இணையதளம் இதுதான்.. அண்ணாமலை அரசியல் இயக்கத்தில் இணைவது எப்படி? வெளியான அறிவிப்பு

  • சென்னை: ''ஆனந்தமாகவும், அன்போடும் ஒரு அரசியல் இயக்கத்தை தொடங்க உள்ளேன். அனைவரும் www.wearetheleader.org இணையதளம் வழியாக இணையலாம்'' என்று பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை அறிவித்துள்ளார்.

    Advertisement

    பாஜகவில் இருந்து விலகி உள்ள அண்ணாமலை இன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவ் வீடியோவில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    Advertisement

    ஆனந்தமாக அன்போடு ஒரு அரசியல் இயக்கத்தை தொடங்க இருக்கிறோம். இது அரசியல் இயக்கம் தானா.. அரசியல் கட்சி இல்லையா? என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் கண்டிப்பாக தமிழகத்தில் அடுத்து நடக்க உள்ள பொதுத்தேர்தலில் நம்முடைய கட்சி போட்டியிடும். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. நிறைய தலைவர்களை தயார் செய்ய வேண்டும். நிறைய தொண்டர்கள், தன்னார்வலர்களை தயார் செய்ய வேண்டும். உத்வேகத்துடன் தயார் படுத்த வேண்டும். அதற்கான திறமையை வழங்க வேண்டும். அதற்கு கொஞ்சம் நேரம் ஆகும்.

    இதனால் இயக்கத்தை ஆரம்பித்து அதில் நிறைய மனிதர்களை உள்ளே கொண்டு வந்து அவர்களுக்கு சில இடத்தில் அரசியல் கொண்டு கற்று கொடுக்க எல்லா தரப்பு மனிதர்களை உள்ளே கொண்டு வர வேண்டும். நான் பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்ற பிறகு ஆசீர்வாதம் வாங்கிய முதல் நபர் நல்லக்கண்ணு அய்யா தான்.

    Advertisement

    மண் சார்ந்த அரசியலை முன்னெடுக்க வேண்டும். நல்ல அரசியலை முன்னெடுக்க வேண்டும். எல்லா மனிதர்களையும் உள்ளடக்கிய அரசியலை முன்னெடுக்க வேண்டும். இதனால் www.wearetheleader.org தளத்தில் தொண்டர்கள் இணையலாம்.

    இதற்காக கோவையில் அரசியல் மையம் தொடங்க உள்ளேன். அந்த மையம் அப்துல் கலாம் பெயரில் செயல்படும். இயக்கத்தில் இருந்து தேர்தலில் போட்டியிடும் நபர்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர்களே தேர்தலில் நிற்பார்கள். அதன்பிறகு சரியான நேரத்தில் அரசியல் கட்சியாக மாற்றப்படும். அடுத்த தேர்தலில் பொதுத்தேர்தலில் கட்சி போட்டியிடும். நம்புங்கள். கூட இருங்கள். சேர்ந்து புரட்சி செய்வோம். இந்திய பாரத நாட்டுக்குள் தமிழகத்தை தலைசிறந்த மாநிலமாக உருவாக்குவோம்'' என்றார்.

    English Summary

    Annamalai says that, "I am about to launch a political movement filled with joy and love. Everyone can join via the website www.wearetheleaders.org," announced Annamalai, who has quit the BJP.