கேபிள் டி.வி., டி.டி.எச். சேவைகளுக்கான கட்டணம் உயருகிறதா? மத்திய அரசு விளக்கம்

  • சென்னை: இன்றைய சூழலில் பலரும் ஓடிடி சேவைகள் மற்றும் ஆப்கள் மூலம் டிவி சேனல்களின் நிகழ்ச்சிகளை பார்க்க தொடங்கிவிட்டார்கள். இதனால பலரும் கேபிள் டி.வி., டி.டி.எச். சேவைகளை பயன்படுத்துவது இல்லை.. மிக வேகமாக சரிந்து வரும் தொழில் என்றால், கேபிள் டி.வி., டி.டி.எச். சேவைகள் தான். இந்த சூழலில் இதற்கான கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக பரவும் தகவலுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்திருக்கிறது.

    Advertisement

    இன்றைக்கு ஸ்மார்ட் டிவி இல்லாத வீடுகளை ஒவ்வொரு ஊரிலும் எண்ணும் அளவிற்கு மாறி வருகிறது. சென்னையில் எல்லாம் பெரும்பாலான வீடுகளில் ஸ்மார் டிவி தான் உள்ளது இதனால் யூடியூப் , ஹாட்ஸ்டார், நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், ஜி5, சன் நெக்ஸ்ட், சோனி லிவ், ஆஹா போன்ற பல்வேறு ஆப்கள் மூலம் மக்கள் தங்களுக்குப் பிடித்தமான நேரத்தில், பிடித்த நிகழ்ச்சிகளை பார்க்க தொடங்கிவிட்டார்கள். எப்போது சீரியல் போடுவார்கள் என்று காத்திருப்பது எல்லாம் குறைந்துவிட்டது.

    Advertisement

    அதேபோல் முன்பு இணைய சேவை விலை மிகமிக அதிகம். 1000 ரூபாய்க்கு மேல் அதிகம். அதுவும் குறிப்பிட்ட அளவு தான் பயன்படுத்த முடியும் என்கிற நிலை இருந்தது. ஆனால இப்போது ரூ.500 - ரூ.700 இருந்தாலே அன்லிமிடெட் வைஃபை இணைப்புடன் ஓ.டி.டி சேவைகளும் இலவசமாகக் கிடைக்கிறது. இதனால் தனித்தனியாக கேபிளுக்குப் பணம் கட்டுவதை மக்கள் வீண் செலவாகக் கருதுகிறார்கள்.

    ட்ராய் கொண்டு வந்த புதிய சேனல் கட்டண விதிகள் காரணமாக, மக்கள் மாதத்திற்கு ₹300 முதல் ₹500 வரை கட்டணம் செலுத்தும் நிலை இருக்கிறது. ஆனால் அதைவிட சற்றே பணம் கூடுதலாக செலுத்தினால், பிராட்பேண்ட் மற்றும் ஓ.டி.டி இரண்டும் கிடைப்பதால் நகரங்களில் பலர் கேபிள், டிடிஹெச் சேவையை துண்டித்து வருகிறார்கள். கிராமங்களில் வசதியானவர்கள் வேகமாக மாறி வருகிறார்கள்.

    Advertisement

    இந்த சூழலில் மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சமீபத்தில் வரைவு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. இதை மையமாக வைத்து சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வேகமாக பரவி வருகிறது. அதில், கேபிள் டி.வி. மற்றும் டி.டி.எச். சேவைகளுக்கான கட்டணம் இப்போது வசூலிக்கப்படுவதில் இருந்து 4 முதல் 6 மடங்கு அதிகமாக வசூலிக்கப்பட உள்ளது. இதனால் 11 கோடி டி.வி.க்களின் இணைப்பு துண்டிக்கப்பட இருக்கிறது.

    அதிகப்படியான லைசென்சு கட்டணம் விதிக்கப்பட உள்ளது.. லட்சக்கணக்கானவர்களின் வேலையும் பறிபோக உள்ளது என்று கூறப்பட்டிருக்கிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகிறார்கள் இந்த தகவல் பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்திருக்கிறது.

    Advertisement

    இது தொடர்பாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், சமூக வலைதளங்களில் பரவும் தகவலில் உண்மை கிடையாது. மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் 'தொலைத்தொடர்பு விதிகள் 2026' தொடர்பான வரைவு அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. தொடர்புடையவர்கள் இந்த வரைவு அறிக்கை தொடர்பாக வருகிற ஜூலை 27-ந்தேதி வரையிலும் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம். அந்த வரைவு அறிக்கையில் கேபிள் டி.வி. மற்றும் டி.டி.எச். சேவைகளுக்கான கட்டணத்தைர்த்துவது தொடர்பான எந்த பிரிவுகளும் கிடையாது. தொலைக்காட்சி மற்றும் ரேடியோ சேவைகளுக்காக வழங்கப்பட்ட பல்வேறு வழிகாட்டுதல்களை ஒருங்கிணைப்பதை இந்த விதிகள் நோக்கமாக கொண்டுள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    English Summary

    Are there plans to hike charges for cable TV and DTH services? Central Government clarifies