சென்னை: மின்சார வாரியத்தில் பாலச்சந்தர் ஐஏஎஸ் நியமனத்திற்கு அறப்போர் இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முறைகேடு செய்து சிக்கியவரை ஏன் முக்கிய அதிகாரியாக முதல்வர் விஜய் நியமித்திருக்கிறார் என் அறப்போர் இயக்கத்தினர் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
இது குறித்து அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன் தனது x பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, "ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்தரை தமிழ்நாடு மின்சார வாரிய விநியோக பிரிவின், இணை இயக்குனராக நியமித்ததை.. அறப்போர் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
தாம்பரம் மாநகராட்சியில், டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டு.. கையும் களவுமாக பிடிபட்ட ஒரு IAS அதிகாரியை பணியிடை நீக்கமாவது செய்திருக்க வேண்டும். டெண்டர் செட்டிங் செய்து, சிலைகளை நிறுவிய பிறகு அதற்கு டெண்டர் போட்ட அதிகாரியான பாலச்சந்தர் ஐஏஎஸ்.. ஏற்கனவே சீரழிந்த நிலையில் இருக்கக்கூடிய மின்சார வாரியத்தில் என்ன செய்வார்? முதலமைச்சர் விஜய், தொட்டவனை விட மாட்டேன் என்று சொல்வது இதுதானா?? அறப்போரின் தாம்பரம் மாநகராட்சி புகாரின் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?? ஏற்கனவே மின்மாற்றி (transformer) ஊழலில் மற்றும் மின்கடத்தி (conductor)ஊழலில் விசாரிக்கப்படும் ராஜேஷ் லக்கானி IAS-ஐ அதே மின்சார வாரியத்தின் இயக்குனராக நியமித்ததன் மூலமாக.. இந்த ஊழல்களின் மீதான நடவடிக்கையில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை நாம் இழந்து வருகிறோம். தற்பொழுது அறப்போர் வெளியிட்ட தாம்பரம் மாநகராட்சி முறைகேட்டின் டெண்டர் அதிகாரியான, அப்போதைய தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் IAS அவர்களை.. மின்சார வாரியத்தில் இணை இயக்குனராக நியமித்ததன் மூலமாக இனி, மின்சார வாரியம் மேலும் ஊழலில் சீரழிய வழிவகை செய்யப்பட்டுள்ளது! அரசின் இந்த நியமனங்கள் குறித்து, முதலமைச்சர் விஜய் அவர்களும்.. மற்றும் துறை அமைச்சர் நிர்மல் குமாருக்கும் என்ன விளக்கம் சொல்வார்கள்?? இரு நியமனங்களும் மின்சார வாரியத்தை மேலும் சீரமைக்குமா? அல்லது மேலும் சீரழிக்குமா? 'Justice must not only be done, but must also be seen to be done' என்பதை முதல்வர் விஜய்க்கு ஞாபகப்படுத்த விரும்புகிறோம். இந்த இரு நியமனங்களையும் உடனடியாக தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என்று அறப்போர் இயக்கம் கோருகிறது" என வலியுறுத்தியுள்ளார். அறப்போர் இயக்கம் வைக்கும் விமர்சனம் உண்மையானதுதான். அதாவது தாம்பரம் மாநகராட்சியில் சுமார் ரூ.45.90 லட்சம் மதிப்புள்ள 2 திட்ட பணிகள் அதற்கான அதிகாரப்பூர்வ டெண்டர் கோரப்பட்டு இறுதி செய்யப்படுவதற்கு முன்பாகவே, முன்கூட்டியே கூட்டுச் சதி மூலம் முடிக்கப்பட்டு திறப்பு விழாவும் நடத்தப்பட்டிருக்கிறது என்று அறப்போர் இயக்கம் சார்பில், கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அரசிடம் ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்த புகாரை தொடர்ந்து, செப்.15 அன்று தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பொறுப்பிலிருந்து பாலச்சந்தர் ஐஏஎஸ் விடுவிக்கப்பட்டு கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். ஆனால், இப்போது தமிழக மின்சார வாரியத்தின் விநியோக பிரிவின் இணை இயக்குநராக நியமிக்கப்பட்டிருப்பது மீண்டும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.பாலசந்தர் மீதான குற்றச்சாட்டு