தமிழ்நாட்டின் முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்..கேரளாவுக்கு புதிய கவர்னர்! ஜனாதிபதி உத்தரவு

  • சென்னை: தமிழ்நாட்டின் முழு நேர ஆளுநர் ஆனார் ராஜேந்திர அர்லேகர். தமிழகம் மற்றும் கேரளா ஆளுநராக ராஜேந்திர அர்லேகர் இருந்து வந்த நிலையில், தற்போது தமிழகத்தின் முழு நேர ஆளுநராக அர்லேகரை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். இதே போன்று கேரள ஆளுநராக ஓம் பிரகாஷ் மதூர் மற்றும் ஒடிசா ஆளுநராக பிரஜ் மோகன் ராம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    Advertisement

    கேரளா ஆளுநராக இருந்த அர்லேகர், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நியமிக்கப்பட்டார். ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி மேற்கு வங்கத்திற்கு மாற்றப்பட்டதையடுத்து, அர்லேகர் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

    Advertisement

    கடந்த ஆறு மாதத்திற்கும் மேலாக பொறுப்பு ஆளுநராக இருந்து வந்த நிலையில், முழு நேர ஆளுநராக தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளார். கேரள ஆளுநராக ஓம் பிரகாஷ் மதூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடக ஆளுநராக டாக்டர் சுதா யாதவ், ஒடிசா ஆளுநராக பிரஜ் மோகன் ராம் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், உத்தரகாண்டுக்கு தல் சிங் பிசென், சிக்கி ஆளுநராக துஷ்யந்த் கவுதம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கொடுத்துள்ளார்.


    முழு நேர ஆளுநர் ஆனார்

    தமிழக ஆளுநராக ஆந்திர முன்னாள் முதல்வர் கிரண் குமர் ரெட்டி நியமனம் செய்யப்பட இருப்பதாக கடத சில மாதங்களாக பேச்சு அடிபட்டு வந்த நிலையில், ராஜேந்திர ஆர்லேகரை முழு நேர ஆளுநராக நியமனம் செய்துள்ளது மத்திய அரசு. அர்லேகரை பொறுத்தவரை கோவா மாநிலத்தை சேர்ந்தவர். பள்ளி காலத்திலேயே ஆர்எஸ்எஸ் அமைப்பில் பங்கேற்று செயல்பட்டு வந்தார்.

    Advertisement
    தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநர் ஆன RSS காரியகர்த்தா.. விஜய்யை திணற விட்ட ஆர்.வி. அர்லேகர்.. யார் இவர்?

    தற்போது ஆர்எஸ்எஸ் அமைப்பின் வாழ்நாள் உறுப்பினராக உள்ளார். 'எமர்ஜென்சி' காலத்தில் 2 ஆண்டு வரை தனது தந்தையுடன் சிறை சென்றார். 1989 ஆம் ஆண்டு பாஜகவில் சேர்ந்த இவர் அமைச்சராகவும், சபாநாயகராகவும் பதவி வகித்துள்ளார். கேரள ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு இருந்த இவர், கடந்த மார்ச் முதல் தமிழக ஆளுநர் பொறுப்பையும் சேர்த்து கவனித்து வந்தார்.

    விஜய்யை பாடாய் படுத்தியிருந்தார்

    தமிழகத்திற்கு புதிய ஆளுநர் நியமனம் செய்யப்பட்டு கேரளாவிற்கு இவரே ஆளுநராக தொடர்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், கேரளாவிற்கு புதிய ஆளுநரை நியமனம் செய்துள்ளது. சட்டமன்ற தேர்தலின் போது, விஜய்க்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. அப்போது, ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநர் மாளிகைக்கு மூன்று முறை விஜய் அலைந்தார். தனிப்பெரும்பான்மை எண்ணிக்கை கொண்டுவந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பேன் என்று விஜய்யை படாத படுத்தியிருந்தார் ஆளுநர் அர்லேகர்.

    Advertisement

    மோடி வந்த மறுநாளே

    விஜய் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, பெரிதாக அவரது அரசுக்கு தொல்லை கொடுக்கவில்லை. விஜய் அரசு, குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகவும் ஆளுநர் இந்த விவகாரத்தில் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் புகார் இவரிடம் அளித்தன. எனினும் அர்லேகர் எந்த ஒரு முடிவும் இந்த விவகாரத்தில் எடுக்கவில்லை.

    விமான நிலையத்தில் சுமார் 1.30 மணி நேரம் காத்திருந்து பிரதமர் மோடியை வழியனுப்பி வைத்த விஜய்!

    முதல்வர் விஜய்யுடன் பெரிய அளவில் மோதல் போக்கு இன்றி அனுசரனையாகவே நடந்து கொள்ளும் அர்லேகரே முழுநேர ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. பிரதமர் மோடி நேற்று தமிழ்நாட்டிற்கு வருகை தந்து இருந்தார். அப்போது முதல்வர் விஜய்யுடன் பிரதமர் மோடி இணக்கம் காட்டியிருந்தார். அவரது தமிழக வருகைக்கு மறுநாளே முழு நேர ஆளுநர் நியமனம் நடபெற்றுள்ளது.

    English Summary

    Rajendra Arlekar has become the full-time Governor of Tamil Nadu. While he had been serving as the Governor of both Tamil Nadu and Kerala, President Droupadi Murmu has now issued an order appointing him as the full-time Governor of Tamil Nadu. Similarly, Om Prakash Mathur has been appointed as the Governor of Kerala, and Braj Mohan Ram as the Governor of Odisha.