உலகமே எதிர்பார்க்கும் ஆப்பிள் iPhone 18 pro.. புக்கிங் தேதியில் மாற்றம்? வெளியான மிக முக்கிய தகவல்

  • சென்னை: உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் வரும் செப்டம்பர் 9ம் தேதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. எப்போதும் லான்ச் நிகழ்ச்சியில் இருந்து அடுத்த வெள்ளிக்கிழமை ஐபோன் புக்கிங் தொடங்கும் நிலையில், இந்த முறை அதில் மாற்றம் வரும் என சொல்லப்படுகிறது. இது தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம்!

    Advertisement

    ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடல்களை செப்டம்பர் 9ம் தேதி நடைபெறும் சிறப்பு நிகழ்வில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் ஆப்பிளின் வழக்கமான ப்ரீ ஆர்டர் அட்டவணையிலும் இந்த ஆண்டு மாற்றம் இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Advertisement

    எப்போது

    ஆப்பிளின் ஐபோன் வெளியீட்டு நிகழ்ச்சி அமெரிக்க நேரப்படி செப்டம்பர் 9ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. அதாவது இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு புதிய ஐபோன் மாடல்கள் வெளியிடப்படும். இந்த நிகழ்வில் ஐபோன் 18 ப்ரோ, ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் ஆகியவற்றுடன் ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய Foldable iPhone அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், புதிய ஆப்பிள் வாட்ச் மாடல்களும் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    இந்த முறை ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்க்கான புக்கிங் முறையிலும் மாற்றப்படுகிறது. அதாவது ஐபோன் மாடல்களின் புக்கிங் செப்டம்பர் 12-ம் தேதி தொடங்கும். இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு புக்கிங் தொடங்குகிறது.

    Advertisement

    மாற்றம்

    பொதுவாக ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் அறிமுக நிகழ்வுக்கு அடுத்த வெள்ளிக்கிழமையே புக்கிங்கை தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி இரட்டை கோபுர பயங்கரவாத தாக்குதலின் 25வது ஆண்டு நினைவு தினம் வருவதால், அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டு மறுநாள் புக்கிங் தொடங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக இணையத்தில் பல்வேறு தகவல்கள் வெளியானாலும் கூட இதை ஆப்பிள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை. ஐபோன் லான்ச் நிகழ்ச்சியிலேயே இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

    மடிக்கும் ஐபோன்

    ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் குறித்தும் இன்னும் தெளிவான தகவல் இல்லை. ஐபோன் 18 ப்ரோ மாடல்களுடன் விற்பனைக்கு வரலாம் என ஒரு தரப்பினர் கூறுகிறார்கள். அதேநேரம் மற்றொரு தரப்பினர் foldable ஐபோன் புக்கிங் தனியாக தொடங்கும் என்றும் செப்டம்பர் இறுதியில் அது தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    Advertisement

    புதிய ஐபோன் மாடல்களுடன் iOS 27 இயங்குதளமும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஐபோன் 11 முதல் அனைத்து மாடல்களுக்கும் இந்த iOS 27 அப்டேட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், சில புதிய அம்சங்கள் மட்டும் புதிய ஐபோன்களுக்கு மட்டுமே கிடைக்குமாம்.

    ஐபோன் 18 ப்ரோ விற்பனை எப்போது?

    ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் ஆகியவை செப்டம்பர் 18ம் தேதி விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் தனது சில்லறை விற்பனை கடைகளில் காலை 8 மணிக்கு விற்பனையை தொடங்கும்.

    English Summary

    Apple is expected to launch the iPhone 18 Pro and iPhone 18 Pro Max on September 9(ஆப்பிள் ஐபோன் லான்ச் நிகழ்ச்சி): Apple iPhone 18 Pro, iPhone 18 Pro Max Launch latest news in tamil.