சென்னை: தாழ்வழுத்த மின் கட்டணங்களை 'இ-நாச்' பதிவு மூலம் செலுத்தும் வசதியை பெற, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இணையதளத்தில் ஒருமுறை 'இ-நாச்' பதிவை மேற்கொள்ள வேண்டும். பதிவு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட பின்னர், மின் கட்டணங்களை பாதுகாப்பாகவும், வசதியாகவும், உரிய காலத்துக்குள் செலுத்துவதற்காக தாழ்வழுத்த மின் கட்டண தொகை மின் கட்டண தேதியில் இருந்து 10-வது நாள் பதிவு செய்யப்பட்ட நுகர்வோரின் வங்கி கணக்கில் இருந்து தானாகவே பிடித்தம் செய்யப்படும் என்று மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் கூறினார்.
சட்டப்பேரவையில் நேற்று மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் மின்துறை சார்பில் 17 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் மிக முக்கியமான தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தால் 2026-27 ஆம் ஆண்டில் 50,000 புதிய விவசாயம் மின் இணைப்புகள் வழங்கப்படும். நுகர்வோர் தங்களது புகார்களை பதிவு செய்யவும், அவற்றின் நிலையை தொடர்ந்து கண்காணிக்கவும் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் வாட்ஸ் அப்பில் தானாகவே பதில் அளிக்கும் மென்பொருள் வசதி உருவாக்கப்படும் போன்ற அறிவிப்புகளை வெளியிட்டார்.
சட்டசபையில் மின்சாரத்துறை மானியக் கோரிக்கையில் 17 அறிவிப்புகளை அமைச்சர் நிர்மல்குமார் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:- 2026-27-ம் ஆண்டில் 50 ஆயிரம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும். தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் 2,558 காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆரம்ப நிலை பணிகளை உடனடியாக மேற்கொள்ளும் பொருட்டு 10 ஆயிரம் பணியாளர்களை (5 ஆயிரம் திறன் சார்ந்த மற்றும் 5 ஆயிரம் திறன் சாராத) 5 வருடங்களுக்கு ஒப்பந்த முறையில் பணியமர்த்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னையில் உள்ள 20 துணை மின் நிலையங்களுக்கு கூடுதல் மின்னூட்டி ரூ.104 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தில் உள்ள மிக உயர்அழுத்த துணை மின் நிலையங்களில் மின்மாற்றிகளின் திறன் ரூ.110.76 கோடி மதிப்பீட்டில் உயர்த்தப்படும். தமிழகம் முழுவதும் 46 துணை மின் நிலையங்களில் ரூ.129.41 கோடியில் மின்மாற்றிகளின் திறன் உயர்த்தப்படும். மிக உயர்அழுத்த துணை மின் நிலையங்களுக்கான தகவல் தொடர்பு சாதனங்கள் ரூ.120.32 கோடியில் கொள்முதல் செய்யப்படும். சென்னையில் 1,250 இடங்களில் உள்ள பகிர்மான மின்மாற்றி ரூ.250 கோடி மதிப்பீட்டில் வளைய சுற்றுத்தர அமைப்புகளாக மாற்றப்படும். 400 கிலோ வாட் வரையிலான மின்னழுத்த அளவுகளை கையாளும் திறன் கொண்ட அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய உள்ளமைக்கப்பட்ட புதைவடப்பழுது கண்டறியும் கருவி பொருத்தப்பட்ட ஒரு சிறப்பு வாகனம் ரூ.17 கோடியில் கொள்முதல் செய்யப்படும். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பயன்பாட்டுக்கென ஒருங்கிணைந்த தரவு சேகரிப்பகம், நிறுவன தரவு களஞ்சியம் மற்றும் மேம்பட்ட பகுப்பாய்வு கருவிகள் ஆகியவை ரூ.25 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும். தாழ்வழுத்த மின் கட்டணங்களை 'இ-நாச்' பதிவு மூலம் செலுத்தும் வசதியை பெற, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இணையதளத்தில் ஒருமுறை 'இ-நாச்' பதிவை மேற்கொள்ள வேண்டும். பதிவு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட பின்னர், மின் கட்டணங்களை பாதுகாப்பாகவும், வசதியாகவும், உரிய காலத்துக்குள் செலுத்துவதற்காக தாழ்வழுத்த மின் கட்டண தொகை மின் கட்டண தேதியில் இருந்து 10-வது நாள் பதிவு செய்யப்பட்ட நுகர்வோரின் வங்கி கணக்கில் இருந்து தானாகவே பிடித்தம் செய்யப்படும். நுகர்வோர் தங்களது புகார்களை பதிவு செய்யவும், அவற்றின் நிலையை தொடர்ந்து கண்காணிக்கவும் கூடுதல் வழிவகை ஏற்படுத்தும் பொருட்டு ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் வாட்ஸ்அப்பில் தானாகவே பதிலளிக்கும் ஒரு மென்பொருள் வசதியை உருவாக்கி நுகர்வோர் புகார் மேலாண்மை அமைப்புடன் ஒருங்கிணைக்கப்படும்." மேற்கண்ட அறிவிப்புகளை அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்டார்.