லார் கிப்பானுடன் நடிகர் விக்ரம் எதேச்சையாக வீடியோ! சிக்கலில் தொழிலதிபர்! முன்ஜாமீன் கிடைச்சாச்சு

  • சென்னை: நடிகர் விக்ரம் விளையாடிய லார் கிப்பான் குரங்கு விவகாரம், தொழிலதிபர் கேசவநாதனுக்கு ஈரோடு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது. இவருடைய பண்ணையில் இருந்து லார் கிப்பான், வெளிநாட்டு குரங்குகள், செர்வால் பூனைகள் உள்ளிட்டவைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    Advertisement

    விக்ரம் அண்மையில் ஒரு குரங்குடன் விளையாடும் வீடியோவை விக்ரம் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். குரங்கிடம் பேசிக் கொண்டே அதை போல் முகப்பாவனைகளை மாற்றும் வகையில் அந்த வீடியோ அமைந்திருந்தது.

    Advertisement

    அந்த குரங்கு அரிய வகையானது என சொல்லப்படுகிறது. தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாக கொண்ட லார் கிப்பான் என்பது இந்த குரங்கின் பெயர் ஆகும்.

    இது தற்போது அழிவின் விளிம்பில் உள்ள பாதுகாக்கப்பட்ட அரியவகை உயிரினம் ஆகும். இந்த பாதுகாக்கப்பட்ட வெளிநாட்டு விலங்கை வளர்ப்பது சட்டவிரோதம். அதற்கான உரிய அனுமதியை காவல் துறையிடம் பெற்று அந்த ஆவணங்களுடன் வளர்க்கலாம்.

    இந்த குரங்கு சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள விக்ரம் சம்பந்தியின் பண்ணை வீட்டில் வளர்க்கப்படுவதாக சொல்லப்படுகிறது. குரங்கு குறித்து சர்ச்சை எழுந்ததும் இன்ஸ்டா பக்கத்தில் இருந்து அந்த வீடியோவை நடிகர் விக்ரம் நீக்கியுள்ளார்.

    Advertisement

    குரங்கு குறித்த வீடியோ வைரலான நிலையில் வனத்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் அந்த குரங்கு ஈரோட்டில் உள்ள நபர் விக்ரமின் மகள் வீட்டிற்கு விற்பனை செய்ததாக தெரிகிறது. அங்கு விடுமுறைக்கு சென்ற விக்ரம், அந்த குரங்குடன் விளையாடி வீடியோ போட்டதும் தெரியவந்தது.

    மணிப்பூரைச் சேர்ந்த லைக்ராம் சிங் என்பவர் மலேசியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 8 கிப்பான் குரங்குகள் தன்னிடம் இருப்பதாக கடந்த 2020 ஆம் ஆண்டு மத்திய அரசின் பரிவேஷ் எனும் தளத்தில் பதிவு செய்துள்ளார்.

    மணிப்பூரில் இருந்து 3 கிப்பான்கள் ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த கேசவநாதன் என்பவருக்கு தத்தெடுப்பு முறையில் கொடுக்கப்பட்டதாம். அதில் ஒன்று இறந்துவிட்ட நிலையில் மற்ற இரு குரங்குகள் உயிருடன் இருக்கின்றன.

    Advertisement

    இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஈரோட்டில் இருந்து 2 கிப்பான்கள் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ரங்கநாதன் என்பவருக்கு (இவரது மகனைத்தான் விக்ரம் மகள் திருமணம் செய்துள்ளார்) விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த விற்பனைகளுக்கு வனத்துறையின் அனுமதி ஏதும் இல்லை என சொல்லப்படுகிறது.

    இதையடுத்து கேசவநாதன் மீது வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காத நிலையில் பண்ணை வீட்டில் இருந்த அரிய வகை விலங்குகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    இரண்டு லார் கிப்பான் குரங்குகள், 7 செர்வால் கேட் என்னும் நெடுங்காற் பூனைகள், இரு டப்டெட் கேப்புசின் எனப்படும் அடற்சுருட்டை வால் வெளிநாட்டு குரங்கு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

    Advertisement

    இந்த விலங்குகள் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா அல்லது அங்குள்ள மறுவாழ்வு மையத்தில் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் எப்படியும் கைது செய்யப்பட்டுவிடுவோம் என்ற அச்சத்தில் கேசவநாதன் முன்ஜாமீன் கோரி ஈரோடு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவருக்கு அந்த நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது. நடிகர் விக்ரமுக்கு அளிக்கப்பட்ட நோட்டீஸ், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்தும் தகவல்கல் ஏதும் தெரியவில்லை.

    English Summary

    Anticipatory bail given to Industrialist Kesavanathan in Lar Gibbon monkey issue. Forest department seizes many rare species from his farm.