3 மாதத்திற்குள் கட்சி லான்ச் ஆகும்.. பை-லாவை தயார் செய்யும் அண்ணாமலை.. மிகப்பெரிய முடிவு

  • சென்னை: பாஜகவிலிருந்து விலகி வீ த லீடர் எனும் அமைப்பை உருவாக்கியுள்ள பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, வருகிற அக்டோபர் மாதம் தனது புதியக் கட்சியை தொடங்கவிருக்கிறார். இதற்காக, திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் சட்ட விதிகளை ஆராய்ந்து வருகிறாராம் அண்ணாமலை.

    Advertisement

    தேசிய கட்சிகளின் அரசியல், தமிழகத்தில் செல்லுபடியாகவில்லை என்பதை உணர்ந்து மாநில அரசியலை முன்னிறுத்தி தனிக்கட்சி துவங்கும் முடிவுக்கு வந்த அண்ணாமலை, திராவிட அரசியலை மையப்படுத்தும் வகையிலும், சமூக பிரச்சனைகளை களையும் வகையிலும் தனது கட்சிக்கான பெயரை வைக்க வேண்டும் என நண்பர்களிடம் சொல்லியிருக்கிறார். அதனால், கட்சிக்கான பெயர் தேர்வு குறித்து தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது.

    Advertisement

    இந்த நிலையில், புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்கு முன்பு, கட்சியின் கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும்? கட்சியின் சட்ட விதிகள் எப்படி இருக்க வேண்டும் என்கிற ஆய்வில் குதித்துள்ளார் அண்ணாமலை.

    அவருக்கு நெருக்கமான தரப்பில் விசாரித்தபோது, ''பாஜகவின் அடிமட்ட தொண்டர்களில் 60 சதவீதம் பேரும், நிர்வாகிகள் தொடர்பில் 40 சதவீதம் பேரும் அண்ணாமலை பக்கம் வந்து விட்டனர். பாஜகவில் இருந்த இளைஞர்கள் 100 சதவீதம் அண்ணாமலையால் ஈர்க்கப்பட்டு விட்டனர். இதைத்தாண்டி, தமிழகத்தில் திராவிட கட்சிகள் மற்றும் புதியதாக ஆட்சியை பிடித்துள்ள தவெக கட்சி ஆகியவற்றை விரும்பாத இளைஞர்களும் அண்ணாமலையின் அரசியலில் இணைய தங்களின் பெயர்களை பதிவு செய்து வருகிறார்கள்.

    Advertisement

    இது ஒருபுறம் இருக்க, கட்சியின் கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதில் தற்போது கவனம் செலுத்துகிறார். குறிப்பாக, கட்சியின் அதிகாரமிக்க தலைமை பதவி என்பது தலைவர் என்பதாக இருக்க வேண்டுமா? பொதுச்செயலாளர் என்பதாக இருக்க வேண்டுமா? மாநில அளவிலான பதவி களின் எண்ணிக்கை 10-க்குள் இருக்க வேண்டுமா? அல்லது அதிகரிக்கச் செய்யலாமா? என்பது குறித்த விவாதங்கள் நடந்துகொண்டிருக்கிறது.

    முக்கியமாக, திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் சட்டவிதிகளை (பை-லா) ஆராய்ந்து வருகிறார். ஒரு கட்சியின் சட்டவிதிகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு திமுக, அதிமுக பை-லாக்கள் தான் வலிமையானவை. அதனால், அக்கட்சிகளில் உருவாக்கப்பட்ட சட்டவிதிகளை உள்வாங்கி தனது கட்சியின் சட்ட விதிகளை உருவாக்கும் நோக்கத்தில் ஆராய்ந்து வருகிறார் அண்ணாமலை. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படும்போது, எந்த கோணத்திலும் அது ரிஜெக்ட் ஆகி விடக்கூடாது.

    Advertisement

    அதாவது, கட்டமைப்பும் சட்டவிதிகளும் ஜனநாயகரீதியாக இருந்தால் தான் புதிய கட்சியின் பெயரை தேர்தல் ஆணையம் பதிவு செய்யும். இல்லையெனில் மனுவை திருப்பி அனுப்பி, திருத்தி எடுத்து வாருங்கள் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் உத்தரவிடுவார்கள். அந்த சூழல் எதுவும் தனது கட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகவே கட்சியின் கட்டமைப்பையும் கட்சியின் சட்டவிதிகளையும் தீவிரமாக ஆராய்ந்து வருகிறார் அண்ணா மலை. அந்த வகையில், தனது கட்சியின் தலைவராக அண்ணாமலை இருப்பாரா? அல்லது பொதுச்செயலாளராக இருப்பாரா? என்பதில் மட்டும் தீர்மானிக்கப்படாமல், இது குறித்தும் தனது நட்பு வட்டாரத்தில் விசாரித்த படி இருக்கிறார். பெரும்பாலானோரின் கருத்து, தலைவராக நீங்கள் இருக்க வேண்டும் என்பதாகவே இருக்கிறது.

    Advertisement

    இன்னும் 3 மாதங்களில் அனைத்து ஆலோசனைகளையும் முடித்து விட்டு அக்டோபரில் தனது கட்சியை பதிவு செய்யவிருக்கிறார் அண்ணாமலை'' என்று விவரிக்கிறார்கள்.

    - சிறப்பு நிருபர் எழில்

    English Summary

    Annamalai to launch his party in 3 months: His party will follow DMK, AIADMK By Law