அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்


  • சென்னை: பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விரைவில் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுபற்றி அண்ணாமலை இன்னும் எதுவும் கூறவில்லை. இந்நிலையில் தான் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. அண்ணாமலை முதலில் புதிய இயக்கம் ஒன்றை தொடங்க உள்ளதாகவும், அந்த இயக்கத்தின் பெயர், விவரம் அதன் செயல்பாடு குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

    Advertisement

    முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை கடந்த 2020 ஆம் ஆண்டில் பாஜகவில் சேர்ந்தார். உடனடியாக அவர் பாஜக மாநில தலைவர் பதவியை எட்டிப்பிடித்தார். ஆனால் கடந்த ஆண்டு அவரது மாநில தலைவர் பதவி பறிக்கப்பட்டது.

    Advertisement

    தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக, அதிமுகவுடன் கூட்டணி வைத்தது. இந்த கூட்டணி சுமூகமாக இருக்க வேண்டும் என்பதற்காக அண்ணாமலையிடம் மாநில தலைவர் பதவி பறிக்கப்பட்டு நயினார் நாகேந்திரனிடம் வழங்கப்பட்டது.

    இந்த அதிமுக - பாஜக கூட்டணி சட்டசபை தேர்தலில் தோல்வியை தழுவியது. அதிமுக 47 தொகுதிகளிலும், பாஜக ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் அண்ணாமலை போட்டியிடவில்லை. இந்நிலையில் தான் பாஜகவின் தோல்வியை தொடர்ந்து அண்ணாமலை விரைவில் தமிழகத்தில் புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    Advertisement

    இந்நிலையில் தான் அண்ணாமலை உடனடியாக அரசியல் கட்சி தொடங்கும் முயற்சியை கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதலில் தனி இயக்கம் ஒன்றை கட்டமைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது அண்ணாமலை தற்போது "We the Leaders" என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இது தமிழ்நாட்டில் கோவையை மையப்படுத்தி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் அதனை இயக்கமாக மாற்றும் திட்டத்தில் அல்லது வேறு பெயரில் புதிய இயக்கத்தை அண்ணாமலை உருவாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்த இயக்கத்தின் கீழ் அண்ணாமலையை போன்ற ஒத்த எண்ணம் கொண்டவர்களை அணியாக ஒருங்கிணைக்கவும், இளைஞர்கள், இளம்பெண்களை இயக்கத்தின் கீழ் கொண்டு வந்து அவர்களுக்கு அரசியல் சார்ந்த பயிற்சி அளிப்பது உள்ளிட்டவற்றை மேற்கொள்ள அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அடுத்த 6 மாதங்களுக்கு புதிய கட்சி தொடங்கும் எண்ணத்தில் அண்ணாமலை இல்லை என்று கூறப்படுகிறது.

    Advertisement

    முதலில் இந்த இயக்கத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அடுத்தக்கட்ட நகர்வை அண்ணாமலை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    English Summary

    Annamalai New Movement: Reports have been circulating that Annamalai, the former State President of the BJP, is soon going to launch a political party. Annamalai himself has not yet made any statement regarding this matter. Amidst this context, new information has now emerged. It is reported that Annamalai intends to first launch a new movement; sensational details regarding the name, specifics, and operational scope of this movement have now come to light.