அடல் பென்ஷன் யோஜனா.. இளம் வயதில் ஜஸ்ட் ரூ.42.. வயதான பிறகு ரூ.5,000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?

  • சென்னை: வயதான காலத்தில் வேலை செய்ய முடியாதபோது, மாதம் ஒரு தொகை ஓய்வூதியமாக கிடைத்தால் குடும்ப செலவுகளை சமாளிக்க உதவியாக இருக்கும். இதற்காகவே மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களில் ஒன்றுதான் அடல் பென்சன் யோஜனா (APY). இதில் இளம் வயதிலேயே சேர்ந்து தொடர்ந்து பணம் செலுத்தினால், 60 வயதுக்கு பிறகு மாதந்தோறும் பென்ஷன் பெற முடியும்... அந்தவகையில், இந்த திட்டத்தின் சில ஸ்பெஷாலிட்டிகளை இங்கே சுருக்கமாக பார்க்கலாம்..!!

    Advertisement

    அடல் பென்ஷன் யோஜனா என்பது, ஓய்வுக்காலத்தில் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை பென்ஷனாகப் பெறுவதற்கு உதவும் மத்திய அரசின் திட்டமாகும்.

    Advertisement

    அடல் பென்ஷன் யோஜனா திட்டம்

    18 முதல் 40 வயது வரை உள்ள இந்திய குடிமக்கள் APY-யில் சேரலாம். வங்கி அல்லது அஞ்சல் அலுவலக சேமிப்புக் கணக்கு இருக்க வேண்டும். ஆனால், 1 அக்டோபர் 2022 முதல் வருமான வரி செலுத்துபவர்கள் புதிதாக இந்தத் திட்டத்தில் சேர முடியாது. இதில் 60 வயதுக்குப் பிறகு மாதம் ரூ.1000 முதல் ரூ.5000 வரை உத்தரவாத குறைந்தபட்ச ஓய்வூதியத்தைத் தேர்வு செய்யலாம்.

    நீங்கள் எந்த வயதில் சேர்கிறீர்கள், எவ்வளவு பென்ஷன் வேண்டும் என்பதைப் பொறுத்து செலுத்த வேண்டிய தொகை மாறும்.. உதாரணமாக 18 வயதில் சேர்ந்து ரூ.5000 மாத ஓய்வூதியம் தேர்வு செய்தால் மாதம் சுமார் ரூ.210 செலுத்த வேண்டும். அதே ரூ.5,000 பென்ஷனுக்கு 40 வயதில் சேர்ந்தால் சுமார் ரூ.1454 செலுத்த வேண்டும். ரூ.1000 பென்ஷனுக்கு 18 வயதில் மாதம் ஜஸ்ட் ரூ.42 செலுத்தினால் போதும்.

    Advertisement

    வங்கி கணக்கிலிருந்து ஆட்டோ டெபிட்

    மாதந்தோறும் மட்டுமல்லாமல் 3 மாதங்களுக்கு ஒருமுறை அல்லது 6 மாதங்களுக்கு ஒருமுறையும் நீங்கள் பணம் கட்டலாம்.. வங்கி கணக்கிலிருந்து ஆட்டோ டெபிட் (Auto Debit) மூலமாகவும் பணம் செலுத்தும் வசதி உள்ளதே, இந்த திட்டத்தின் ஹைலைட்டாகும்.

    அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் தனியாக ஒரு குறிப்பிட்ட வட்டி விகிதம் கிடையாது. இந்தத் திட்டத்தின் முக்கிய பலன், 60 வயதுக்கு பிறகு தேர்வு செய்த தொகைக்கு ஏற்ப உத்தரவாத குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் கிடைப்பதுதான்.. அதாவது, வயதான காலத்தில் மாதந்தோறும் ஒரு தொகை கிடைப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கம்.

    Advertisement

    சந்தாதாரர் இறந்து விட்டால்?

    ஒருவேளை 60 வயதுக்குப் பிறகு சந்தாதாரர் இறந்து விட்டால், அவரது வாழ்க்கைத் துணைக்கு அதே மாதாந்திர ஓய்வூதியம் தொடர்ந்து கிடைக்கும். கணவன், மனைவி இருவரும் இறந்த பிறகு, திட்டத்தில் உள்ள சேமிக்கப்பட்ட தொகை நாமினிக்கு வழங்கப்படும்.

    சந்தாதாரர் 60 வயதுக்கு முன்பே இறந்துவிட்டால், அவரது மனைவிக்கு தொடர்ந்து பங்களிப்பு செய்து, சந்தாதாரர் 60 வயதை அடைந்த பிறகு பென்ஷன் பெறலாம். அல்லது விதிகளின்படி சேர்க்கப்பட்ட சேமிப்பு தொகையைப் பெறும் வாய்ப்பும் உள்ளது.

    அப்படியானால் 60 வயதுக்கு முன்பே பணம் எடுக்க முடியுமா? என்ற சந்தேகம்.. குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு திட்டத்தில் இருந்து வெளியேறும் வசதியும் உள்ளது.

    Advertisement

    APY ஸ்பெஷாலிட்டீஸ்

    அதேபோல, இந்த திட்டத்தை விட்டு வெளியேறும் வசதியும் உள்ளது. அப்போது சந்தாதாரர் செலுத்திய தொகை மற்றும் அதில் கிடைத்த வருமானம், விதிகளின்படி கணக்கு பராமரிப்புக் கட்டணங்களை கழித்த பிறகு திரும்ப வழங்கப்படும். அரசின் பங்களிப்பு ஏற்கனவே கிடைத்திருந்தால், அந்தத் தொகையும் அதில் கிடைத்த வருமானமும் திரும்ப கிடைக்காது.

    2026-ல் மத்திய அரசு இந்த அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தை 2030-31 வரை தொடர ஒப்புதல் அளித்துள்ளது. அதனால் ஓய்வுக்காலத்தில் மாதம் ஒரு தொகை உறுதியாக வர வேண்டும் என்று நினைப்பவர்கள், தங்கள் வயது மற்றும் வருமான நிலைக்கு ஏற்ப இந்தத் திட்டத்தை பரிசீலிக்கலாம்...!!!

    English Summary

    Atal Pension Yojana.. Pay Just Rs 42 at a Young Age, Get Rs 5,000 Pension After 60.. Who Can Benefit?