குறி திமுகவுக்கு.. தவெக அடுத்த அஸ்திரம் இதுதானா? தோற்றாலும் விடப்போவதில்லை.. காரணம் புதுசா இருக்கே?

  • சென்னை: தமிழக அரசியலில் சமீப காலமாகவே முன்னாள் அமைச்சர்களை சுற்றி நடக்கும் சோதனைகளும், பழைய வழக்குகளும் மீண்டும் பேசப்படுவது கவனம் பெற்றுள்ளன. திமுக ஆட்சியில் இருந்தபோது பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் வழக்குகள் மீண்டும் நகர தொடங்கியுள்ளன. இதனால் திமுக தரப்புக்கு அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து முக்கியமான தகவல் ஒன்று நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது..!!

    Advertisement

    முன்னாள் அமைச்சர்களான ஏவா வேலு, கே.என். நேரு உள்ளிட்டோரின் வீடுகள் மற்றும் அவர்களுக்குத் தொடர்புடைய இடங்களில் ஏற்கனவே அதிரடி சோதனைகள் நடைபெற்றுள்ளன.

    Advertisement

    திமுக முன்னாள் அமைச்சர்கள்

    அதேபோல முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதில் ரூ.100 கோடிக்கு மேல் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் அவருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறி மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த சோதனையை மேற்கொண்டனர்.

    அதேபோல், முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமியின் வீடு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. சட்டவிரோத பணப் பரிவர்த்தனை மற்றும் வீடுகள் ஒதுக்கீடு தொடர்பான புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை நடைபெற்றதாக காரணமும் சொல்லப்பட்டது..

    Advertisement

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியைச் சுற்றிய வழக்குகளும் இதே அரசியல் சூழலில் முக்கியத்துவம் பெற்றன. கடந்த திமுக ஆட்சியில் டாஸ்மாக் பார்களுக்கு டெண்டர் விட்டதில் முறைகேடு செய்யப்பட்டு அரசுக்கு பல நூறு கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து, அவருக்குத் தொடர்புடைய இடங்களில் சோதனையும் நடத்தியது.

    தேர்தலுக்கு பிறகு தவெக பலே

    இதைத் தொடர்ந்து, பொன்முடி, துரைமுருகன், தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் தொடர்பான பழைய வழக்குகளும் மீண்டும் கையில் எடுக்கப்படலாம் என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் ஓயவில்லை... எனவே இந்த வழக்குகள் பற்றின பேச்சு அடிபடும்போதெல்லாம் அரசியல் களம் பரபரத்துவிடும்..

    Advertisement

    இப்படிப்பட்ட சூழலில்தான், இப்போது ஒரு புதிய தகவல் பரபரப்பாக கிசுகிசுக்கப்படுகிறது.. அதாவது இடைத்தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, தவெக வெற்றி பெற்றாலும் சரி, தோல்வி அடைந்தாலும் சரி, சில அதிரடி கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள தவெக மேலிடம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

    குறிப்பாக ஊழல் தொடர்பான புகார்களில் சிக்கியுள்ள திமுக முன்னாள் அமைச்சர்கள் ஓரிருவரை கைது செய்யவும் திட்டமிடப்படுவதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    தூசி தட்டப்படுமா?

    இதற்கு அந்த வட்டாரங்களில் சொல்லப்படும் விளக்கமும் சுவாரஸ்யமாகவே இருக்கிறது. "இடைத்தேர்தலில் தவெக ஜெயித்தால், அந்த சந்தோஷத்தில் கைது நடவடிக்கை இருக்கும்... ஒருவேளை தோற்றுப் போனால், அந்த தோல்வியை திசைதிருப்ப கைது நடவடிக்கைகள் இருக்கும்" என்று விபரமறிந்த வட்டாரத்தினர் கூறுகிறார்கள்..

    Advertisement

    இதனால் இடைத்தேர்தல் முடிவுக்குப் பிறகு தமிழக அரசியலில் அடுத்த கட்டமாக என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இப்போதே எகிற துவங்கி விட்டது.

    பழைய வழக்குகள் மீண்டும் தூசி தட்டப்படுமா? திமுக முன்னாள் அமைச்சர்கள் யாராவது கைது செய்யப்படுவார்களா? அல்லது இது அரசியல் வட்டாரத்தில் உலவும் வதந்தியாகவே முடிந்துவிடுமா? இடைத்தேர்தல் முடிவுக்குப் பிறகுதான் இதற்கான விடை தெரியவரும்...!!!

    - நமது சிறப்பு நிருபர் எழில்

    English Summary

    Are These TVK’s Masterstrokes? DMK in the Crosshairs Even After Bypoll Loss.. What’s the New Plan?