கரூர், பெருந்துறை இடைத்தேர்தல் வெல்வது கஷ்டம்.. விஜய் கைக்கு சென்ற ரிப்போர்ட்.. அதிர்ச்சியில் தவெக!

  • சென்னை: தமிழ்நாட்டில் அடுத்ததாக இடைத்தேர்தல் நடக்கவுள்ள 5 தொகுதிகளில் கரூர் மற்றும் பெருந்துறை தொகுதிகளில் தவெக பின்னடைவை சந்திக்கும் என்று முதல்வர் விஜய் கைகளுக்கு உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளது. இதுதொடர்பாக விரிவாக பார்க்கலாம்.

    Advertisement

    மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற தவெக, உடனடியாக அடுத்த 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது. முதல்வர் விஜய் அதிகாரப்பூர்வமாக பிரச்சாரத்தை தொடங்கவில்லை என்றாலும், கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் நேரடியாக களத்தில் இறங்கி சுவர் விளம்பரங்கள், கட்சியினருக்கு கறி விருந்து என்று அதகளப்படுத்தி வருகின்றனர்.

    Advertisement

    இதனிடையே அடுத்தடுத்து முதல்வர் விஜய் இடைத்தேர்தல் நடக்கும் மாவட்டங்களுக்கு விசிட் அடிக்க திட்டமிட்டுள்ளார். இடைத்தேர்தலே இன்னும் அறிவிக்காத போது விஜய்யின் பயணம் கவனம் பெற்றுள்ளது. அதற்கு இடைத்தேர்தல் நிலவரம் தொடர்பாக உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

    ஏனென்றால் 5 தொகுதிகளில் 2 தொகுதிகள் தவெகவுக்கு மிகப்பெரிய பின்னடைவு இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. பெருந்துறை தொகுதியை பொறுத்தவரை 1 லட்சத்திற்கும் மேலாக கொங்கு வேளாளர் கவுண்டர் சமூக மக்கள் இருக்கின்றனர். தவெகவின் முக்கிய வாக்கு வங்கியான தலித் மற்றும் சிறுபான்மை மக்கள் அங்கு பெரியளவில் இல்லை.

    Advertisement

    கொங்கு வேளாளர் கவுண்டர் சமூக மக்களின் வாக்குகளை திமுக மற்றும் அதிமுக பெரும்பாலும் அறுவடை செய்துவிடும். அந்த சமூகத்தின் நம்பிக்கையை பெறும் அளவிற்கு தவெகவிடம் முக்கிய நபர்களும் இல்லை. இதன் காரணமாகவே விஜய் ஈரோடு மாவட்டத்திற்கு நவம்பர் 3ஆம் தேதி பயணிக்க திட்டமிட்டுள்ளார்.

    அதேபோல் கரூர் தொகுதியை பொறுத்தவரை மீண்டும் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு தான் சீட் என்பது உறுதியாகிவிட்டது. கரூர் சம்பவத்தில் சிறையில் இருந்த மதியழகனுக்கு பதிலாக எம்.ஆர்.விஜயபாஸ்கரை நிறுத்துவதே தவெகவினர் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கும். மதியழகனும் தனது ஆதரவு கூட்டத்தை உருவாக்கி வருகிறார்.

    அதுமட்டுமல்லாமல் செந்தில் பாலாஜியின் தேர்தல் திட்டங்களை சமாளிக்க வேண்டும். கரூரில் செந்தில் பாலாஜிக்கு ஈடு கொடுத்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் பணியாற்றினாலும், அவருக்கு தவெகவின் வாக்குகள் முழுமையாக கிடைக்குமா என்பதும் சந்தேகம் தான். இதனால் கரூர் மற்றும் பெருந்துறை தொகுதிகளில் முதல்வர் விஜய் மீண்டும் முருகை பறிக்கும் காட்சிகள் அரங்கேறலாம் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

    English Summary

    As per Sources Intelligence Report Warns CM Vijay of TVK Backfoot in Karur and Perundurai By Election