பள்ளி, கோயில் அருகே டாஸ்மாக்.. கலெக்டரிடம் மனு கொடுப்போம்.. அண்ணாமலை அழைப்பு

  • சென்னை: தமிழகம் முழுவதும் கல்வி நிறுவனங்கள், வழி பாட்டுத் தலங்கள், பஸ் நிலையங்கள் அருகே உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் அனைத்தையும் மூட வலியுறுத்துவோம் என்றும், மது அரக்கனை ஒழிக்க ஒன்றிணைவோம், தமிழகத்தை காப்போம் என்று வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து, பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரும், வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனருமான அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: தமிழகம் முழுவதும் கல்வி நிறுவனங்கள், வழி பாட்டுத் தலங்கள், பஸ் நிலையங்கள் அருகே உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் அனைத்தையும் மூட வலியுறுத்துவோம்.

    Advertisement

    சென்னை நகரின் சில பகுதிகளில் நாம் மேற்கொண்ட கள ஆய்வின்படி பல டாஸ்மாக் மதுக்கடைகள், பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள்ளாகவே இயங்கி வருகின்றன.

    தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும், இது போல, பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்கு உள்ளாக இயங்கும் டாஸ்மாக் கடைகளை மூட, மக்கள் நேரடியாகவோ, அல்லது நமது வீ தி லீடர்ஸ் அமைப்பின் மூலமாகவோ, கலெக்டரிடம் மனு கொடுப்போம். மது அரக்கனை ஒழிக்க ஒன்றிணைவோம். தமிழகத்தைக் காப்போம். மாறுவோம், மாற்றுவோம் என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    Annamalai, founder of the 'We the Leaders' organization, has called for the closure of all TASMAC liquor shops located near educational institutions, places of worship, and bus terminals across Tamil Nadu, urging people to unite to eradicate the "demon of alcohol" and save the state.