அந்த ஜோசியக்காரர் என்னையும் வந்து பார்த்தார்.. போயா என்று விரட்டிவிட்டுட்டேன்! சீமான் பரபர பேச்சு

  • சென்னை: ஜோசியக்காரன் சொல்கிறதை கேட்டு விஜய் நடந்துகொள்கிறார் என விமர்சித்த சீமான் அதே ஜோசியக்காரர் என்னையும் வந்து பார்த்தார்.. நீங்க வந்து என சொன்னதுமே, நான் வந்தா பார்த்துக்கிறேன்.. போயா என விரட்டிவிட்டதாகவும் சீமான் பேசியுள்ளார்.

    Advertisement

    மேலும் "விடுங்கன்னே பேசாமல் நடிக்க வந்துருங்க.. மக்கள் தேடட்டும்" என நடிகர் சிவகார்த்திகேயன் கூறியதாக சீமான் பேசியுள்ளார். அதற்கு நான் மக்கள் அப்படி தேடியிருந்தால் தான் நான் எப்போதே வெற்றி பெற்று இருப்பேனே என பதில் அளித்ததாக சீமான் கூறியுள்ளார். மதுராந்தகத்தில் பரப்புரையில் ஈடுபட்ட சீமான் பேசியதாவது:-

    Advertisement

    ஜோசியக்காரர் என்னையும் வந்து பார்த்தார்

    கடற்கரையை பார்த்த மாதிரி எல்லாம் இருக்கனும் என விஜய் நினைக்கிறார். கடற்கரையில் ஒரு சின்ன நாற்காலியை போட்டு உட்கார வைச்சு விட்டால் முடிஞ்சு போச்சு.. எல்லாம் அந்த ஜோசியக்க்காரர் படுத்துகிற பாடு.. அவர தான் நான் தேடிக்கொண்டு இருக்கிறேன். போட்டேன்னா செட்டில் ஆயிடலாம். அவர் என்னையும் வந்து பார்த்தா. உங்களுக்கு வந்து என்று சொன்னார். நான் வந்தா பார்த்துக்கிறேன்.. போயா என விரட்டி விட்டுவிட்டேன்.

    அதாவது தம்பி உங்க ஜாதகம்னு சொன்னார். இல்லையே.. என்றேன். எழுதவில்லை எனக்கு. எந்த நேரத்தில் பிறந்தேன் என எனக்கே தெரியாது. நவம்பர் 8 ஆம் தேதி தீபாவளி அன்று பிறந்தேன். தீபாவளி அன்னைக்கு நான் வலி வந்தது. மருத்துவமனையில் வைத்து பிறந்துட்டேன். அவ்வளவு தான். நராகாசூரன் இறந்துவிட்டார் என்று நினைக்காதே.. நான் இன்னும் இருக்கேன்..

    Advertisement

    மறுபடியும் சினிமாவுக்கே போறேன்

    என் தம்பி சிவகார்த்திகேயன் என்னிடம் சொன்னார்.. விடுங்கன்னே பேசாமல் நடிக்க வந்துருங்க.. மக்கள் தேடட்டும் என்று சொன்னார். மக்கள் என்றுமே தேட மாட்டார்கள். தேடியிருந்தால்தான் அன்னைக்கே ஜெயிச்சுருப்பேனே.. என்று சொன்னேன்.. போறேன் போ.. நான் மறுபடியும் சினிமாவுக்கே போறேன்.. நான் பேசிட்டு இறங்கி போனால் மாயாண்டி குடும்பத்தில் சூப்பரா நடித்துள்ளார் என்று பேசிட்டு போகிறார்கள்.

    விளங்குமா இந்த நாடு.. நடித்தால்தான் ஓட்டு போடுவார்கள் என்றால் போகிறேன். நடிக்க என்னை விடுங்க.. உனக்காக அழுகுற ஒரு சொட்டு கண்ணீரும் வேஸ்ட்.. அதைப்பற்றி ஏன் பேசிட்டு இருக்கனும்.. மக்களை திட்டுகிறார் என்கிறார். அக்கறையில்தான் திட்டுகிறேன். ஏன் இப்படி கேடு கெட்டு போறீங்க என்று திட்டுகிறேன். 60 ஆண்டுகளாக அவருக்கு போட்டு நாசம் செய்தீர்கள். இப்போ இவருக்கு 6 மாதம் தாங்க முடியல..

    Advertisement

    தங்கம் மோதிரம் திட்டம் எதுக்கு?

    பார்த்தீங்கல்லா எங்க அண்ணன் ஆட்சியை என்று சொன்ன பெண்.. மன்னிச்டுங்க என் கருத்தை திரும்ப பெறுகிறேன்.. என் வீட்டில் கரண்ட் இல்லை என சொல்கிறது. இதைத்தான் நான் சொல்லிட்டு இருந்தேன். அப்போதில் இருந்து.. இலவசமாக பஸ் வரும் முன்பாக நடந்தா போயிட்டு இருந்தீங்க.. விஜய் வந்து சிலிண்டர் கொடுக்கவில்லை என்றால் உங்கள் வீட்டில் அடுப்பு எரிக்கவில்லையா..

    இலவச பஸ்சுக்காக இழக்கிற பணம் 10 ஆயிரம் கோடி. தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. எதுக்கு முதலில் பிறக்கும் எல்லா குழந்தைகளுக்கும் மோதிரம் என்று சொல்லிவிட்டு ஆட்சிக்கு வந்த பிறகு அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு என்று போடுகிறார்கள். ரீல்ஸ் தான் நோ ரூல்ஸ்..

    Advertisement

    நான் ஆட்சி செய்தால்

    750 கோடிக்கு நல்ல மருத்துவ சாதனங்கள், செவிலியர்களுக்குச் சம்பள உயர்வு , பணி நிரந்தரம் செய்து கொடுத்தாலே மருத்துவத்தின் தரம் உயர்ந்துவிடும். நான் வந்தால் அரசு ஊழியர்கள், அமைச்சு பெருமக்கள், எம்.எல்.ஏ, எம்பிக்கள் யாராக இருந்தாலும் அரசு மருத்துவமனையில் படுத்துதான் சிகிச்சை பெற வேண்டும் என்று சட்டம் இயற்றுவேன்.

    மீறி அவர்கள் தனியார் மருத்துவமனைக்கு போனால் ஊதியத்தில் சரி பாதியை துண்டிப்பேன். இந்த ஆட்சி முறைக்கு பெயர்தான் தன்னலமற்ற அன்பான சர்வாதிகார ஆட்சி முறை. விஜய் அதைத்தான் செய்து இருக்க வேண்டும். கருணாநிதி, ஜெயலலிதா செய்வதையே விஜய்யும் செய்கிறார். என்று பேசினார்.

    English Summary

    Astrologer: Seeman recounted that actor Sivakarthikeyan told him, "Just give it up, brother, and come into acting... let the people seek you out." Seeman said he replied that if the people had indeed sought him out in that manner, he would have achieved success long ago.