சென்னை: நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை விருகம்பாக்கத்தில், நீட் எதிர்ப்பு கூட்டு இயக்கம் சார்பில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தினை மாணவர்கள் நடத்தி வருகின்றனர். இன்று 10 வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. மாணவர்களின் இந்த போராட்டத்திற்கு கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் ஆபிஜித் தீப்கே ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் 4 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற நிலையில் ஒருவருக்கு கடந்த 6 ஆம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று 10 வது நாள் ஆகிய நிலையில் 3 மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
நீட் தேர்வே கூடாது என்பதுதான் தமிழகத்தின் நிலைப்பாடாக உள்ளது. நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் தீவிரமாக நடைபெற்றது. அப்போது, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றே தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றன. நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும். 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ கல்லூரி சேர்க்கை வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மத்திய அரசு இதற்கு செவி மடுக்க மறுக்கிறது. இதற்கிடையே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சியின் அலுவலகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. இந்த உண்ணாவிரத போராட்டம் கடந்த 1ம் தேதி தொடங்கியது. 'நீட் எதிர்ப்பு கூட்டு இயக்கம்' சார்பில் நடத்தப்பட்டு வரும் இந்த உண்ணாவிரதத்தில் 10க்கும் அதிகமானவர்கள் பங்கேற்று வருகின்றனர். இந்த உண்ணாவிரத போராட்டம் 10-வது நாளை எட்டியுள்ளது. ஆரம்பத்தில் 4 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற நிலையில் ஒருவருக்கு கடந்த 6 ஆம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று 10 வது நாள் ஆகிய நிலையில் 3 மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இந்நிலையில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் ஆபிஜித் தீப்கே இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். நீட் எதிர்ப்புக் கூட்டியக்கம் தமிழ்நாடு முன்னெடுத்து வரும் போராட்டத்திற்கு வீடியோ அழைப்பின் மூலம் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளார். உண்ணாவிரதம் இருந்து வரும் மாணவர்களிடம் வீடியோ காலில் பேசிய ஆப்ஜித் தீப்கே, உங்களது போராட்டத்திற்கு ஆதரவு தருவதாக கூறினார். "நீட் ஒழிக்கப்பட வேண்டும்.. கல்வி மாநிலப்பட்டியலுக்கே மாற்ற வேண்டும்" என்ற நமது போராட்டக் கோரிக்கைகளுக்கு தனது ஆதரவை கூறினார். மேலும் அவர், உடல்நிலை சீரானதும் நமது போராட்டக் களத்திற்கு நேரில் வந்து போராட்டத் தோழர்களைச் சந்திப்பதாகவும் உறுதி அளித்தார். டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டம் வெற்றி பெற்ற நிலையில், இப்போராட்டமும் வெற்றி பெறும் என நம்பிக்கையுடன் சென்னை விருகம்பாக்கத்தில் மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். 10 வது நாளை எட்டியுள்ள நிலையில், மாணவர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர், திரைத்துறையினர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவின் அண்ணனான மணிரத்னமும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அங்கே தொடர்ந்து இருந்து வருகிறார்.சென்னையில் உண்ணாவிரத போராட்டம்
ஆப்ஜித் தீப்கே ஆதரவு
மாணவி அனிதாவின் அண்ணன்