ஒரே ஏரியாவில் 53 கிலோ கஞ்சா பறிமுதல்! ஆடிப்போன சென்னை மக்கள்.. 100 போலீஸ் கொண்ட 30 டீம்!

  • தமிழ்நாட்டில் போதை மற்றும் குடி பழக்கத்திற்கு இளைஞர்கள் அடிமையாகுவதை முழுமையாக தடுக்க வேண்டும் என விஜய் தலைமையிலான அரசு இலக்கு கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் சென்னையில் முக்கிய பகுதியாக இருக்கும் ஆவடி பகுதியில் காவல் துறை மிகப்பெரிய அளவிலான சோதனையை செய்தது.

    Advertisement

    ஆவடி காவல் பகுதியில் கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனையை தடுக்கும் நோக்கில் ஒரு வார கால சிறப்பு சோதனை நடவடிக்கையை காவல் துறை மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையில் 53 கிலோ கஞ்சா, 83 போதை மாத்திரைகள் மற்றும் சிரிஞ்சுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    Advertisement

    இதில் ஈடுபட்ட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை, போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை கட்டுப்படுத்துவதில் பெரும் வெற்றியாக பார்க்கப்படுகிறது.

    அதிரடி ஆக்ஷன் மோட்

    ஆவடி காவல் ஆணையர் பகுதியில் 100 காவலர்கள் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டு, 30 கண்காணிப்பு குழுக்கள் மூலம் தொடர் சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த நடவடிக்கையின் போது 128 முக்கிய இடங்களில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இதில் கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை தொடர்பான தகவல்களின் அடிப்படையில் தீவிர சோதனைகள் நடைபெற்றன.

    இந்த ஒரு வார கால நடவடிக்கையில் மட்டும் 53 கிலோ கஞ்சா, 83 போதை மாத்திரைகள் மற்றும் சிரிஞ்சுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    Advertisement

    16 இளைஞர்கள் கைது

    இந்த நடவடிக்கையில் 25 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதில், பொதுமக்களுக்கு போதைப் பொருள் வழங்கிய 5 வழக்குகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான போதை மாத்திரைகள் வைத்திருந்த 3 வழக்குகள் அடங்கும்.

    மேலும், 17 முதல் 19 வயதுக்கு உட்பட்ட 16 இளைஞர்கள் கஞ்சா பயன்படுத்தியதாக கண்டறியப்பட்டனர். அவர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு, அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

    2006 முதல் இதுவரை 13,131 கிலோ கஞ்சா பறிமுதல்

    ஆவடி காவல் ஆணையர் பகுதியில் 2006 ஆம் ஆண்டு முதல் இதுவரை 13,131 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இந்த சிறப்பு நடவடிக்கை, ஆவடி பகுதியில் போதைப் பொருள் விற்பனையை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்துள்ளது. இதுபோன்ற தொடர் நடவடிக்கைகள், இளைஞர்களை போதைப் பொருள் பழக்கத்திலிருந்து பாதுகாக்க உதவும் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    Avadi Police Commissionerate conducted a special one-week anti-drug operation and seized 53 kg of ganja along with 83 narcotic tablets. A total of 25 people were arrested and 27 cases were registered during the drive across 128 locations in the Avadi area.