தவறு
அரசியல் மாற்றம்