உதயநிதி கைதானபோது விஜய் என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா?

  • சென்னை: தமிழக அரசியல் களத்தில் கடந்த 24 மணி நேரமாக நிலவி வந்த பரபரப்பு, செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் உச்சக்கட்டத்தை எட்டியது. தஞ்சாவூர் ஆர்ப்பாட்டத்தில் பேசிய சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பான வழக்கில், எதிர்க்கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினை அவரது நீலாங்கரை இல்லத்தில் வைத்து காவல்துறையினர் முறைப்படி கைது செய்தனர்.

    Advertisement

    அதே நேரத்தில், இந்த அரசியல் சலசலப்புகளுக்கு மத்தியில் சற்றும் கவனம் சிதறாமல், மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகளிலும் மக்கள் நலத் திட்டங்களிலும் விஜய் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

    Advertisement

    காலை 11 மணி நீலாங்கரை காட்சி

    திங்கள்கிழமை தஞ்சாவூர் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசிய உரையைக் கண்டித்து, ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் அடிப்படையில், சிறப்புத் தனிப்படை போலீஸார் சென்னைக்கு விரைந்தனர்.

    செவ்வாய்க்கிழமை காலை முழுவதும் நீலாங்கரையில் உள்ள உதயநிதி வீட்டின் முன் அமைச்சர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் திரண்டிருந்தனர். நீண்டநேர சட்டப் போராட்டங்கள் மற்றும் வாக்குவாதங்களுக்குப் பிறகு, சரியாகக் காலை 11 மணியளவில் துணை ஆணையர் விஜயகுமார் தலைமையிலான காவல்துறை அதிகாரிகள் உதயநிதி ஸ்டாலினை கைது செய்து, காவல் வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

    Advertisement

    எதுவுமே பேசாத ஒரு விஷயத்திற்காக என்னை கைது செய்கிறார்கள். மக்கள் சந்திக்கும் உண்மைப் பிரச்சனைகளில் இருந்து கவனத்தைத் திருப்பவே இந்த நாடகம் அரங்கேறுகிறது. அரசில் இருப்பவர்கள் எல்லோரும் 'ரீல்ஸ்' உலகத்தில் வாழ்கிறார்கள். இந்த கைது நடவடிக்கை ஒரு செம காமெடி என்று காவல் வாகனத்தில் ஏறும் முன் உதயநிதி ஸ்டாலின் கடுமையான கண்டங்களை வெளியிட்டார்.

    நகராட்சி நிர்வாகத் துறை திட்டங்களைத் திறந்து வைத்த விஜய்

    ஒருபுறம் தலைநகரில் எதிர்க்கட்சித் தலைவரின் கைது நடவடிக்கை அரசியல் புயலைக் கிளப்பிய நிலையில், மறுபுறம் ஜோசப் விஜய் தனது தினசரி அரசுப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார்.

    Advertisement

    தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மாநிலம் முழுவதும் பல நூறு கோடி மதிப்பில் நிறைவுற்ற பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் காணொலி வாயிலாகத் திறந்து வைத்தார்.

    திறந்து வைக்கப்பட்ட முக்கிய திட்டங்கள்:

    24x7 குடிநீர் திட்டங்கள்

    பெருநகரக் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் தடையற்ற குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யும் புதிய சுத்திகரிப்பு நிலையங்கள்.

    பாதாள சாக்கடைத் திட்டங்கள்

    நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சுகாதாரத்தை மேம்படுத்தும் கழிவுநீர் சுத்திகரிப்பு வசதிகள்.

    நவீன பேருந்து நிலையங்கள் & வணிக வளாகங்கள்

    Advertisement

    சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மேம்படுத்தப்பட்ட பேருந்து முனையங்கள் மற்றும் பொது வணிக வளாகங்கள் தொடர்பான திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    உதயநிதி பேச்சு விமர்சனம்

    எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் நேற்றைய பேச்சு பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. தஞ்சாவூரில் காவிரி உரிமை தொடர்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், உதயநிதி ஸ்டாலின் பேசிய சில கருத்துகள் எல்லை தாண்டியதாகவும், கண்ணியமற்ற முறையில் அமைந்ததாகவும் புகார்கள் வைக்கப்படுகின்றன.

    உதயநிதி பெண்களை அவமதித்து விட்டதாக கூறி, தமிழக வெற்றி கழகம் மாநிலம் தழுவிய அளவில் தீவிரப் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. உதயநிதியின் பேச்சில் சில விஷயங்கள் நாகரிகமற்றது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், தவெக தற்போது கையிலெடுத்துள்ள இந்தப் போராட்ட முறை பல்வேறு கேள்விகளையும் விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது.

    English Summary

    As Police Detain Udhayanidhi Stalin, CM Joseph Vijay Focuses on Municipal Project