சட்டசபை நேரலையில் மாற்றம்.. சபாநாயகர் அறிவிப்பு.. திமுகவினர் குஷி

  • சென்னை: சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை நடைபெற்று வருகிறது. தவெக, திமுக உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்று வருகிறது. இருவரும் பரஸ்பரம் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்கள். தவெக ஆட்சிக்கு வந்த பிறகு சட்டமன்ற நிகழ்வுகளில் லைவ் செய்யப்படுகிறது. அவை குறிப்பில் இருந்து நீக்கிய விஷயங்களும் நேரலையில் வெளியாகிறது என்று திமுகவினர் குற்றம் சாட்டினர். இந்நிலையில் நேரலை முறையில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் அறிவித்துள்ளார்.

    Advertisement

    தேர்தல் முடிவு தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சியை பிடித்து ஆச்சர்யப்படுத்தியுள்ளது. தவெக ஆட்சியமைத்து 4 மாதங்கள் ஆகப்போகிறது. தவெக கடந்த சில வாரங்களுக்கு முன்பு முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தது சட்டசபையில் மானிய கோரிக்கை நடைபெற்று வருகிறது. இதில் தவெக Vs திமுக இடையோன அரசியல் சண்டை தான் அதிகம் உள்ளது.

    Advertisement

    திமுக மீது தவெகவும், தவெக மீது திமுகவும் கடும் விமர்சனங்களை வைத்து வருகிறார்கள். தவெக ஆட்சிக்கு வந்த பிறகு சட்டசசை நிகழ்வுகள் லைவ் செய்யப்படுகிறது. அனைத்து தரப்பு மக்களும் சட்டமன்ற நிகழ்வுகளை உற்று நோக்குகிறார்கள். வாக்குவாதம் முற்றி சில நேரம் திமுக தவெக இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்படுகிறது. தவெக அமைச்சர்கள், திமுக முன்னாள் அமைச்சர்களிடையே தினம் தினம் அரசியல் மோதல் வெடிக்கிறது.

    சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, "அநாகரீக கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக சொல்கிறீர்கள். ஆனால் அதற்குள் நேரலையில் ஒளிபரப்பாகி வைரலாகிவிடுகிறது" என்றார். முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு, "அவை குறிப்பில் இருந்து நீக்கும் வார்த்தைகளில் பத்திரிகைகளில் வெளிவராவிடினும் நேரலையில் வெளியாகி பரவுகிறது. இது பேரவை மாண்பை குறைக்கிறது. இதுகுறித்து ஏற்கனவே உரிமை மீறல் புகார் அளித்திருந்தோம். எனவே அதில் மாற்றம் செய்ய வேண்டும்" என்றார்.

    Advertisement

    அதற்கு சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் பதிலளித்து பேசுகையில், "நீங்கள் சொல்வது ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் அவை குறிப்பில் இருந்து நீக்கப்படும் அம்சங்கள் வெளியே வராமல் நேரலை செய்யப்படுகிறது. அதேபோல தமிழக சட்டமன்றத்திலும் நீக்கப்பட்ட அம்சங்கள் இடம்பெறாமல் நேரலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

    English Summary

    Assembly speaker JCD Prabhakar said, As per request of DMK members we will made change in live telecase of assembly.