அயோத்தி ராமர் கோவில் முதல் CEO-வாக விமானப்படை முன்னாள் அதிகாரி நியமனம்.. யார் இவர்?

  • அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலின் முதல் தலைமை செயல் அதிகாரியாக விமானப்படையில் ஏர் மார்ஷல் ஆக பணியாற்றி ஓய்வு பெற்ற ஜிதேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது மேற்கு பிராந்திய தளபதியாகப் பணியாற்றியவர்.

    Advertisement

    அயோத்தி ராமர் கோவிலில் பக்தர்களின் நன்கொடைகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகார்களை தொடர்ந்து, 3 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. அதில் உண்டியல் காணிக்கை எண்ணும் மையத்தில் இருந்த தற்காலிக ஊழியர்கள், முறைகேடுகளில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    Advertisement

    அயோத்தி நன்கொடை முறைகேடு

    இதுதொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அதேசமயம் இனி முறைகேடுகள் நடக்காமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, புதிய தலைமை செயல் அதிகாரியை நியமிக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. அதற்கான நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டன.

    அயோத்தி ராமர் கோவில் தலைமை செயல் அதிகாரி பதவிக்கு 5,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர். அந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, அதில் இருந்து தகுதியானவர்களாக 16 பேர் அடையாளம் காணப்பட்டனர். அவர்களிடம் முன்னாள் நீதிபதி பிரமோத் கோலி, ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் விஷணுகாந்த் சதுர்வேதி,ஷீரடி சாய்பாபா அறக்கட்டளை முன்னாள் தலைவர் மற்றும் விஞ்ஞானியான சுரேஷ் ஹவாரே ஆகியோர் நேர்காணல் நடத்தினர்.

    Advertisement

    சி.இ.ஓ தேர்வு

    தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனத்தை வழிநடத்தத் தேவையான நிறுவனத் தலைமைத்துவம், நிர்வாக நிபுணத்துவம், நேர்மை மற்றும் தொலைநோக்குப் பார்வை போன்ற அளவுகோல்களின் அடிப்படையில் அவர்கள் மதிப்பீடு செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், அயோத்தி ராமர் கோவிலின் முதல் தலைமை செயல் அதிகாரியாக விமானப்படையில் ஏர் மார்ஷல் ஆக பணியாற்றி ஓய்வு பெற்ற ஜிதேந்திர மிஸ்ரா மிஸ்ரா தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

    மேலும், ராமர் கோவில் அறக்கட்டளையில் மூன்று புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அயோத்தியைச் சேர்ந்த மதன் மோகன் பாண்டே, டெல்லியைச் சேர்ந்த மகேஷ் பக்சந்த்கா மற்றும் ஷிகோஹாபாத்தைச் சேர்ந்த நிர்மலா யாதவ் ஆகியோர் புதிய உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    Advertisement

    யார் இந்த ஜிதேந்திரா மிஸ்ரா?

    விமானப்படையில் 39 ஆண்டு கால அனுபவம் உள்ள ஜிதேந்திரா மிஸ்ரா, போர் விமானத்தை இயக்கிய அனுபவம் உள்ளவர். 1986 ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் இணைந்த அவர், 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

    விமானப்படையில் லெப்டினண்ட், விங் கமாண்டர், குரூப் கேப்டன், ஏர் கமாண்டர், வைஸ் மார்ஷல், ஏர் மார்ஷல் என பல பதவிகளை வகித்தவர் ஜிதேந்திரா மிஸ்ரா. 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மேற்கு வான் கட்டளை பிரிவின் தலைவராக பொறுப்பு ஏற்றார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது மேற்குப் பிராந்தியத் தளபதியாக, இந்த ஆபரேஷனுக்கு தலைமை ஏற்றவர்.

    English Summary

    Air Marshal Jeetendra Mishra (Retired) has been selected as the first chief executive officer of the Ram Temple Trust from a long list of over 5,000 applicants.