அருண் நேருக்கு 3 லக்கி ஜாக்பாட்.. அப்ப உதயநிதியின் நண்பருக்கு? திமுகவில் ஸ்டாலினின் புது அஸ்திரம்

  • சென்னை: திமுகவில் மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, கட்சி அமைப்பை தேர்தலுக்கு ஏற்ப மாற்றியமைக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளன. ஆனால், இதன் பின்னணியில் பல முக்கிய மாவட்டங்களில் சீனியர்களின் அதிகாரம் மறுபங்கீடு செய்யப்படுவதுடன், யாருக்கு எத்தனை தொகுதிகள் என்ற விவகாரமும் பேசுபொருளாகியுள்ளது. கரூர், திண்டுக்கல்லை தொடர்ந்து இப்போது திருச்சியிலும் சலசலப்புகள் கிளம்பி உள்ளன.

    Advertisement

    கரூரில் இதுவரை ஒரே மாவட்ட அமைப்பின் கீழ் இருந்த 4 சட்டமன்றத் தொகுதிகள், இப்போது கரூர் மேற்கு, கரூர் கிழக்கு என 2 மாவட்டங்களாக பிரிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

    Advertisement

    கரூர் செந்தில் பாலாஜி

    இதனால், கரூரை நீண்ட காலமாக தனது அரசியல் தளமாக வைத்திருக்கும் செந்தில் பாலாஜிக்கு அடுத்ததாக என்ன பொறுப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேபோல், அவர் கரூரிலா அல்லது கோவை பகுதியிலா கட்சிப் பொறுப்பை ஏற்க விரும்புகிறார் என்பது குறித்தும் திமுகவுக்குள் ஆலோசனை நடந்ததாக தகவல்கள் கசிந்துள்ளன.

    திண்டுக்கல்லிலும் இதேபோன்ற அதிகார மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரே தலைமையின் கீழ் இருந்த 7 தொகுதிகள், தற்போது 3 புதிய மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் ஒரு மாவட்டமாகவும், திண்டுக்கல், நத்தம் இன்னொரு மாவட்டமாகவும், நிலக்கோட்டை, ஆத்தூர் 3வது மாவட்டமாகவும் பிரிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

    Advertisement

    இதனால், இதுவரை ஒரு குறிப்பிட்ட தலைவரின் கட்டுப்பாட்டில் இருந்த தொகுதிகள் சிதறியிருப்பது உள்ளூர் நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாம்.

    திருச்சி மாவட்டம்

    ஆனால், இந்த மறுசீரமைப்பில் எல்லாவற்றையும் விட அதிகமாக அரசியல் கவனத்தை ஈர்த்திருப்பது திருச்சிதான். காரணம், திருச்சியில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட விதம் நேரடியாக கே.என். நேரு, அன்பில் மகேஷ் ஆகியோரின் அரசியல் அதிகாரத்துடன் தொடர்புபடுத்தி பார்க்கப்படுகிறது. இருவருமே திமுகவில் தவிர்க்க முடியாதவர்களும்கூட,.

    9 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட திருச்சி, இப்போது 4 கட்சி மாவட்டங்களாக பிரிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் 3 தொகுதிகள் வழங்கப்படவுள்ளன. மற்ற மாவட்டங்கள் 2 தொகுதிகளை மையமாகக் கொண்டு அமைக்கப்படுகின்றன. இதுதான் திருச்சி திமுகவில், பயங்கரமான குழப்பத்தை தந்துள்ளதாம்.

    Advertisement

    அருண் நேருவுக்கு 3 தொகுதிகள்

    மறுசீரமைப்புக்கு முன்பு, அன்பில் மகேஷ் கவனித்து வந்த 3 தொகுதிகளில், புதிய அமைப்பில் அவருக்கு 2 தொகுதிகள் மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், கேஎன் நேருவின் சொந்த தொகுதியான திருச்சி மேற்கு அடங்கிய 3 தொகுதிகள் கொண்ட மாவட்டம், அவரது மகன் அருண் நேருவுக்கு செல்லக்கூடும் என்ற பேச்சு எழுந்துள்ளது... அப்படியானால் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டாலும் திருச்சியில் நேருவின் அரசியல் செல்வாக்கு இன்னமும குறையவில்லையா? என்ற முணுமுணுப்புகள் எழுந்துள்ளதாம்.

    அதுமட்டுமல்ல, 2024-ல் நேரடியாகவே அரசியலுக்கு வந்தவர் அருண் நேரு.. அவருக்கு எப்படி எடுத்ததுமே 3 தொகுதிகள் கொண்ட மாவட்டப் பொறுப்பு கிடைக்கலாம்? என்றும் கேள்விகள் அரசல் புரசலாக வலம் வருகிறதாம்.. சுருக்கமாக சொல்லப்போனால், ஒருபக்கம் அன்பில் மகேஷின் நிர்வாக எல்லை குறைந்து, மறுபுறம் நேரு குடும்பத்தின் செல்வாக்கு பெருகுகிறது என்ற பிம்பமும் மலைக்கோட்டையில் விழுந்துள்ளது..

    Advertisement

    ஸ்டாலினின் புது அஸ்திரம்

    ஆனால் திமுக தலைமையோ தெளிவாக உள்ளது.. பெரிய மாவட்டங்களை சிறிய பகுதிகளாக பிரிப்பதன் மூலம் ஒவ்வொரு தொகுதியையும் தனித்தனியாக கண்காணிக்க முடியும் என்பதில் உறுதியாக உள்ளது.

    இதனால், மாவட்ட செயலாளர்கள் தொகுதி அளவிலான தேர்தல் பணிகள், வாக்குச்சாவடி அமைப்பு, கூட்டணி ஒருங்கிணைப்பு உள்ளிட்டவற்றில் கூடுதல் கவனம் செலுத்த முடியும். இதனால் சில சீனியர்களுக்கு இப்போது அதிருப்தி ஏற்பட்டாலும், தேர்தல் நேரத்தில் கட்சி இயந்திரத்தை வேகமாக இயக்குவதற்கும், ஒவ்வொரு தொகுதியிலும் நேரடி கட்டுப்பாட்டை அதிகரிப்பதற்கும் இந்த புதிய அமைப்பு திமுகவுக்கு சாதகமாக அமையும் என்பதுதான் ஸ்டாலினின் மாஸ்டர் பிளான் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

    English Summary

    Arun Nehru’s Lucky “3” Jackpot.. What About Udhayanidhi’s Friend? Stalin’s New Move in DMK