அடுத்த அதிர்ச்சி.. அண்ணன் சீர் திட்டத்திற்கும் செக் வைத்த தவெக.. பெண்களுக்கு அடி மேல் அடி

  • சென்னை தவெக ஆட்சியமைத்து 5 மாதங்களாகிறது. தேர்தல் நேரத்தில் சொன்னபடி எந்த வாக்குறுதியையும் தவெக நிறைவேற்றவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. 200 யூனிட் இலவச மின்சாரம், விவசாயிகள் கடன் தள்ளுபடி, இலவச சிலிண்டர் அறிவிப்புகளை நடைமுறைப்படுத்துவதில் தவெக குளறுபடி செய்து வருகிறது. அந்த வகையில் திருமணத்திற்கு 8 கிராம் தங்கம் வழங்கும் அண்ணன் சீர் திட்டத்திலும் அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். தேர்தல் அறிக்கையில், ஆண்டு வருமானத்துக்கு ஒரு அளவீடை குறிப்பிட்டுவிட்டு, அரசாணையில் வேறு விதமாக மாற்றியுள்ளனர். இதனால் பல தகுதியுள்ள குடும்பங்கள் இத்திட்டத்தில் பயனடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    தவெக தேர்தல் அறிக்கையில் பல வாக்குறுதிகள் சொல்லப்பட்டன. அண்ணன் சீர் திட்டம் என்று அறிவிக்கப்பட்டிருந்துது. "ஆண்டு வருமானம் 5 லட்சத்திற்கும் குறைவாக உள்ள குடும்பங்களில் நடைபெறும் திருமணங்களில், மணப்பெண்ணுக்கு 8 கிராம் (ஒரு சவரன்) தங்கம், பட்டு சேலை வழங்கப்படும்" என்று தவெக வாக்குறுதியில் கூறப்பட்டிருந்தது. இந்த அறிவிப்புக்கு பெண்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது.

    Advertisement

    அண்ணன் சீர் திட்டம்

    தற்போது இத்திட்டம் தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், "ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்குள் உள்ள குடும்பங்களில் திருமணத்தின்போது, 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டு புடவை அண்ணன் சீர் திட்டத்தில் வழங்கப்படும். இத்திட்டத்தை ஆண்டு தோறும் செயல்படுத்த நிர்வாக அனுமதி வழங்கப்படுகிறது. இதற்கான நிதியாக நடப்பு நிதியாண்டில் முதல்கட்டமாக ரூ.812 கோடி ஒதுக்கப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

    தவெக தேர்தல் அறிவிப்புக்கும், அரசாணைக்கும் உள்ள வித்தியாசத்தால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். முக்கியமாக பெண்கள் மிகுந்த அதிர்ச்சியில் இருக்கிறார்கள். ஏற்கனவே ஆண்டுக்கு 6 சிலிண்டர் வழங்கப்படும் என அறிவித்துவிட்டு 3 சிலிண்டர் மட்டுமே வழங்கப்படும் என்று அரசாணை வெளியிட்டிருந்தனர். தற்போது மற்றொரு முக்கியமான திட்டத்திலும் தவெக அரசு மாற்றி அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    தவெக அடுத்த அதிர்ச்சி

    கடந்த அதிமுக ஆட்சியில் தாலிக்கு தங்கம் என நடைமுறையில் இருந்த திட்டத்தை தான் இப்போது அண்ணன் சீர் என அறிவித்துள்ளனர். ஆனால் கடந்த காலங்களில் இத்திட்டத்தின் மூலம் நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தினர் மிகுந்த பயனடைந்தனர். தற்போது நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தினர் இத்திட்டத்ததால் பயனடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தவெக தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி செயல்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    English Summary

    TVK Government released GO for Annan Seer scheme. Women shocked over TVK election manifesto and GO is totally different.