ஆவணி அவிட்டத்தில் வீடு, மனை வாங்க போறீங்களா? கண்டிப்பாக ‘இதை’ மறக்க வேண்டாம்.. மிக முக்கிய தகவல்!

  • சென்னை: பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணி மாதத்தில் வரும் ஆவணி அவிட்டம் மற்றும் பௌர்ணமி தினத்தன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள், வரும் 27ஆம் தேதி அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும், அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் என தமிழ்நாடு பத்திர பதிவுத் துறை தலைவர் அறிவித்துள்ளார்.

    Advertisement

    தமிழகத்தைப் பொறுத்தவரை எந்த ஒரு நல்ல காரியமாக இருந்தாலும், அவற்றை முகூர்த்த தினங்களில் செய்வது வழக்கம். அந்த வகையில், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகள் வீடு, நிலம், வாகனம் உள்ளிட்டவற்றை வாங்க நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து மக்கள் வாங்குகின்றனர்.

    Advertisement

    குறிப்பாக அசையா சொத்துக்களான வீடு மற்றும் நிலம் வாங்க சுப முகூர்த்த தினங்களில் மட்டுமே மக்கள் விரும்புகிறார்கள். இதன் காரணமாக பத்திரப்பதிவு அலுவலகங்களில் அதிக அளவில் மக்கள் கூட்டம் அலைமோதி காணப்படும்.

    பத்திரப்பதிவு

    இதனால் பலரும் பத்திரப்பதிவு செய்ய முடியாமல் அவதி அடைந்தனர். இதனை தவிர்க்கும் வகையில் பத்திரப்பதிவு செய்வதற்காக பல சிறப்பு வசதிகளை தமிழக பத்திர பதிவுத்துறை அறிவித்து வருகிறது. கடந்த மாதம் கூட முதல் ஆனி முகூர்த்தத்தில் அதிக அளவு பத்திரப்பதிவு செய்தது. இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் அரசுக்கு கூடுதலாக வருவாய் கிடைத்தது. இந்த நிலையில் தற்போது ஆவணி மாதத்தில் ஆவணி அவிட்டம் மற்றும் பௌர்ணமி தினமான 27.08.2026 அன்று வரவிருக்கும் நிலையில் ஏராளமானோர் பத்திரப் பதிவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    Advertisement

    கூடுதல் முன்பதிவு வில்லைகள்

    இதனால் கூட்ட நெரிசல் மற்றும் மக்கள் ஏமாற்றம் அடைவதை தடுக்க கூடுதலாக டோக்கன்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணி மாதத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ( டோக்கன்கள் ) வழங்கப்படும் என பதிவுத் துறை தலைவர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசின் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில்," பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணி மாதத்தில் வரும் ஆவணி அவிட்டம் மற்றும் பௌர்ணமி தினத்தன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படும்

    Advertisement

    ஆவணி அவிட்டம் 2026

    சுபமுகூர்த்த மற்றும் விசேஷ தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தற்போது ஆவணி மாதத்தில் வரும் ஆவணி அவிட்டம் மற்றும் பௌர்ணமி தினமான 27.08.2026 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

    தட்கல் டோக்கன்

    எனவே, ஆவணி மாதத்தில் ஆவணி அவிட்டம் மற்றும் பௌர்ணமி தினமான 27.08.2026 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும், அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகள் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது" என கூறப்பட்டுள்ளது.

    English Summary

    Tamil Nadu Registration Department will issue additional tokens on August 27 for property registrations during Avani Avittam and Pournami.