அனுபமா பரமேஸ்வரனுக்கு டார்ச்சர் தந்தது இந்த வாரிசு நடிகரா? நடிகைனா கிள்ளுக்கீரையா? வெளுத்த பிரபலம்

  • சென்னை: யூடியூப் விமர்சனங்களுக்கு மட்டும் கொந்தளிக்கும் நடிகர் சங்கமும் அம்மா அமைப்பும், அனுபமா போன்ற பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக நின்று உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய கொடுமைகளைச் செய்பவர்களை சட்டம் தண்டிக்க வேண்டும்." என்று மூத்த பத்திரிகையாளரும், சினிமா விமர்சகருமான செய்யாறு பாலு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    Advertisement

    Cheyyar Balu சேனலில் பேசியிருக்கும் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு, "கவர்ச்சிகரமான இந்த சினிமா உலகிற்குப் பின்னால், பல நடிகைகளின் வாழ்க்கையிலும் ஒரு மெல்லிய சோகமும், விவரிக்க முடியாத தனிப்பட்ட வேதனைகளும் ஒளிந்திருக்கின்றன.

    Advertisement

    சமீபத்தில் அனுபமா பரமேஸ்வரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'கடவுளின் அருளால் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்து விலகி, இப்போதுதான் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கிறேன்' என்று ஒரு போஸ்ட் போட்டிருந்தார்.

    அந்நியன் போல சைக்கோ

    அதைத் தொடர்ந்து மலையாள மீடியா ஒன்றுக்கு அவர் பேட்டி தந்திருந்தார். அப்போதுதான் அவர் ஒரு நபரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் சிக்கி, மனரீதியாகக் கடுமையான துன்புறுத்தலுக்கு ஆளாகியிருந்தது தெரியவந்தது.

    அந்த நபர் ஒரு நாள் ரெமோ போல மிகவும் அன்பாகவும் ரொமாண்டிக்காகவும் பேசுவாராம்; அடுத்த நாளே அந்நியன் போலக் கொடூரமாக நடந்து கொள்வாராம். பிறகு மறுபடியும் அம்பி போலக் குழந்தை மாதிரி அழுது மன்னிப்புக் கேட்பாராம். இப்படி மாற்றி மாற்றி பேசம் மனநிலையானது அனுபமாவிற்குப் பெரிய அளவிலான பயத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    அனுபமா கேரளா மாநிலத்தில் உள்ள ஒரு நடுத்தரக் குடும்பத்திலிருந்து தனது சொந்த உழைப்பால் சினிமாவுக்கு வந்தவர் அனுபமா.. பிரேமம், கொடி. பைசன் போன்ற படங்களில் தனது திறமையை நிருபித்தவர். பைசன் படத்திற்காகத் தூத்துக்குடியிலேயே 3 மாதங்கள் தங்கி உழைத்தவர்.

    அனுபமா பரமேசுவரன்

    ஆனால், சினிமா பின்னணி இல்லாத ஒரு பெண் என்பதால், அவரை எளிதாக அடக்கிவிடலாம் என்று நினைத்து இத்தகைய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறார்கள்.'தொடர்ந்து நடிக்கக் கூடாது, யாருடனும் பேசக் கூடாது என்று வற்புறுத்தியதுடன், 3 மாதங்களுக்குள் திருமணத்தை முடித்து அவரை வீட்டோடு முடக்கி வைக்கவும் முயன்றுள்ளார்கள். அனுபமாவின் போட்டோவை மேஜை மீது வைத்து கிழிப்பது போன்ற கொடூரமான செயல்களிலும் ஈடுபட்டிருக்கிறார்கள்.

    Advertisement

    அந்த நபரின் இத்தகைய கொடுமைகளால் அனுபமா கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகி, தூக்கமில்லாமல் தவித்து, தொடர்ச்சியாக மாத்திரைகளை உட்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.

    சொந்த தம்பி கூட தொட்டு பேச கூடாதாம்

    ஒரு கட்டத்தில், தனது சொந்த தம்பியைக் கூட தொட்டுப் பேச முடியாத அளவிற்கு அவரது மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறது. டிராகன் படத்தின் பெரிய வெற்றி விழாக்களில் கூட அனுபமா பங்கேற்க முடியாமல் போனதற்கு அந்த நபர் கொடுத்த டார்ச்சரே முக்கியக் காரணம். ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு தனது போட்டோ மார்பிங் செய்யப்பட்டபோது, தவறு செய்த இளைஞரின் எதிர்காலம் பாழாகிவிடும் என்று மன்னித்து பெருந்தன்மை காட்டியவர் இந்த அனுபமா.

    Advertisement

    தமிழ் சினிமாவில் பல போராட்டங்களுக்குப் பிறகு உயர்ந்த இடத்தைப் பிடித்தவர் சியா விக்ரம். ஆனால், மிக எளிதாக வாய்ப்புகளைப் பெற்ற காரணத்தால் துருவ் விக்ரம் போன்ற வாரிசுகளுக்கு இவ்வளவு பெரிய திமிரும் சைக்கோத்தனமும் உருவாகியிருக்கிறது.

    நடிகைன்னா கிள்ளுக்கீரையா

    தனக்கு மன அழுத்தம் அதிகமாகிவிட்டதாக அனுபமா சொல்கிறார். அதெல்லாம் எவ்வளவு பெரிய பிரச்னை. அனுபமா ஒரு பெரிய தயாரிப்பாளரின் உறவினராக இருந்தால் அவரை யாராவது சீண்ட முடியுமா? நடிகை என்றால் அவ்வளவு கிள்ளுக்கீரையா? சினிமாவில் இருக்கும் வாரிசுகள் எல்லாம் கதையே கேட்பதில்லை. பத்திரிகையாளர்களை சந்திப்பதில்லை. ஒரு படம் ஹிட்டானால் பெரிய கொம்பு வந்துவிடுகிறது. அனுபமாவை கன்ட்ரோல் செய்ய முயற்சித்தது பெரிய அயோக்கியத்தனம்.

    Advertisement

    யூடியூப் விமர்சனங்களுக்கு மட்டும் கொந்தளிக்கும் நடிகர் சங்கமும் அம்மா அமைப்பும், அனுபமா போன்ற பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக நின்று உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய கொடுமைகளைச் செய்பவர்களை சட்டம் தண்டிக்க வேண்டும்." என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Anupama Parameswaran Tortured by Star Kid? Cheyyar Balu Questions How Actresses Are Treated