சென்னை: சென்னை சோழிங்கநல்லூர் அருகே தனிநபர் இடத்தை ஆட்களை வைத்து மிரட்டி கோவில் நிர்வாகி அபகரிக்க முயல்வதாக தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தில் வயதான தம்பதியினர் புகார் அளித்துள்ளனர். எங்கள் உயிருக்கும் உடலுக்கும் பாதுகாப்பு அளிக்குமாறும், கோவில் நிர்வாகி மற்றும் அவரது ஆட்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு வயதான தம்பதியினர் தாம்பரம் மாநகர கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
சென்னை சோழிங்கநல்லூர் கருணாநிதி சாலையில் உள்ள பிரபல பிரத்தியங்கரா கோவில் அருகே,3500 சதுர அடி நிலத்தை அபகரிக்க முயல்வதாகவும், தங்களுக்கு மிரட்டல் விடுப்பதாகவும் கூறி முதிய தம்பதியர் தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட ஜெயலட்சுமி - வேணுகோபால் தம்பதியினர், சோழிங்கநல்லூர் கருணாநிதி சாலை பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு சொந்தமாக வீட்டு மனை வாங்கியிருக்கிறார்கள். தற்போது அந்த இடத்தில் உரிய அனுமதி பெற்று வீடு கட்டும் பணியைத் தொடங்கி உள்ளார்கள். வீடு கட்டும் பணி நடைபெற்று வரும் நிலையில், அருகில் உள்ள பிரத்தியங்கரா கோவில் நிர்வாகியான 'பிரத்தியங்கரா சாமி' என்பவர் போலி பட்டா ஆவணங்களைத் தயாரித்து, அந்த இடம் தனக்கு சொந்தமானது எனக் கூறி தம்பதியினருக்கு இடையூறு விளைவித்து மிரட்டல் விடுத்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தான் மேடவாக்கத்தின் உண்மையான நிலை.. சென்னைக்கு பக்கத்தில் இருந்தும் மோசமான நிலை பொதுவாக இதுபோன்ற சூழலில் நிலத்தின் பட்டா மற்றும் பத்திரம் யார் பெயரில் உள்ளது. அந்த நிலத்தில் ஏதுவும் வில்லங்கம் உள்ளதா, சொத்து பிரச்சனை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதா என்பதை பார்ப்பார்கள். நீதிமன்றத்தில் இருந்தால், நீதிமன்றத்தில் பார்த்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துவார்கள். அதேநேரம் ஆட்களை வைத்து மிரட்டி பறிக்க முயன்றது தெரியவந்தால், போலீசார் கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள். மிரட்டியவர்களை கைது செய்வதுடன் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையிலடைப்பார்கள்.
ஏற்கெனவே சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல நிலப் பிரச்சினை எழுந்தபோது, தம்பதியினர் நீதிமன்றத்தை அணுகி சட்டப் போராட்டம் நடத்தி, அந்த இடம் தங்களுக்குச் சொந்தமானது என்பதற்கான சாதகமான தீர்ப்பைப் பெற்று இடத்தை மீட்டெடுத்தார்களாம்.
நீதிமன்றத் தீர்ப்பு இருந்தபோதிலும் கோவில் நிர்வாகி தொடர்ந்து ஆட்களை வைத்து மிரட்டி வருவதால், தங்களின் உயிர் மற்றும் உடமைக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும், ஆக்கிரமிப்பில் ஈடுபடும் கோவில் நிர்வாகி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தாம்பரம் காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளனர். மனுவைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர், புகாரின் உண்மைத்தன்மை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.