தவெக ஆட்சியை கவிழ்க்க மேலும் ஒரு எம்.எல்.ஏவிடம் நடந்த பேரம்? - கைதான நபர் அதிர்ச்சி வாக்குமூலம்!

  • சென்னை: விஜய் தலைமையிலான தவெக ஆட்​சி​யை கவிழ்க்க மேலும் ஒரு எம்​எல்​ஏவை இழுக்க முயற்சி நடை​பெற்​ற​தாக பரபரப்பு தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. கைதான நபர் அளித்த வாக்குமூலத்தில் உசிலம்பட்டி தவெக எம்.எல்.ஏவிடம் பேரம் நடத்தப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    கிருஷ்ணகிரி மாவட்​டம் ஊத்​தங்​கரை தொகுதி தவெக எம்​எல்ஏ இளை​ய​ராஜாவிடம், தவெக ஆட்​சி​யைக் கவிழ்க்க ஒத்​துழைக்க ரூ.35 கோடி வரை பேரம் பேசப்​பட்​ட​தாக அவர் அளித்த புகாரின் பேரில், சென்னை திரு​வல்​லிக்கேணி போலீ​சார் வழக்குப்பதிவு செய்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

    Advertisement

    இந்த வழக்​கில் முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி​யின் ஆதர​வாளர்​கள் எனக் கூறப்படும் நபர்கள் உள்ளிட்ட 11 பேர் ஏற்​கெனவே கைது செய்​யப்​பட்​டிருந்த நிலை​யில், மதுரை மாவட்​டம் உசிலம்​பட்​டியைச் சேர்ந்த கணேசன் (41) 12வது நபராக கைது செய்​யப்​பட்டுள்ளார்.

    விசா​ரணை​யில், சபாநாயகர் தொடர்​பான நம்பிக்கையில்லா தீர்​மானத்​தின்​போது, உசிலம்​பட்டி தொகு​தி​யைச் சேர்ந்த தவெக எம்​எல்​ஏவை தவெகவுக்கு எதி​ராக வாக்​களிக்க வைக்க, அவருக்கு நெருக்​க​மான நபர் மூலம் பேரம் பேச முயற்சி நடை​பெற்​ற​தாக கணேசன் வாக்​குமூலம் அளித்​த​தாக போலீ​சார் தெரி​வித்​துள்ளனர்.

    உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி தவெக எம்.எல்.ஏவிடம் கணேசன் மூலம் திருநாவுக்கரசு பேரம் பேச முயற்சித்ததாகவும் அப்போது ரெக்கார்ட் செய்யப்பட்ட ஆடியோ ஆதாரத்தை போலீசிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தவெகவில் இணைய விரும்புவதாக அறிமுகம் செய்துகொண்டு, மதுரையில் வைத்து அந்த எம்.எல்.ஏவை கணேசன் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    ஒவ்வொரு எம்.எல்.ஏவிற்கும் 35 கோடி முதல் 50 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. ஆடியோ ஆதாரத்தின் அடிப்படையில் கணேசனை கைது செய்து நீதி​மன்​றக் காவலில் அடைத்துள்ள போலீசார், இந்த விவகாரத்தில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் இந்த பேரம் நடைபெற்றதாக கைது செய்யப்பட்ட சிலர் கூறியதாக தகவல் வெளியானது. இதையடுத்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    Advertisement

    இதற்​கிடையே, முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி மற்​றும் அவரது சகோதரர் அசோக் குமாருக்கு சென்னை உயர் நீதி​மன்​றம் நிபந்​தனை முன்​ஜாமீன் வழங்​கி​ய நிலை​யில், செந்​தில் பாலாஜி திரு​வல்​லிக்​கேணி காவல் துணை ஆணை​யருக்கு கடிதம் ஒன்றை அனுப்​பி​யிருந்​தார்.

    அதில், தவெக எம்​எல்​ஏ​விடம் பேரம் பேசி​ய​தாக பதி​யப்​பட்ட வழக்​கில் என் பெயரும், சகோ​தரர் பெயரும் இல்​லை. அப்​படி இருக்​கை​யில் எங்​களுக்கு சம்​மன் அனுப்​பப்​பட்​டது ஏன்? இதற்கு விளக்​கம் அளிக்க வேண்​டும் எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு சட்டரீதியாக பதில் அளிப்​பது குறித்து போலீ​சார் ஆலோ​சித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    English Summary

    Sensational reports have emerged indicating an attempt to poach another MLA in order to topple the TVK government led by Vijay. A statement given by an arrested individual has revealed the shocking detail that negotiations were held with the TVK MLA from Usilampatti.