40 ஏக்கர் ARS நிலம் எப்படி பட்டா போனது? ராதாவின் ₹46 கோடி செக்.. அம்பிகா விஜய்யை புகழ்ந்தது இதுக்கா?

  • சென்னை: ஏஆர்எஸ் கார்டன் விவகாரம் மீண்டும் பேசுபொருளாகி உள்ளது.. ஒரு காலத்தில் ஏரியாக இருந்த நிலத்தை எப்படி பட்டா போட்டுத் தர முடிந்தது? 80-களில் ஏஆர்எஸ் கார்டனின் 40 ஏக்கர் நிலத்தை வாங்கும் அளவுக்கு உண்மையில் அம்பிகா - ராதா சகோதரிகளுக்குச் நிதி சக்தி இருந்ததா? அந்தச் சொத்தை அவர்களுக்கு யார் எழுதி வைத்தது? தவணை முறையில் வாங்கினார்களா? என்றெல்லாம் நதிமூலம், ரிஷிமூலம் கேள்விகளைப் பொதுமக்களே அப்போதிருந்தே எழுப்புகிறார்கள்" என்று மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

    Advertisement

    Cheyyaru Balu சேனலில் செய்யாறு பாலு பேசும்போது, "சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை ராதா அளித்துள்ள புகாரில், தனது அக்கா அம்பிகா மீது 46 கோடி ரூபாய் மதிப்பிலான செக் மோசடி செய்ய முயன்றதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இது உண்மையிலேயே செக் மோசடியா அல்லது பல ஆண்டுகளாக நீறுபூத்த நெருப்பாக இருக்கும் சொத்துப் பிரச்சினையா? என்ற கேள்விகள் கிளம்பியுள்ளன.

    Advertisement

    அம்பிகா மீது ராதா புகார்

    கடந்த 10 நாட்களாக நடிகை அம்பிகா சோஷியல் மீடியாவில் தொடர்ந்து , முதலமைச்சர் விஜய்யை புகழ்ந்து பேசி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்... த்ரிஷா விவகாரத்திலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசிய கருத்துகளுக்கு எதிராகவும், "எங்கள் தங்கம் விஜய்யை எதுவும் சொல்லாதீர்கள்" என்றெல்லாம் அம்பிகா தீவிரமாக ஆதரவுக் குரல் கொடுத்தார்.

    ஏன் இப்படி திடீரென விஜய்யை புகழ்கிறார், விஜய்க்கு ஆதரவு தருகிறார் என்ற குழப்பம் பலருக்கும் எழுந்தது.. இதற்கு பின்னால் இந்த சொத்து மற்றும் செக் மோசடிப் பிரச்சனைதான் காரணமா? என்று இப்போது சந்தேகம் எழுகிறது. ராதா தன் மீது புகார் அளிக்கப் போகிறார் என்பதை முன்கூட்டியே உணர்ந்து, ஆளுங்கட்சி அல்லது அரசியல் செல்வாக்கின் ஆதரவைப் பெறவே அம்பிகா இப்படிப் பேசி வருகிறாரோ? சோஷியன் குடுமி சும்மா ஆடுமோ என்பார்களே, அதுபோல நினைக்க தோன்றுகிறது.

    Advertisement

    வளசரவாக்கம் ஏஆர்எஸ் கார்டன்

    சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஏஆர்எஸ் கார்டன் அம்பிகா, ராதா மற்றும் அவர்களின் தாயார் சரசம்மா ஆகியோருக்குச் சொந்தமானது. 80-களில் வளசரவாக்கத்தில் இவர்களுக்கு 40 ஏக்கர் நிலம் எப்படி கிடைத்தது? என்றெல்லாம் பல்வேறு கிசுகிசுக்களும் உலா வந்தன.

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் இந்த நிலத்தை தானமாகக் கொடுத்தார் என்று ஒரு யூடியூபர் சமீபத்தில் கூறியிருந்ததற்கு அம்பிகாவும் அவருக்கு பதிலடி தந்திருந்தார்.. "எம்.ஜி.ஆர் என்ன எங்களுக்கு விஏஓ-வா? தாசில்தாரா? எங்களுக்கு பட்டா எழுதித் தருவதற்கு?" என்று காட்டமாக கேட்டிருந்தார்.

    46 கோடி, 5 செக்குகள்

    பிற்காலத்தில், இந்த நிலம் படப்பிடிப்பு ஸ்டுடியோவாகவும், அப்பார்ட்மெண்ட்டாகவும் மாறியது. வளசரவாக்கத்தில் உள்ள ARS கார்டன் மற்றும் RR கார்டன் ஆகிய சொத்துகளைப் பராமரிக்கும் பொறுப்பை அக்கா அம்பிகாவிடம் ஒப்படைத்துவிட்டு, ராதா மும்பை, கேரளா மற்றும் வெளிநாடுகளில் தனது தொழில்களைக் கவனிக்கச் சென்றுவிட்டார்..

    Advertisement

    கரண்ட்பில், சொத்து வரி, பராமரிப்புச் செலவுகள் மற்றும் ஊழியர்களுக்கான சம்பளம் வழங்குவதற்காகத் தேதியிடப்படாமல் வெறும் தன்னுடைய கையெழுத்து மட்டும் போட்ட செக் புக் முழுவதையும் அம்பிகாவிடம் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார் .. சில நாட்களுக்கு முன்பு, ஒரு தனியார் வங்கி மேலாளர் ராதாவைத் தொடர்புகொண்டு, அவரது பெயரில் கையொப்பமிட்ட ₹46 கோடி மதிப்பிலான 5 செக்குகள் வங்கியில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்..

    அம்பிகா சொத்தை அபகரித்தாரா

    சில நாட்களுக்கு முன்பு, ஒரு தனியார் வங்கி மேலாளர் ராதாவைத் தொடர்புகொண்டு, அவரது கணக்கிலிருந்து ₹46 கோடி மதிப்பிலான 5 செக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அந்தச் செக்குகள் அம்பிகா மற்றும் அவரது தம்பி மல்லிகார்ஜுனன் பெயரில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த ராதா, உடனடியாக கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்..

    Advertisement

    ஏஆர்எஸ் கார்டன் விவகாரம் பரபரப்பாகவே பேசப்படுகிறது.. அந்த காலத்தில் ஏரியாக இருந்த ஒரு நிலத்தை எப்படி பட்டா போட்டுத் தர முடிந்தது? 80-களில் ஏஆர்எஸ் கார்டனின் 40 ஏக்கர் நிலத்தை வாங்கும் அளவுக்கு உண்மையில் அம்பிகா - ராதா சகோதரிகளுக்குச் நிதி சக்தி இருந்ததா? அந்தச் சொத்தை அவர்களுக்கு யார் எழுதி வைத்தது? தவணை முறையில் வாங்கினார்களா? என்றெல்லாம் நதிமூலம், ரிஷிமூலம் கேள்விகளைப் பொதுமக்களே அப்போதிருந்தே எழுப்புகிறார்கள்.

    இப்போது சொந்த அக்கா மீதே ₹46 கோடி ரூபாய் மோசடி புகார் கொடுக்கும்போது, இந்தச் சொத்தின் பின்னணி குறித்த கேள்விகள் எழுவதும் இயல்புதானே?

    Advertisement

    பொதுவெளியில் விவாதம்?

    ராதா தன் மீது புகார் அளிக்கப்போகிறார் என்பதை முன்கூட்டியே உணர்ந்துதான், ஆளுங்கட்சியின் ஆதரவோ அல்லது அரசியல் பின்னணியோ தேவை என்பதற்காகவும், தன் மீது நடவடிக்கை எடுத்து விடக்கூடாது என்பதற்காகவும், கடந்த 10 நாட்களாகத் தொடர்ந்து தவெகவை புகழ்ந்து பேசி வருகிறாரோ என்ற சந்தேகம்தான் பலருக்கும் எழுகிறது.

    உடன்பிறந்த அக்கா-தங்கை இடையே இவ்வளவு பெரிய செக் மோசடி நடந்திருந்தால் அது மிகப்பெரிய கொடுமை, இது குடும்பப் பிரச்சனை என்றாலும், 2 நடிகைகளும் பிரபலமானவர்கள் ஆயிற்றே? மறைந்த முன்னாள் முதலமைச்சரின் பெயரும் இதில் அடிபடுகிறதே? அதனால்தான் இந்த விவகாரம் பொதுவெளியில் பேசப்படுகிறது.. புகழ் வரும்போது ஏற்றுக்கொள்வது போல, சர்ச்சைகள் வரும்போதும் அதைப் பற்றி மக்கள் பேசத்தானே செய்வார்கள்?

    இது உண்மையிலேயே திட்டமிடப்பட்ட செக் மோசடியா அல்லது நீண்டகால சொத்துப் பங்கீட்டுத் தகராறா என்பது காவல் துறையின் தீவிர விசாரணையிலும், அம்பிகா தரப்பு அளிக்கும் விளக்கத்திலும்தான் முழுமையாகத் தெரியவரும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

    English Summary

    ARS Garden 40 Acres.. How Did the Land Get Patta? Radha’s ₹46 Crore Cheques.. Is This Why Ambika Praised Vijay?