“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!

  • சென்னை: கோவை சிறுமி வழக்கு தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பெண் காவல்துறை அதிகாரி, பேட்டியை தொடங்குவதற்கு முன்னர் சிரித்து பேசிக்கொண்டிருந்தது சர்ச்சையானது. இந்நிலையில் இது தொடர்பாக பேசிய அமைச்சர் வன்னி அரசு, போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    கோவையில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இப்படி இருக்கையில், இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு காவல்துறை அதிகாரிகள் பேட்டியளித்திருந்தனர். பேட்டி தொடங்குவதற்கு முன்னர், அதிகாரிகள் சிரித்து பேசிக்கொண்டிருந்தனர்.

    Advertisement

    இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகியிருந்தது. மொத்த தமிழ்நாடும் கொந்தளித்துக்கொண்டிருந்த பிரச்சனை தொடர்பாக பேட்டி கொடுக்கும்போது ஏன் அதிகாரிகள் சிரித்துக்கொண்டிருந்தனர்? என்று கேள்வி எழுப்பியிருந்தனர். இப்படி இருக்கையில்தான், இது குறித்து அமைச்சர் வன்னி அரசு விளக்கமளித்துள்ளார்.

    அவர் பேசியதாவது, "தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று அரசு மீது குற்றச்சாட்டை வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இப்போதுதான் புதிய காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்றுதான் ஏடிஜிபி பதவியேற்றிருக்கிறார். இன்னும் டிஜிபி போடவில்லை. தமிழகம் முழுவதும் காவல்துறையை முழு வேகத்தில் இயங்க வைக்க தேவையான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

    Advertisement

    அதேபோல, தமிழ்நாட்டில் காவல்துறையினர் சிலர் தன்னிச்சையாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர். அதை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே சட்டம் ஒழுங்கு கெட்டுபோய்விட்டது என்று சொல்வது அதீதமான குற்றச்சாட்டு. சட்டம் ஒழுங்கை நிச்சயம் கட்டுப்படுத்துவோம்" என்று கூறியுள்ளார்.

    அதேபோல, காவல்துறை அதிகாரிகள் சிரித்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த வன்னி அரசு, "காவல்துறை அதிகாரிகள் சிரிக்கவே கூடாது என்று சொன்னால் எப்படி? அப்படியெனில் காவலர்கள் முறைத்துக்கொண்டே இருக்க வேண்டுமா என்ன? பேட்டியளிப்பதற்கு முன்னர் அவர்கள் வேறு ஒரு சப்ஜெட்டை பேசிவிட்டு வந்திருக்கிறார்கள்" என்று கூறியிருக்கிறார்.

    English Summary

    A female police officer who met with journalists regarding the Coimbatore girl case sparked controversy when she was seen smiling and chatting before commencing the interview. In response to this, Minister Vanni Arasu questioned, "Are police officers not allowed to smile?"