எறும்பு சட்னி சாப்பிட்டிருக்கீங்களா? அதில் என்ன கலக்குறாங்க தெரியுமா? கற்பனைகூட செய்ய முடியல

  • சென்னை: எறும்பு சட்னி ஓட்டலில் பார்த்திருக்கிறீர்களா? மரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் சிவப்பு எறும்பை பிடித்து வந்து சட்னி செய்து கொண்டிருக்கிறார்கள் நம்ம நாட்டில்.. இதை கேட்டால், முதலில் நமக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும். ஆனால், ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் இது ஒன்றும் புதிதான விஷயம் இல்லை. தலைமுறை தலைமுறைகளாகவே, அந்த பகுதியிலுள்ள பழங்குடியின மக்களின் ஃபேவரைட் டிஷ் இந்த சிவப்பு எறும்பு சட்னிதான்.. இப்போது திடீரென இந்த சட்னி அங்கு டிரெண்டாக ஆரம்பித்து விட்டது... ஏன்?

    Advertisement

    உலகின் பல்வேறு பகுதிகளில் பல நூற்றாண்டுகளாக பூச்சிகள் உணவாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளில் மட்டுமல்லாமல், நம்முடைய இந்தியாவிலும் இப்படிப்பட்ட உணவுப் பழக்கங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

    Advertisement

    அதிலும் ஒடிசாவில் தயாரிக்கப்படும் இந்த சிவப்பு எறும்பு சட்னி, அதன் ஸ்பெஷல் டேஸ்ட், மற்றும் பாரம்பரியத்தால் தனி அடையாளத்தை பெற்றுள்ளது.

    "ரெட் வீவர் ஆன்ட்ஸ்"

    "ரெட் வீவர் ஆன்ட்ஸ்" என்று அழைக்கப்படும் இந்த சிவப்பு எறும்புகளை அந்த பகுதி மக்கள் "காய்" என்று அழைக்கிறார்கள். இதனால் இதை வைத்து தயாரிக்கப்படும் சட்னி ?காய் சட்னி" என்கிறார்கள்.. இந்த சட்னி வெறும் வித்தியாசமான உணவு மட்டுமல்ல. இதற்கு தனி வரலாறே உள்ளது.. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, 2024 ஜனவரி 2-ம் தேதி மயூர்பஞ்சின் "சிமிலிபால் காய் சட்னி"க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.

    Advertisement

    ஆனால், இந்த சட்னி தயாராகும் விதத்தைப் பார்த்தால் தான் விஷயம் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கிறது. மயூர்பஞ்ச் காட்டு பகுதிகளில் மரங்களுக்குச் செல்லும் மக்கள், அங்குள்ள சிவப்பு எறும்புகளின் கூடுகளை சேகரிக்கிறார்கள்... இவை மரங்களில் இலைகளை ஒன்றோடு ஒன்று இணைத்து கூடுகளை உருவாக்கும். பொதுவாக அதிகாலை நேரத்தில் இந்தக் கூடுகள் சேகரிக்கப்படுகின்றன. எறும்புகளுடன் சேர்த்து அவற்றின் முட்டைகளும் சேகரிக்கப்படுகின்றன.

    மிளகாய், புளி, இஞ்சி

    இப்படி எறும்புகளை பிடிப்பது அவ்வளவு சுலபமான வேலையும் கிடையாது... சிவப்பு எறும்புகள் கடித்தால் ஊசியால் குத்தியது போன்ற பயங்கரமான வலி ஏற்படுமாம். தோலில் கொப்புளங்களும் ஏற்படலாம். அதனால் அவற்றின் கூடுகளை சேகரிப்பவர்கள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டியிருக்கிறது.

    Advertisement

    கூட்டிலிருந்து எறும்புகள் சேகரிக்கப்பட்டதும், அவற்றை சுத்தம் செய்து, உப்பு, இஞ்சி, பூண்டு, மிளகாய் போன்ற பொருட்களுடன் சேர்த்து வைத்து மசாலா அரைக்கிறார்கள். சில இடங்களில் புதினாவும் சேர்க்கப்படுகிறது. இறுதியில் காரமும் புளிப்பும் சமமான அளவில் சட்னி ரெடியாகி விடுகிறது.. இதை சாதம், கேழ்வரகு உள்ளிட்ட உள்ளூர் உணவுகளுடன் சேர்த்து தொட்டுக் கொண்டு சாப்பிடுகிறார்கள்.

    கலர்புல் குடைமிளகாய் சட்னி! சப்பாத்தி, தோசைக்கு வித்தியாசமான சுவையில் கேப்சிகம் சைட் டிஷ்!

    சிவப்பு எறும்பு சட்னி சத்துக்கள்

    இதில் இன்னொரு ஆச்சரியமான விஷயமும் இருக்கிறது.. இந்த சட்னி காட்டுப் பகுதியில் வசிக்கும் மக்களின் வீட்டு சமையலோடு மட்டும் நின்றுவிடவில்லை. மயூர்பஞ்ச் பகுதியில் உள்ள வாரச்சந்தைகளிலும் இது விற்பனை செய்யப்படுகிறது. சில ஓட்டல்களிலும் சிவப்பு எறும்பு சட்னி என்று பிரத்யேகமாக கிடைக்கிறது. அதன் காரமும் புளிப்பும் கலந்த சுவை பலருக்கும் பிடித்திருப்பதால், பொதுமக்களும் ஆர்வத்துடன் வாங்கிச் சாப்பிடுகின்றனர்.

    Advertisement

    இந்த எறும்பு சட்னியில் புரதம், கால்சியம், இரும்பு, துத்தநாகம், வைட்டமின் B-12 உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் இருக்கிறதாம்.. இதனால் உணவு, பாரம்பரியம், ஊட்டச்சத்து மட்டுமல்லாமல், நூற்றுக்கணக்கான பழங்குடியின குடும்பங்களின் வாழ்வாதாரமாகவும் இந்த சட்னி மாறியுள்ளது.

    அட்லி, சட்னி பற்றியெல்லாம் சட்டசபையில் பேசுறீங்களே! கிட்னி குறித்து எப்போ பேசுவீங்க? அதிமுக தாக்கு

    மூக்கை துளைக்கும் வாசனை

    மரத்தில் இலைகளுக்கு நடுவே உள்ள சின்ன எறும்புக் கூட்டை பிடித்து, அதை சேகரித்து, அரைத்து, காரமும் புளிப்புமாக ஒரு சட்னியாக்கி, இன்று சந்தையிலும் ஓட்டல்களிலும் விற்பனை செய்வது வரை இந்த உணவின் அத்தனை விஷயமும் வித்தியாசமாக உள்ளது..

    Advertisement

    ஆனால் கடந்த நாட்களாகவேஇந்த உணவை திடீரென இணையத்தில் வைரலாக்கியிருக்கிறார்கள்.. யாராவது ஒடிஷா பக்கம் போய், இந்த சட்னியை சாப்பிட்டார்களா தெரியவில்லை.. சோஷியல் மீடியாவில் எங்கே திரும்பினாலும் இந்த சிவப்பு எறும்பு சட்னி வாசம் மூக்கை துளைத்தெடுத்து கொண்டிருக்கிறது...!!

    English Summary

    Have You Tried Ant Chutney? Do You Know What They Mix Into It? You Can’t Even Imagine