சோலார் முதலீடுகள் தமிழகத்தை விட்டு குஜராத்துக்கு மாறுகிறதா? 2 மாதம் முடங்கிய அனுமதிக்கு பின்னணி என்ன

  • சென்னை: தமிழ்நாட்டில் சோலார் மற்றும் காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மின் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில் நிலவும் தாமதத்தால், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய முதலீடுகள் மாநிலத்தை விட்டு வெளியேறும் சூழல் உருவாகியுள்ளது. அதாவது திமுக ஆட்சியில் ஒப்புதல் பெறப்பட்ட திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.. இதன் பின்னணி காரணங்கள் என்ன என்பதை பார்ப்போம்.

    Advertisement

    தற்போதுள்ள சூழலில் இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதற்கு ஏற்ப, மின்சாரத் தேவையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது... இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யக் காற்றாலை மற்றும் சோலார் திட்டங்களே பக்கபலமாக இருந்து வருகின்றன.

    Advertisement

    நம்முடைய தமிழ்நாட்டில் சுமார் 7000 மெகாவாட்டிற்கும் அதிகமாக சோலார் மின் உற்பத்தி செய்யும் கட்டமைப்பு வசதிகள் உள்ளன. அதிலும் கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள தொழில் மண்டலங்களில் இத்தகைய பசுமை ஆற்றல் கட்டமைப்புகள் அதிகமாகவே ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

    சோலார் மின் திட்டங்கள்

    இயற்கை வழியில் மின்சாரம் உற்பத்தி செய்து தொழில் தொடங்க விரும்புபவர்கள், தமிழக மின்சார வாரியத்தின் கீழ் இயங்கும் பசுமை எரிசக்தி கழகத்திடம் முறையான அனுமதி பெற வேண்டும். ஆனால், கடந்த 2 மாதங்களாகவே புதிய சோலார் மற்றும் காற்றாலை திட்டங்களுக்கான விண்ணப்பங்களைப் பெறுவதை மின்வாரியம் திடீரென முற்றிலும் நிறுத்தி வைத்துள்ளது.

    Advertisement

    நேரடியாக மனுக்களை பெறுவதை நிறுத்திவிட்டு, பாரபட்சமின்றி எல்லாருக்கும் வெளிப்படையாக அனுமதி வழங்கிடும் வகையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களைப் பெறப் போவதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த அறிவிப்பு வெளியாகி 2 மாதங்கள் ஆகியும், அந்த வெப்சைட் சேவை பயன்பாட்டிற்கு வரவில்லையாம்.

    இதனால் தொழிலைத் தொடங்கத் தயாராக இருந்த முதலீட்டாளர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்திலும் ஏமாற்றத்திலும் தவித்து வருவதாகத் தெரிகிறது.

    பின்னணி காரணங்கள் என்ன

    இதன் பின்னணியில் சில அதிர்ச்சித் தகவல்கள் கூறப்படுகின்றன. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், குறிப்ாகச் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் புதிய சோலார் மற்றும் காற்றாலை திட்டங்களுக்கு ஒப்புதல்கள் வழங்கப்பட்டன.

    Advertisement

    அப்போது இத்திட்டங்களுக்கு அனுமதி பெற வேண்டுமானால், ஒரு மெகாவாட் மின்சாரத்திற்கு தலா 25 லட்சம் ரூபாய் வீதம் கட்சி நிதியாக வசூலிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்த சர்ச்சைக்குரிய கட்சி நிதி வசூல் நிறுத்தி வைக்கப்பட்டது. அதேசமயம், பழைய காகித மனுக்கள் வாங்குவதும் நிறுத்தப்பட்டதால், ஒட்டுமொத்த அனுமதி வழங்கும் நடைமுறையும் மொத்தமாகவே முடங்கிவிட்டது.

    மின்சார வாரிய அதிகாரிகள்

    இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மின்சார வாரிய அதிகாரிகள், ஏற்கனவே முந்தைய ஆட்சியில் அவசர அவசரமாக ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்களால் மின் விநியோகக் கட்டமைப்பில் பாதிப்பு ஏற்படுமா என்பதை அறிய "லோட் புளோ ஸ்டடி" என்ற சிறப்புத் தொழில்நுட்ப மறுஆய்வுத் தணிக்கையை நடத்தி வருவதாக சொல்கிறார்கள்.. அந்த நடைமுறை முடிந்த பிறகுதான், புதிய வெப்சைட் விண்ணப்ப முறை தொடங்கப்படும் என்றும் விளக்கம் தந்துள்ளனர்.

    Advertisement

    ஆனாலும் அரசின் இந்தத் தொடர் தாமதத்தால் அதிருப்தியடைந்த முதலீட்டாளர்கள், தங்கள் கோடிக்கணக்கான பணத்தைக் குஜராத்திற்கு மாற்ற ஆயத்தமாகி வருவதாகத் தெரிகிறது.

    கடந்த 2025 செப்டம்பரில் 16100 மெகாவாட்டாக இருந்த குஜராத்தின் சோலார் நிறுவு திறன், இந்த ஆண்டு ஜூனில் 24092 மெகாவாட்டாக அதிகரித்து அசுர வளர்ச்சி கண்டுள்ளது. இதே காலத்தில் அங்குள்ள காற்றாலை நிறுவு திறனும் 14374 மெகாவாட்டில் இருந்து 16,086 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது.

    சிக்கலில் தமிழ்நாடு

    அதாவது கடந்த 9 மாதங்களில் மட்டும் குஜராத் மாநிலம் சுமார் 8,000 மெகாவாட் சோலார் மற்றும் 1,712 மெகாவாட் காற்றாலை மின் திட்டங்களைப் புதிதாக செயல்படுத்தி வேகமாக உயர்ந்துள்ளது. நம்ம தமிழ்நாட்டிலோ இப்போதுள்ள சோலார் உற்பத்தித் திறன் வெறும் 12,410 மெகாவாட்டாகவும், காற்றாலை திறன் 12,273 மெகாவாட்டாகவும் மட்டுமே தேங்கிக் கிடக்கிறது.

    Advertisement

    அதனால் மாநில அரசு உடனடியாக விழித்துக் கொண்டு இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணாவிட்டால், தமிழகத்திற்கு வர வேண்டிய மிகப்பெரிய தொழில்வளர்ச்சியும் முதலீடுகளும் கைநழுவிப் போவது உறுதி என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்...!!

    English Summary

    Are Solar Investments Moving from Tamil Nadu to Gujarat? The Reason Behind the Two-Month Approval Delay