58 வயதில் ஓய்வுபெறுகிறீர்களா? உங்கள் PF சேமிப்புக்கு எத்தனை வயது வரை வட்டி கிடைக்கும் தெரியுமா?

  • சென்னை: வேலைக்கு சென்று சம்பாதிக்கும் காலம் முடிந்து ஓய்வுபெறும்போது, கையிலுள்ள சேமிப்புப் பணத்தை எப்படி பயன்படுத்துவது என்ற கேள்வி பலருக்கும் எழும்.. குறிப்பாக, பல வருடங்களாக சம்பளத்தில் இருந்து சேமித்த பிஎஃப் பணத்தை உடனடியாக எடுக்க வேண்டுமா அல்லது கணக்கிலேயே வைத்திருக்கலாமா என்ற சந்தேகம் இருக்கலாம். 58 வயதில் ஓய்வுபெறுபவர்கள் தங்களுடைய பிஎஃப் பணத்துக்கு எந்த வயது வரை வட்டி பெற முடியும் என்பதை தெரிந்துகொள்வது அவசியம்.

    Advertisement

    வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, ஓய்வுக்குப் பிறகு பிஎஃப் கணக்கில் எவ்வளவு காலம் வட்டி கிடைக்கும் என்பது குறித்து தனது எக்ஸ் தளத்தில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.

    Advertisement

    அதன்படி, 58 வயதில் ஓய்வுபெறும் ஊழியர்கள் தங்களுடைய பிஎஃப் கணக்கில் உள்ள இருப்புத் தொகைக்கு அடுத்த 3 ஆண்டுகள், அதாவது 61 வயது வரை வட்டி பெறலாம். இதனால், 58 வயதான உடனேயே முழு பிஎஃப் சேமிப்பையும் எடுத்துவிட வேண்டிய அவசியம் இல்லை. தகுதியான இருப்புத் தொகையை அந்தக் காலத்தில் கணக்கிலேயே வைத்திருந்து வட்டி பெற முடியும்.

    61 வயதுக்குப் பிறகு?

    இந்த 3 ஆண்டு காலம் முடிந்து பிஎஃப் கணக்கு செயலற்ற நிலைக்குச் சென்றுவிட்டால், அதன்பிறகு வட்டி வரவு வைக்கப்படாது என்று இபிஎஃப்ஓ விளக்கியுள்ளது. எனவே, வட்டி கிடைக்கும் காலம் முடிந்த பிறகும் பணத்தை அப்படியே கணக்கில் வைத்திருக்காமல், சேமிப்பை திரும்பப் பெறுமாறு ஓய்வுபெற்றவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Advertisement

    உதாரணமாக, 58 வயதில் ஓய்வுபெற்று பிஎஃப் பணத்தை எடுக்காமல் கணக்கிலேயே வைத்திருப்பவர் 61 வயது வரை வட்டி பெறலாம். அதற்கு பிறகு கணக்கு இன்-ஆக்டிவேட் அதாவது செயலற்ற நிலைக்கு சென்றால், தொடர்ந்து வட்டி கிடைக்காது. இதனால், தங்களுடைய பிஎஃப் கணக்கின் நிலையைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப பணத்தை எடுப்பதற்கு திட்டமிடுவது முக்கியம்.

    எப்போது பணத்தை எடுக்கலாம்

    பிஎஃப் பணத்தை எப்போது எடுக்க வேண்டும் என்பது ஒவ்வொருவருடைய பணத் தேவையைப் பொறுத்தது. உதாரணமாக, ஓய்வுபெற்ற பிறகு வீட்டு செலவுகள், மெடிக்கல் செலவுகள் போன்றவற்றை சமாளிக்க பணம் தேவைப்பட்டால், பிஎஃப் பணத்தை எடுக்க வேண்டியிருக்கலாம்.

    Advertisement

    அதேசமயம், மாதந்தோறும் ஓய்வூதியம் கிடைக்கிறது அல்லது வேறு சேமிப்புகள் இருக்கிறதென்றால், உடனடியாக பிஎஃப் பணத்தை எடுக்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருக்கலாம்.

    முதியோர் ஓய்வூதியம்! தமிழக அரசு போட்ட உத்தரவுக்கு எதிராக கொந்தளித்த சிபிஎம் பெ.சண்முகம்

    58 வயதில் ஓய்வுபெறுகிறீர்களா?

    58 வயதில் ஓய்வுபெறுபவர்கள், தங்களுடைய பிஎஃப் பணத்தை உடனே எடுக்காமல் வைத்திருக்கும்போது, குறிப்பிட்ட காலம் வரை அதற்கு வட்டி கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் பணத்தை எப்போது எடுக்கலாம், எடுத்த பணத்தை எப்படிப் பயன்படுத்தலாம் என்று திட்டமிடலாம். அதற்காக பணத்தை அப்படியே வைத்துக்கொண்டே இருக்க முடியாது. பிஎஃப் கணக்குக்கு எவ்வளவு காலம் வட்டி கிடைக்கும், அதன் பிறகு என்ன விதிமுறைகள் பொருந்தும் என்பதைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப பணத்தை எடுக்கத் திட்டமிட வேண்டும்.

    Advertisement

    பிஎஃப் என்பது வேலைக்கு செல்லும் காலத்தில் பல ஆண்டுகளாகச் சிறுகச் சிறுகச் சேமித்த பணம். எனவே வட்டி கிடைக்கும் காலத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல், எதிர்காலத்தில் எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதையும் கணக்கிட்டுப் பார்க்க வேண்டும்..!!

    English Summary

    Are You Retiring at 58? How Long Will Your EPF Savings Earn Interest? EPFO Rules