சந்தின் (ட்விட்டர்) கண்ணில் பட்டவர்கள்... நல்லா வாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை! தூக்கிய ஆவடி போலீஸ்!

  • சென்னை: ஆன்லைன் டிரேடிங்கில் அதிக லாபம் ஈட்டியதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று அண்மையில் பரவியது. அதில் பல லட்சம் வருமானம் வந்ததாகப் பலரும் கூறினார்கள். இது மிகப்பெரிய மோசடி என்று அப்போதே சமூக வலைதளங்களில் பலர் எச்சரித்தனர். குறிப்பாக, ட்விட்டரில் அது தொடர்பான விவாதங்கள் அதிகமானது. இந்நிலையில், ஆன்லைன் டிரேடிங்கில் அதிக லாபம் பார்ப்பதாக வீடியோ வெளியிட்டு, அதற்குப் பயிற்சி அளிப்பதாகக் கூறி சுமார் 40 பேரிடம் தலா ரூ.40,000 வசூலித்து மோசடி செய்த புகாரில் 3 பேரை ஆவடி சைபர் கிரைம் போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.

    Advertisement

    ட்விட்டர் தளமான எக்ஸ் தளத்தில் யாராவது ஒருவர் தவறான செயல்களைச் செய்து வீடியோவில் சிக்கினால், அவர்கள் நன்றாகவே வாழ முடியாது. மக்களை ஏமாற்றி நன்றாக வாழ்பவர்கள் யாராக இருந்தாலும், ட்விட்டரில் உள்ளவர்களின் கண்ணில் பட்டால், முட்டுச் சந்தில் மாட்டியவர்கள் போலத்தான் சிக்கிக்கொள்வார்கள். இன்ஸ்டாவைப் போல் ட்விட்டரில் ஏமாற்றிவிட முடியாது. இன்ஸ்டாவில் மக்களை ஏமாற்றி ஜாலியாகச் சம்பாதித்த பலரை, ட்விட்டர்வாசிகள் காலி செய்திருக்கிறார்கள். அப்படித்தான் ஒரு கும்பலை அண்மையில் எக்ஸ் தளம் போட்டுப் பிளந்தது. என்னடா இது.. ஓவராகப் போகிறதே என்று போலீசாருமே அதை ஆய்வு செய்ததில் மோசடிக் கும்பல் என்பது உறுதியானது. போலீசார் இடத்தைத் தேடிக் கண்டுபிடித்துத் தூக்கிவிட்டனர்.

    Advertisement

    ஆம்.. ஆன்லைன் டிரேடிங்கில் அதிக லாபம் ஈட்டியதாக சமூக வலைதளங்களில் போலியான வீடியோக்களை வெளியிட்டு, சுமார் 40 பேரிடம் தலா ரூ.40,000 வசூலித்து, சுமார் ரூ.6 கோடி வரை பண மோசடி செய்த 3 பேரை ஆவடி சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய கல்லூரி நண்பர்களான கவின் பிரசாத், கீர்த்திவாசன் மற்றும் பார்த்திபன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

    கோவை பாரதியார் பல்கலையின் 196 ஏக்கர் நிலம் அரசுக்கு மாற்ற முன்மொழிவு.. மீண்டும் டிஎன் டெக் சிட்டி?
    Advertisement

    இவர்கள் மூவரும் 'இன்ஸ்டா' சமூக வலைதளத்தில் 40 ஆயிரம் ரூபாய் கட்டணத்தில், 'டிரேடிங்' குறித்துக் கற்றுத் தருவதாக விளம்பரம் செய்துள்ளனர். பேட்ச் ஒன்றிற்கு 40 முதல் 50 பேரைச் சேர்த்து, கோவளம், முட்டுக்காடு, கொடைக்கானல், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ரிசார்ட்டை மொத்தமாக ஏழு நாட்கள் வாடகைக்கு எடுத்து, ஒரு அறைக்கு 10 பேர் வீதம் தங்க வைத்து ஆன்லைன் டிரேடிங் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள்.

    தீபாவளி சிறப்பு ரயில்கள்.. திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், மதுரைக்கு குட்நியூஸ்

    இவர்கள் செய்தது இரண்டு தவறுகள். போலியாக அதிகமான லாபம் வரும் என்று கவர்ச்சி வாக்குறுதி அளித்தது முதல் தவறு. இரண்டாவது தவறு, கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்வதற்காக, சட்டவிரோதமான பணப் பரிமாற்ற வழியைப் பயன்படுத்தியதாகப் புகார் எழுந்துள்ளது . இந்த இரண்டு தவறுகளின் மூலம் சட்டவிரோதமாக முதலீடு செய்ய வைத்து கோடிகளில் சம்பாதித்துள்ளனர். மேலும், பயிற்சி எடுக்க வந்த மாணவர்களை அதிக லாபம் அடைந்தது போல் நடிக்க வைத்து வீடியோ எடுத்து மோசடிகளில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இது குறித்து விசாரித்த ஆவடி போலீசார் மூவரையும் கைது செய்தனர். இந்தச் சம்பவத்தைப் போட்டு, பழையபடி ட்விட்டர் சமூகம் அவர்களைப் புரட்டி எடுத்து வருகிறது.

    English Summary

    Three arrested by Avadi police on charges of defrauding 40 people by collecting ₹40,000 from each in Thiruverkadu