சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!

  • சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் பச்சையப்பன் கல்லூரி அருகே உள்ள சிட்டி யூனியன் வங்கி ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. ஏடிஎம் இயந்திரத்தை சேதப்படுத்தி பணத்தை கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர், அலாரம் ஒலித்ததும் அங்கிருந்து தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கீழ்ப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபரை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    Advertisement

    இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள கீழ்ப்பாக்கம் போலீசார், தப்பியோடிய மர்மநபரை தீவிரமாக தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் வங்கி ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி நடைபெற்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    An attempted robbery took place at the City Union Bank ATM located near Pachaiyappa's College in Kilpauk, Chennai. Reports indicate that an unidentified individual, who attempted to rob the cash by damaging the ATM machine, fled the scene after the alarm was triggered.