மதுக்கடைக்கு எதிராக போராடியவரை கஞ்சா வழக்கில் சிக்க வைக்க முயற்சி.. அறப்போர் இயக்கம் கண்டனம்

  • சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோளப்பட்டியில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடையில் தனியார் பார் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இங்கு டாஸ்மாக் கடைக்கு எதிராக ராஜ்குமார் என்பவர் போராடி வந்தார். அவர் பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். அவரை போதைப்பொருள் வழக்கில் சிக்க வைக்க பார் ஊழியர்களும், போலீசாரும் இணைந்துசெயல்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதை செய்த காவல்துறை அதிகாரிகள் மீது உடனடியாக கஞ்சா கடத்தல் வழக்கு போட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று அறப்போர் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

    Advertisement

    டாஸ்மாக் கடை மற்றும் பாருக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வந்த ராஜ்குமார் என்ற இளைஞரை கைது செய்தவற்காக அவரது கடையில் போதைப்பொருளை சிலர் மறைத்து வைத்துள்ளார். அதன்பின்னால் சிறிது நேரத்தில் மப்டியில் வந்த மதுவிலக்கு போலீசார், அவரது கடையில் கைப்பற்றி உள்ளனர். இதனால் அவரை கைது செய்ய போலீசார் முயன்றுள்ளனர். ஆனால் சிசிடிவி காட்சியால் உண்மைகள் அம்பலமானது.

    Advertisement

    இந்த விவகாரம் பெரும் விவாதத்தையும், மக்களிடையே கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அறப்போர் இயக்கம், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில்,"இதை செய்த காவல்துறை அதிகாரிகள் மீது உடனடியாக கஞ்சா கடத்தல் வழக்கு போட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும்! CCTV இருந்ததால் இங்கே மளிகை கடை வைத்திருப்பவர் தப்பித்தார். இல்லை என்றால் என்ன ஆகி இருக்கும். பல ஆண்டு காலம் சிறையில் இருந்திருக்க வேண்டும்.

    சிவகங்கையில் டாஸ்மாக் பாருக்கு எதிராக போராடியவரை சிக்க வைக்க மாஸ்டர் பிளான்.. சிக்கி கொண்ட போலீஸ்?
    Advertisement

    சிறையில் இருக்கும் கைதிகளில் எத்தனை பேர் உண்மையான கஞ்சா வழக்கில் இருக்கின்றனர் என்றும் எத்தனை பேர் இதுபோன்று பொய்யான வழக்கில் உள்ளே தள்ளப்பட்டு இருக்கின்றனர் என்றும் இந்த சம்பவம் கேள்வி எழுப்புகிறது.

    அப்படி அந்த காவல்துறை அதிகாரி மீது கஞ்சா கடத்தல் வழக்கு போட்டு சிறையில் அடைக்காவிட்டால் மேலும் பல காவல் துறை அதிகாரிகள் இதைத்தொடர்ந்து செய்து கொண்டே இருப்பார்கள். இது போன்ற சம்பவங்கள் காவல்துறையின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை அதீதமாக குறைக்கும்.

    அன்பில் மகேஷ் சவால் விடுத்த வீடியோ.. கார் டிரைவர் சரவணன் எங்கே.. தீவிரமாக தேடும் போலீஸ்
    Advertisement

    அவரை டிரான்ஸ்ஃபர் அல்லது பணியிடை நீக்கம் மட்டும் செய்வது என்பது காவல்துறை அதிகாரிகள் கஞ்சா கடத்துவது அவ்வளவு பெரிய பிரச்சனை இல்லை என்றும் சகஜமாக காவல்துறையில் செய்யும் ஒன்றே என்பதை தான் குறிக்கும். அவரை சிறையில் அடைப்பதன் மூலம் மற்ற காவல் துறை அதிகாரிகளுக்கு அது ஒரு முக்கியமான செய்தியாகவும் இருக்கும். மக்களுக்கும் காவல்துறை அதிகாரி தவறு செய்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை வர துவங்கும்.

    மேலும் டாஸ்மாக் பார் நபரிடம் அந்த காவல்துறை அதிகாரி வாங்கிய லஞ்சத்தை பற்றியும் வழக்கு விசாரணை செய்ய வேண்டும். அனைத்தையும் விட மன உளைச்சலுக்கு ஆளான பாதிக்கப்பட்ட நபருக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அந்தக் காவல் அதிகாரியை கஞ்சா கடத்தல் வழக்கில் சிறையில் அடைப்பது தான் குறைந்தபட்ச பொறுப்புடைமையாகும்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    English Summary

    In Sivagangai, allegations have emerged that bar staff and police officers colluded to frame an individual—who had been campaigning against alcohol—in a drug-related case. The organization 'Arappor Iyakkam' has demanded that the police officers involved in this act be immediately charged with cannabis trafficking and imprisoned.