அண்ணாமலையை விடாத எஸ்வி சேகர்.. சம்பாதித்ததை காப்பாத்திக்க வேண்டாமா?.. கட்சி தொடங்குவது ஏன்?

  • சென்னை: அண்ணாமலை மீண்டும் அரசியல் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறார்.. பாஜகவில் இருந்து அவர் விலகியது தொடர்பாக ஏற்கனவே பரபரப்பை ஏற்படுத்திய எஸ்வி சேகர், இப்போது மீண்டும் சில கடுமையான கருத்துகளை முன்வைத்துள்ளார்.. அண்ணாமலை தொடர்பாக தான் முன்பு கூறிய கருத்துகளை நினைவுபடுத்தியுள்ள எஸ்வி சேகர், இந்த முறை என்னென்ன குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார் என்பதுதான் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

    Advertisement

    தமிழக பாஜக அண்ணாமலை பொறுப்பு வகித்த காலத்திலிருந்தே, அவர் மீது மனக்கசப்பிலும் அதிருப்தியிலும் உள்ளவர் எஸ்.வி.சேகர்.. பலமுறை பல பேட்டிகளில் அண்ணாமலையை தாக்கி பேசியிருக்கிறார் எஸ்வி சேகர்.

    Advertisement

    அண்ணாமலை மீது விமர்சனம்

    "பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்து தானாக விலகவில்லை , அவர் பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டுள்ளார் என்று முன்பு கூறி சர்ச்சையை ஏற்படுத்தியவர் எஸ்வி சேகர்.. அண்ணாமலை தேர்தல் பணிகளில் ஈடுபட்டால் பாஜக வெற்றி பெறாது என்று பகிரங்கமாகவே விமர்சித்து, தனக்கு சமமாக இன்னொருவரை பார்க்கும் எண்ணம் அண்ணாமலைக்கு கிடையாது என்றும் கூறியிருந்தார்.

    போருக்கு செல்லும்போது ஆளுக்கு ஒரு கத்தியை எடுத்துக்கொண்டு செல்வார்கள். ஆனால் அண்ணாமலை இரண்டு சுத்திகளை கையில் வைத்துக்கொண்டு உடன் இருப்பவர்களையே வெட்டிக்கொண்டே செல்வார்.. அண்ணாமலை கடைசியில் காங்கிரஸ் கட்சியிடம் அடைக்கலம் ஆவார்" என்றெல்லாம் கடந்த காலங்களில் கணிப்புகளை வெளியிட்டவர் எஸ்வி சேகர்.

    Advertisement

    பாஜக பிரதமர் மோடி

    இதோ இன்றும் மீண்டும் அண்ணாமலையை சீண்டியிருக்கிறார் எஸ் வி சேகர்.. செய்தியாளர்களிடம் பேசிய எஸ்வி சேகர், "நான் இப்போது எந்த கட்சியிலும் இல்லை.. உறுப்பினர் கார்டை புதுப்பிக்க வேண்டும் என்று பாஜகவிலிருந்து கேட்டார்கள்.. 2013ல் பாஜகவில், பிரதமர் மோடி சொல்லிதான் சேர்ந்தேன்.. அப்போதே அவரிடம் சொல்லிவிட்டேன், எந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டேன், ஆனால் உங்களுக்காக பிரச்சாரம் மட்டும் செய்வேன் என்றேன்..

    அதற்கு பிறகு அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு என்னை பாஜகவில் பேசவே விடவில்லை.. இதை நான் வெளிப்படையாகவே எதிர்த்தேன். என்னை கட்சியிலிருந்து வெளியேற்ற அண்ணாமலை 5 முறை டெல்லி போயிட்டு வந்தார்.. கடைசியில் அவர்தான் கட்சியை விட்டே வெளியே போயிட்டார். ஆனால் இந்திய பிரதமருக்கு என்னுடைய ஆதரவு என்றுமே உண்டு.

    Advertisement

    சம்பாதித்த பணத்தை

    நானும்தான் 10 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டுவைத்துள்ளேன்.. என்னுடைய நண்பர் விவேக்கும் மரக்கரன்றுகளை நட்டு வைத்துள்ளார்.. மரக்கன்றுகளை நட்டு வைப்பதற்காக யாராவது கட்சி ஆரம்பிப்பார்களா? சம்பாதித்த பணத்தை காப்பாற்றிக் கொள்வதற்காகவே இப்படி செய்கிறார்கள்..

    பீச்சில் 50 டன் குப்பையை அப்புறப்படுத்தியதாக சொல்கிறார் அண்ணாமலை.. அதுக்கு எப்படியும் 5 கோடி ரூபாய் செலவாகியிருக்கும்.. அந்த 5 கோடி ரூபாய் எங்கிருந்து இவருக்கு வந்தது?

    இப்போது கோவை பக்கத்தில் சின்ன அமைப்பாக செயல்பட்டு வருகிறார் அண்ணாமலை.. ஆனதல், இவரைவிட எத்தனையோ பேரின் அமைப்புகள், இதே கோவையில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கின்றன...

    Advertisement

    அண்ணாமலையை பொறுத்தவரை அரசியலுக்கு லாயக்கற்றவர்.. வாயை திறந்தாலே பொய்.. ஆனால், எல்லாரையும் ஏமாற்றக்கூடிய தகுதியை மட்டும் வைத்துள்ளார்.. கட்சி ஆரம்பிக்க போவதாக சொல்வது, தான் சம்பாதித்ததை காப்பாற்றிக் கொள்ளத்தான்" என்றெல்லாம் கடுமையாகவே விமர்சித்துள்ளார் எஸ்வி சேகர்..!!!

    English Summary

    Annamalai Sve shekar Controversy.