2 நாட்களுக்கு பிறகு கூடியது சட்டமன்றம்.. 4 துறைகளுக்கு மானிய கோரிக்கை.. வெளியான முக்கிய அறிவிப்பு

  • சென்னை: சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை நடைபெற்று வருகிறது. தவெக, திமுக உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்று வருகிறது. இருவரும் பரஸ்பரம் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்கள். 2 நாள் விடுமுறைக்கு பிறகு சட்டமன்றம் மீண்டும் கூடியது. மாற்றுத்திறனாளிகள், மதுவிலக்கு, சமூகநலன், வேளாண்துறை ஆ ஆகிய 4 துறைகளுக்கான மானிய கோரிக்கை நடைபெற்றது.

    Advertisement

    சட்டமன்ற தேர்தல் முடிவு தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சியை பிடித்து ஆச்சர்யப்படுத்தியுள்ளது. அரை நூற்றாண்டு அரசியல் வரலாற்றை மாற்றி தவெக அரியணையில் அமர்ந்தது. தவெக ஆட்சியமைத்து 4 மாதங்கள் ஆகிறது. தவெக அரசு ஆகஸ்ட் 5 ஆம் தேதி தங்களின் முதலின் பட்ஜெட்டை தாக்கல் செய்தது. 6 ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தனர்.

    Advertisement

    4 துறைகள் மானிய கோரிக்கை

    அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், அமைச்சர்களின் பதில் உரை நடைபெற்றது. கடந்த 17 ஆம் தேதி முதல் மானிய கோரிக்கை நடைபெற்று வருகிறது. திமுக மீது தவகவும், தவெக மீது திமுகவும் கடும் விமர்சனங்களை வைத்து வருகிறார்கள். தவெக அமைச்சர்கள், திமுக முன்னாள் அமைச்சர்கள் இடையே காரசார விவாதம் நடக்கிறது. தினசரி பல துறைகளின் மானிய கோரிக்கை நடைபெறுறது. அதிகபட்சமாக இரவு 7.20 மணி வரை சட்டமன்ற நிகழ்வு நடைபெறுகிறது.

    தற்போதுவரை 32 துறைகளின் மானிய கோரிக்கை முடிந்துள்ளது. சனி, ஞாயிறு விடுமுறைக்கு பிறகு இன்று காலை சட்டமன்றம் மீண்டும் கூடியது. முதலில் கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்படும். அதன்பிறகு மானிய கோரிக்கை நடைபெறும். அதைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மீதான மானிய கோரிக்கை நடைபெற்றது.

    Advertisement

    வினாக்கள் விடைகள் நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்தனர். பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தி தற்போது 44 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். ரூ. 38 இல் இருந்து ரூ. 44 ஆக ஏற்கனவே உயரத்தப்பட்டிருந்த நிலையில், உற்பத்தியாளர்களின் கோரிக்கை ஏற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் விற்று மனம் திருந்தியோருக்கு தரப்படும் மறுவாழ்வு நிதி ரூ. 1 லட்சமாக உயர்த்தப்படும் என்று அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    English Summary

    Tamilnadu assembly session will start today after 2 days leave. 4 important departments issues to be addressed.