மெல்போர்ன்: ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மடிக்கக் கூடிய ஐபோனில், ஸ்கிரீன் விரிசல் பிரச்சனை கிளம்பியிருக்கிறது. இது ஐபோன் பயனாளர்களை அப்செட் ஆக்கியுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மடிக்கும் மாடலான Iphone Duo சமீபத்தில் தான் சந்தைக்கு வந்தது. கிட்டத்தட்ட ஒரு புதிய காரின் விலையில் இந்த ஐபோன் வெளியாகி ஆச்சரியத்தையும், அதிர்ச்சியும் கொடுத்திருந்தது.
iphone வரலாற்றிலேயே.. மடிக்க கூடிய வகையில் உருவாக்கப்பட்ட முதல் மாடல் இதுதான் என்பதால், பயனாளர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பும், வரவேற்பும் இருந்தது. இப்படி இருக்கையில் இந்த மொபைல்களில், ஸ்கிரீன் விரிசல்கள் ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதற்கு அதன் மடிப்பு பகுதியில் உள்ள டெக்னிக்கல் அமைப்பில் ஏற்படும் சேதம் தான் காரணம் என்று ஆய்வில் சந்தேகிக்கப்படுகிறது. ஆய்வகங்களில் இந்த மொபைல் கடுமையான அழுத்த சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட போது, அதன் உட்புற ஸ்கிரீன் பகுதி உடைந்து நேரடியாக விரிசல்கள் தெரிய தொடங்கியுள்ளன. ஆய்வக சோதனைகளில் இந்த குறைபாடு மிகத் தீவிரமாக தெரிந்தாலும், பயனாளர்களின் அன்றாட சாதாரண பயன்பாட்டில் இந்த பாதிப்புகள் தெரியாது என்று ஆப்பிள் நிறுவனம் நினைத்திருந்தது. ஆனால், ஆப்பிள் நிறுவனம் இப்படி நினைத்தது தவறு. ஆஸ்திரேலியா மற்றும் மெல்போர்னை சேர்ந்த சில புதிய பயனாளர்கள், போனை வாங்கி வெறும் 6 மணி நேரத்திற்குள்.. அதாவது 20 முறைக்கும் குறைவாக போனை மடித்து, திறந்த போது.. அதன் உட்புற ஸ்கிரீன் தானாகவே விரிசல் அடைந்ததாக கூறியிருக்கின்றனர். போனை மடித்து திறக்கும் போது, உட்புற பகுதியில் இருந்து.. ஏதோ உடைவது போன்ற சத்தம் கேட்பதாக பயனாளர்கள் புகார் அளித்துள்ளனர். இந்த தொழில்நுட்பக் குறைபாடு குறித்த செய்தி, ஆப்பிள் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அடுத்தடுத்த சாப்ட்வேர் அல்லது ஹார்டுவேர் அப்டேட் மூலம் இதற்கு தீர்வு காணப்படலாம் என்றும் பயனர்கள் எதிர்பார்க்கின்றனர். தொடக்கத்தில் இதுபோன்ற பிரச்சனைகள் சோதனையில் மட்டும் தெரிய வந்ததாக ஆப்பிள் நிறுவனம் நினைத்திருந்த நிலையில், தற்போது பயனாளர்கள் அன்றாட பயன்பாட்டின்போது இது போன்ற பிரச்சனைகள் வருவதை ஐபோன் தரத்தின் மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியிருக்கிறது. ஆரம்ப கட்ட தயாரிப்பில், ஒரு குறிப்பிட்ட தொகுப்பில் உள்ள பாகங்கள்.. சிறிய உற்பத்தி குறைபாட்டை கொண்டு இருக்கலாம் என தொழில்நுட்ப வல்லுநர்கள் சந்தேகிக்கின்றனர். போனை பயன்படுத்தும் போது, அதன் மையப் பகுதியில் இருக்கும் ஒரு சிறிய உலோகப் பகுதி.. சரியாக உள்வாங்காமல் மேல்நோக்கி எழும்பி டிஸ்ப்ளேவை உள்புறமாக தாக்குகிறது. இதனால் தான் டிஸ்ப்ளேவில் விரிசல் ஏற்படுகிறது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். ஏறத்தாழ ரூ.4.5 லட்சம் கொடுத்து இந்த போனை வாங்குபவர்கள், இது போன்ற டிஸ்ப்ளே பிரச்சனையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த பிரச்சனையை சரி செய்ய ஆப்பிள் நிறுவனம், iPhone duo troubleshooting hinge issue என்கிற புதிய வழிகாட்டுதல் பக்கத்தை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.ஆப்பிள் ஐபோன் 17 இலவசம்.. 1,000 பேருக்கு கொடுப்பதாக அறிவித்த தொழிலதிபர்! ஜாக்பாட்